Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

திரௌபதி தேவி பாத்திரத்தில் நடிக்கும் நடிகை ரக்ஷனா..

வரலாற்று காவியமாக உருவாகி வரும் ‘திரௌபதி 2’ படத்தில் திரௌபதி தேவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை ரக்ஷனா இந்துசூடனின் கம்பீரமான முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது!*

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகி வரும் ‘திரௌபதி 2’ படத்தில் இருந்து திரௌபதி தேவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரக்ஷனா இந்துசூடனின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி உள்ளது. இயக்குநர் மோகன்.ஜி-யின் கதையில் மிகத்தீவிரமான, ஆழமான மற்றும் உணர்வுப்பூர்வமாக எழுதப்பட்டிருக்கும் இந்த கதாபாத்திரம் ‘திரெளபதி’ ஃபிரான்சைஸில் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும்.

நேதாஜி புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஜி.எம். பிலிம் கார்ப்பரேஷன் இணைந்து சோழ சக்கரவர்த்தி தயாரித்திருக்கும் ‘திரௌபதி 2’ திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘திரௌபதி’ திரைப்படத்தின் நீட்சியாக அதன் வரலாற்று உலகத்தை காட்ட இருக்கிறது. 14 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இந்த திரைப்படம், ஹோய்சால பேரரசர் வீர வள்ளலார் III இன் இரத்தக்கறை படிந்த ஆட்சி, சேந்தமங்கலம் காடவராயர்களின் வீரம், எதிர்ப்பு மற்றும் தமிழ்நாட்டின் முகலாய படையெடுப்பால் உண்டான கொந்தளிப்பு ஆகியவற்றின் பின்னணியில் கதை விரிவடைகிறது. கடந்த காலத்தின் இந்த பிரமாண்டமான மறுகட்டமைப்பில், திரௌபதி தேவியின் முதல் பார்வை போஸ்டர் அறிமுகம், படத்தின் உணர்ச்சிகரமான தருணத்தை இரண்டாம் பாகத்துடன் வலுவாக இணைக்கும் புள்ளியாக மாறுகிறது.

முதல் பார்வை போஸ்டரில் நடிகை ரக்ஷனா இந்துசூடன் கலாச்சார ஆழத்தை வெளிப்படுத்தும் விதமாக கண்ணியத்துடனும் கம்பீரத்துடனும் காட்சியளிக்கிறார். அவரது கதாபாத்திரம் கதைக்களத்தின் வரலாற்று மற்றும் உணர்ச்சி தருணங்களை ஆழமாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு, படத்தின் கருவான பெண் சக்தியை பிரதிபலிக்கிறது.

ரிச்சர்ட் ரிஷி மற்றும் ரக்ஷனா இந்துசூடன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க இவர்களுடன் நடிகர் நட்டி நட்ராஜ் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். ஒய்.ஜி.மகேந்திரன், நாடோடிகள் பரணி, சரவண சுப்பையா, வேல ராமமூர்த்தி, சிராஜ் ஜானி, தினேஷ் லம்பா, கணேஷ் கௌரங், திவி, தேவயாணி ஷர்மா மற்றும் அருணோதயன் ஆகியோரும் இந்த வரலாற்றுக் கதையில் நடித்துள்ளனர்.

போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில், படத்தின் வெளியீட்டை ஒட்டி அதன் புரோமோஷனல் பணிகள் நடைபெறும்.

*நடிகர்கள்:*
ரிச்சர்ட் ரிஷி, ரக்ஷனா இந்துசூடன், நட்டி நட்ராஜ், ஒய்.ஜி.மகேந்திரன், நாடோடிகள் பரணி, சரவண சுப்பையா, வேல ராமமூர்த்தி, சிராஜ் ஜானி, தினேஷ் லம்பா, கணேஷ் கவுரங், திவி, தேவயாணி ஷர்மா, அருணோதயன்.

*தொழில்நுட்பக் குழு:*
வசனங்கள் – பத்மா சந்திரசேகர், மோகன் ஜி.,
இசை – ஜிப்ரான் வைபோதா,
ஒளிப்பதிவு – பிலிப் ஆர்.சுந்தர்,
எடிட்டிங் – தேவராஜ்,
கலை இயக்கம் – கமல்நாதன்,
நடனம் – தணிகா டோனி,
சண்டைக்காட்சி – ஆக்‌ஷன் சந்தோஷ்,
தயாரிப்பு – நேதாஜி புரொடக்ஷன்ஸ் (ஜி. எம் பிலிம் கார்ப்பரேஷன் உடன் இணைந்து),
இயக்கம் – மோகன் ஜி.

Related posts

பூச்சி முருகன், தாடி பாலாஜி உணவு வழங்கினர்

Jai Chandran

கண்மணிகளைக் காப்போம்! முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் கடிதம்

Jai Chandran

தமிழில் விஜயானந்த்’ படம்: கன்னட தயாரிப்பளர் மகிழ்ச்சி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend