Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

லால் சலாம் படத்தில் மக்களை சார்ந்த அரசியல்: ஐஸ்வர்யா ரஜினி பரபரப்பு

பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவன மான லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க, விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, ரஜினிகாந்த்  மகளும் இயக்குன ருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திரைக்கதை மற்றும் இயக்கத்தில் ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘லால் சலாம்’ படம் வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாக உள்ளது. அதையொட்டி  லைகா புரொடக்‌ ஷன்ஸ் நிர்வாக தலைவர் ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.இந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டு திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.

இதில் நடிகர் தம்பி ராமையா பேசியது: தமிழ்நாட்டிலும் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவம் என மதங்கள் மூன்றாக இருக்கலாம், ஆனால் மனித மனங்கள் ஒன்றாக இருக் கிறது. விஷ்ணு ரங்கசாமியின் கதைக்கு கிரிக்கெட்டை மையப் படுத்தி சிறப்பான திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். குடும்பத் துடன் வந்து ரசிக்கும் ரசிகர் களுக்கான உணர்வுப் பூர்வமான காட்சிகளுடன் படம் உருவாகி உள்ளதாக கூறினார்.படத்தில் நடிக்க தனக்கும் வாய்ப்பளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி.

நடிகர் செந்தில் பேசியது: அருமையான கதையை இயக் குனர் ஐஸ்வர்யா ரஜினி காந்த் உருவாக்கி உள்ளார். , அவர் கதையை கூறும் பொழுது மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது. படத்தில் மிகவும் ஒத்துழைப்பு கொடுத்து நடித்த சக கலைஞர் களுக்கும் நன்றி.

நடிகர் .விவேக் பிரசன்னா பேசியது: படத்தில் ஏதாவது பிரச்சனை இருக்குமா என்று தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு பிரச்சினை இருக்கக் கூடாது என்பதுதான் படத்தின் கரு.அதை பார்த்துவிட்டு பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களாகிய நீங்கள் கொடுக்கும் விமர்சனம் ஆழமாக வும் அழுத்தமாகவும் இருக்கும்.இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கும் தயாரிப்பாளர் சுபாஸ்கரனுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நடிகர் மூணாறு’ ரமேஷ் பேசியது: சிறுவயதில் இருந்து தான் ஒரு ரஜினி ரசிகர் என்றும் அவருடன் திரையை பகிர்ந்து கொள்வதில் மிகவும் பெருமை.  அவருடைய மகளின் இயக்கத்தில் நடித்ததற்கு மிகவும் மகிழ்ச்சி.  இது ஒரு ஜனரஞ்சகமான திரைப் படம்.தங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி.

நடிகை நிரோஷா  பேசியது: ரஜினிகாந்த் அவர்களுடன் நடிக்க ஏற்கனவே வாய்ப்பு வந்தது. கடைசி நேரத்தில் அது நடை பெறாமல் போனதி. அதனால் எனது திரை வாழ்க்கை  முழுமை பெறாமல் இருந்தது. இந்த திரைப்படம் மூலமாக  ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எனக்கு  நல்லதொரு வாய்ப்பை கொடுத்தார்.  இயக்குனராக தனக்கு என்ன தேவையோ அதை மிகவும் தெளிவுடன் நடிகர்களிடம் இருந்து சிறப்பான ஒரு நடிப்பை பெற்றுக் கொள்வார்.

முதல்முறையாக ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் அவர்களுடன் நடிப்பது  மிகவும் பெருமை .நகைச்சுவை  கதாபத்திரமாக மட்டும் இல்லாமல், இந்த படத்தில் குணச்சித்திரத்துடன் கூடிய நகைச்சுவை கதாபாத்திரம் கொடுத்துள்ளார். ஒரு திரை பல்கலைக்கழகத்தில் நுழைந்து வந்த அனுபவத்தை இந்த படம் கொடுத்தது.  அந்த அளவிற்கு அத்தனை கலைஞர்களுடன் பணிபுரிந்தேன்.

நடிகர் திவாகர் பேசியது: இந்தப் படத்தில் சிறு கதாபாத்திரம் இருந்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற நல்ல குணத்தோடும் பண்போடும் தனக்கு இந்த ஒரு வாய்ப்பை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் வழங்கினார் .இந்த வாய்ப்பு கிடைப்பதற்கு நண்பர் தங்கதுரை ஒரு காரணம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் நடித்த தருணம் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம.

விக்ராந்த் பேசியாது: எனது  சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டது போதும் என்று இருக்கும் பொழுது இந்த வாய்ப்பு வந்தது., அப்பொழுது தான் எனக்கு இன்னும் திரைப்பயணம் இருக் கிறது. , இது கடவுள் கொடுத்த பரிசு என்று மகிழ்ச்சியடைந்தேன் . இந்த வாய்ப்பு வழங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு நன்றி  சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் அவர்களுடன் இந்த படத்தில் நடிப்பது மிகவும் சந்தோஷம் . உடன்  நடித்த மூத்த கலைஞர்கள் மற்றும் சக கலைஞர்களுக்கு நன்றி..சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பு தொடர்பாக நிறைய ஆலோசனை கொடுத் தார்.  நல்ல ஊக்கம் அளித்தார்.

நடிகர் விஷ்ணு விஷால் பேசியது:  15 ஆண்டுகளை திரைத்துறையில் நிறைவு செய்த தருணத்தில் இந்த படம் தனக்கு ஒரு பரிசாக கிடைத் திருக்கிறது. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் அவர்களுடன் பலரும் நடிக்க ஏங்கிக் கொண்டிருக்கும் பொழுது அவர் நடிக்கும் படத்தில் அவருக்கு கீழ் ஒரு கதையின் நாயகனாக நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.  இக்கால கட்டத்திற்கு தேவையான கருத்தை கிரிக்கெட் மூலமாக இப்படம் பதிவு செய்கிறது. ஒரு இயக்குனராக இந்த கருத்தை படமாக்குவதும் அப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் போன்ற மிகப்பெரிய ஆளுமை இருப்பதும் மிகுந்த சவால் அளிக்கும் விஷயமாகும். அதை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் திறம்பட செய்து முடித்துள்ளார்ப. ணிபுரிந்த அனைத்து கலைஞர்களுக்கும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் நன்ற.

சத்யா என்.ஜே.(ஆவடிவமைப்பாளர்) பேசியது:

லால் சலாம் திரைப்பட வாய்ப்பு தனக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப் பாகும். 90-களின் காலகட்டங்களில் திரைக்கதை அமைந்து இருப்ப தால் அதற்கு தகுந்தவாறு ஆடைகளை வடிவமைப்பது தனக்கு ஒரு சவால் நிறைந்த பணியாக இருந்தது. . கூடவே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் தனக்கு அளித்திருக்கிறார். அதற்கு  நன்றி.

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியது

ஒரு ஊரில் நடக்கும் தேர்த் திருவிழா அதையொட்டி நடக்கும் கிரிக்கெட் போட்டி அந்த போட்டியில் நடக்கும் பிரச்சனைகளை சார்ந்து இந்த படத்தின் திரைக்கதை அமைந் துள்ளது. விளையாட்டு வினையா னால் எங்கு போய் முடியும் என்பதை இந்த படம் பேசுகிறது.
இத்திரைப்படத்தின் ஒளிப்ப திவாளர் மற்றும் கதாசிரியர் தன்னிடம் இரண்டு கதை கூறிய தாகவும் அதில் ஒன்று தான் லால் சலாம் என்றும் கூறினார். இந்தப் படம் மக்களைச் சார்ந்த ஒரு சிறிய அரசியல் கருத்தை பேசுவதாக கூறினார். குடிமகனாக இருக்கக் கூடிய அனைவருக்கும் அரசிய லுடன் ஒரு பங்கு உள்ளது அரசியல் இல்லாமல் எந்த நாடும் ஜனநாயகமும் இயங்க முடியாது என்றும் கூறினார். அரசியல் என்பது எல்லாத்திலும் உள்ளது அதை நாம் எப்படி பார்க்கி. றோம் என்பதில்தான் எல்லாமே உள்ளது என்று கூறினார்.மேலும் படத்தில் பணியாற்றிய மூத்த கலைஞர்கள் மற்றும் நடிகர்களுக்கும் தன்னுடைய சக தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் நன்றி.

Related posts

பயமறியா பிரம்மை (பட விமர்சனம்)

Jai Chandran

டாக்டர், போலீஸுக்கு பாரதிராஜா கையுறை, முகமூடி.

Jai Chandran

மாணவிகளுடன் பிறந்த நாளை கொண்டாடிய துருவ்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend