Trending Cinemas Now
விமர்சனம்

தேன் (பட விமர்சனம்)

படம்: தேன்
நடிப்பு: தருண்குமார், அபர்ணிதி, அனுஸ்ரீ பாவா லட்சிமணன்
தயாரிப்பு: ட்ரைடண்ட் ஆர்ட் ரவீந்திரன், அம்பலவாணன், பிரேமா
இசை: சனத் பரத்வாஜ்
ஒளிப்பதிவு: எம்.சுகுமார்
இயக்கம்: கணேஷ் விநாயகன்
திரைப்படங்கள் கமர்ஷியலாக வருவது ஒரு விதம் அர்த்த முள்ளதாக வருவது ஒருவிதம். தேன் படம் அர்த்தமுள்ள படமாக வந்திருக்கிறது.
குறிஞ்சிகுடி மலைக்கிராமத் தில் சிறிய மக்கள் தொகை கொண்டவர்களே வாழ்கின் றனர். தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று குறிஞ்சி தேன் கொண்டு வந்து தரும் வாலிபன் தருண்குமார் மீது காதல் கொள்கிறார் அபர்ணிதி. பெண்பார்த்து நிச்சயதார்த்தம் செய்ய முடிவு செய்கின்றனர். ஊர் பெரியவர் முன்னிலை யில் பெண் பார்க்கும் நிகழ்வு நடக்கிறது. இருவரும் சம்மதிக் கின்றனர். பிறகு ஊர் வழக்கப் படி வாழை மட்டையை கொடுத்து இருவரையும் முனைக்கு ஒருபக்கமாக கிழிக்க சொல்கின்றனர் அது சரிபாதியாக கிழியாமல் ஏடாகூடமாக் கிழிகிறது. இதையடுத்து அம்மன் உத்தரவு தரவில்லை என்று நிச்சயதார்த்தம் நிறுத்தப்படு கிறது. ஆனாலும் அபர்ணிதி தருண்குமாரை தேடிச் சென்று தாலி கட்டிக் கொண்டு அவரோடு வாழ்கிறார். ஒரு குழந்தை பிறக்கிறது. இந்நிலையில் அபர்ணிதிக்கு வயிற்றுவலி தொல்லை ஆரம்பமாகிறது, டாக்டரிடம் அழைத்து சென்று காட்டினால் பெரிய நோய் வந்திருக்கிறது மருத்துவமனையில் சேர்த்து விடு என்கின்றனர். நல்ல சிகிச்சை அளிக்க வேண்டு மென்றால் அரசு தரும் இன்சூரன்ஸ் கார்ட் தேவை என்கிறார் டாக்டர். அதுபற்றி அறியாத தருண் குமார் அதை பெறுவதற்காக தாசில்தார் அலுவலகத்துக்கும் ஆதார் அலுவலகத்துக்கும் நடையாய் நடந்து என்ன பாடு பாடுகி றார். அதனால் கிடைத்த பலன் என்ன என்பதை படம் விளக்கு கிறது.
படத்தின் தொடக்கத்திலேயே இயக்குனர் எந்த பளபளப்பும் இல்லாமல் இயற்கை எழில் மிகுந்த குறிஞ்சி குடி மலைக் காட்டு பகுதிக்கு ரசிகர்களை சத்தமில்லாமல் அழைத்துச் சென்று கதையோடு ஒன்றச் செய்துவிடுகிறார். அதன்பிறகு நடக்கும் ஒவ்வொரு காட்சி யும் அருகில் இருந்து பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்து கிறது.
தருண்குமார் வேடத்துக்கு அப்படி பொருந்தி இருக்கி றார். மலைகாட்ட ஆளாகவே மாறி இருக்கிறார். கள்ள்மில் லாத அந்த பேச்சு, மனதில் அசுத்தம் இல்லாமல் அபர்ணிதியிடம் பழகும் பாங்கு என எல்லாவற்றிலும் எதார்த்தம் மனதை அள்ளு கிறது. அபர்ணிதியின் நடிப்பும் கொஞ்சமும் குறை இல்லை. ’உன்னா நல்லா பாத்துக்கு வய்யா பொண்டாடி மாதிரி இல்ல. இந்த மலை மாதிரி’ என்று அவர் சொல்லும் வசனம் நெஞ்சில் சம்மனம் போட்டு அமர்ந்துக்கொள் கிறது.
இடைவேளை வரை இந்த ஜோடிகளின் வாழ்க்கை ஓட்டம் தெளிந்த நிரோடை யாக பயணிக்கிறது. வயிற்று வல் என்று வயிற்றை பிடித்துக் கொண்டு அபர்ணிதி அவதி தொடங்கியவுடன் கதையின் போக்கு இப்படித்தான் போகப்போகிறது என்பதை கணிக்க முடியவில்லை.
நகர்த்து அரசு மருத்துவமனை யில் வயிற்றுவலியால் துடிக் கும் மனைவியை சேர்ப்பதற் குள் தருண்குமாருக்கு நாக்கு தள்ளிவிடுகிறது. ஸ்கேன் எடுக்கச் சென்றால் அங்குள்ள வரின் அதிகாரம், மருத்துவ மனை பெட்டில் சேர்க்க அனுமதி வாங்க வேண்டு மென்றால் அங்குள்ளவரின் மிரட்டல். கலெக்டர் ஆபிஸ், ஆதார் அலுவலம், தாசில்தார் அலுவலகம் எல்லாவற்றிலும் என்ன கூத்து நடக்கிறது என்பதை அப்பட்டமாக படமாக்கி இருக்கிறார் இயக் குனர்.
பிச்சைக்காரராக வரும் பாவா லட்சுமண்னை காமெடியானா கத்தான் பார்த்திருக்கிறோம் இதில் அவர் அடித்து வெளுக் கும் அரசியல் நய்யாண்டிகள் கைதட்டல் பெறுகிறது.
சனத் பரத்வாஜ் காட்சிக்கு தேவையான இசையை கச்சித மாக வழங்கி இருக்கிறார். படத்தின் இன்னொரு ஹைலைட் கேமரா. மலைக் கிராமத்தை பறவை பார்வை யில் உச்சியிலிருந்து பார்ப்பது போல் சில இடங்களில் காட்டி மெய்மறக்க வைக்கிறார். இயக்குனர் கணேஷ் விநாயகன் ஏதோ ஒரு படத் தை எடுத்தோம் என்று நுனிப்புல் மேயாமல் எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து காட்சிகளை அமைத்திருக்கும் விதம் அவரது நேர்மையான உழைப் பை காட்டுகிறது. கிளைமாஸ் சீனில் பிணத்தை தூக்கிக் கொண்டு நடக்கும் அந்த காட்சி அரங்கை அமைதி கடலாக்கி விடுகிறது. இப்படம் வெளிநாட்டு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல விருது களை வென்றிருக்கிறது.

தேன் – இனிப்புடன் சில அரசியல் கசப்பையும் கலந்து படைத்திருக்கிறார்கள்.

Related posts

கார்கி (பட விமர்சனம்)

Jai Chandran

காவல் துறை உங்கள் நண்பன் (பட விமர்சனம்)

Jai Chandran

இ மெயில் ( பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend