சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் அண்ணாத்த. இதன் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டது. சுமார் 8 மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் தொடங்குகிறது. ஐதராபாத் ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் நடக்கும் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக ரஜினிகாந்த் இன்று சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ஐதராபாத் சென்றார்.
இப்படத்தில் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சிறுத்தை சிவா இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ரஜினிகாந்த் வரும் 31ம் தேதி தான் தொடங்கவிருக்கும் புதிய அரசியல் கட்சிகான தேதியை அறிவிக்க உள்ளார். ஜனவரி மாதம் கட்சி தொடங்குகிறார்.