Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ராஜாமகள் ( பட விமர்சனம்/

படம்: ராஜாமகள்

நடிப்பு: ஆடுகளம் முருகதாஸ், பேபி பிரதிக்ஷா, வெளினா, பக்ஸ்

தயாரிப்பு: மூன் வாக்கர்ஸ்

இசை: ஷங்கர் ரங்கராஜன்

ஒளிப்பதிவு:. நிக்கி கண்ணன்

இயக்கம்: ஹென்றி ஜோசப்

பி ஆர் ஓ: ஆர். குமரேசன்

செல்போன் ரிப்பேர் கடை வைத்திருக்கும் சுந்தரம்(முருக தாஸ்) தனது மகள் கண்மணி ( பிரதிக்ஷா) மீது உயிரையே வைத்திருக்கிறார். மகள் எது கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் வாங்கித் தருகிறார். ஒரு நாள் பள்ளி தோழன் வீட்டுக்கு செல்லும் கண்மணி அவனது பங்களாவை பார்த்து விட்டு தனக்கும் அதே போல் பங்களா வாங்கித் தரும்படி தந்தையிடம் கண்மணி கேட்கிறாள். ஏதோ ஆசைப்படுகிறதே என்பதற்காக சுந்தரமும் வாங்கி தருவதாக கூற அதையே மறக்காமால் தினமும் கேட்டு தொல்லை செய்கிறாள். மகளின் பிடிவாதத்துக்கு முன்னால் சுந்தரம் தலைகாட்ட முடியாமல் ஓடி ஒளிகிறார். இதனால் கண்மணி ஏங்கிப்போக நிலைமை விபரீதமாகும் சூழல் ஏற்படுகிறது. இறுதியில் என்ன நடந்தது என்பதற்கு படம் சென்டிமென்ட் பதில் அளிக்கிறது.

எப்போதாவது வரும் சிறந்த கதை அம்சம் கொண்ட இதுபோன்ற சின்ன பட்ஜெட் படங்கள் மனதை கொள்ளை கொண்டுவிடும், அந்த பட்டியலில் ராஜா மகள் படமும் இடம் பிடிக்கிறது.

ஒரு பள்ளிக்கூடம், ஒரு மொட்டைமாடி வீடு, சில கதாபாத்திரங்கள் என எளிமை யான ஸ்கிரிப்ட் தந்தை மகள் பாச போராட்டத்துடன் குழைத்து எழுதப்பட்டிருப்பதால் நெஞ்சை நிறைய ஆக்கிரமித்துக் கொள் கிறது.

ஹீரோக்களுக்கு நண்பராக நடித்துவந்த முருகதாஸ் இதில் கதையின் நாயகனாக நடித்துள்  ளார். மகளாக பிரதிக்ஷா நடித்தி ருக்கிறார். இருவரும் தந்தை மகளாக வாழ்ந்திருக்கிறார்கள்.

மகளை தந்தை கொஞ்சுவது எதார்த்தம்தான் ஆனால் மகளுக்காக , முடியாதவற்றை கூட செய்துகாட்டுவேன் என்று வீம்புக்காக தந்தை செய்யும் செயல் எப்படி கடுப்படிக்குமோ அப்படித்தான் ஒரே காட்சிகள் ரிபீட் ஆகும்போது கடுப்பாகிறது.

தன் மகள் பெரிய பங்களாவை காட்டி வாங்கித் தரச் சொல்வதும் கண்டிப்பாக வாங்கிதருகிறேன் என்று முருகதாஸ் சொல்வதும் சடுகுடு.
கிளைமாக்ஸ் வரை இந்த இழுத்தடிப்பு தொடர்கிறது. ஏதோ வில்லங்கமான கிளைமாக்சில் முடிக்கப் போகிறார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கும்போது திடீரென சுபமாக முடிப்பது பாதி டென்ஷனை குறைத்து விடுகிறது.

பேபி பிரதிக்ஷாவின் தாயாக நடித்திருக்கும் வெளினா நடுத்தர குடும்ப தாயாக நிதானமான நடிப்பில் முத்திரை பதிக்கிறார்.

முருகதாஸின் நண்பராக பக்ஸ் சில அட்வைஸ்களை முன்வைத்தி ருக்கிறார் இயக்குனர். எது முடியுமோ அதைச் சொல்லித்தான் குழந்தைகளை வளர்க்க வேண்டும் என முருக தாஸுக்கு பக்ஸ் சொல்லும் அட்வைஸ் நூற்றில் ஒரு வார்த்தை. அதை இன்னும் அழுத் தமாக பொட்டில் அறைந் தார் சொல்லியிருந்தால் ஹைலைட்டாகியிருக்கும்.

இசை அமைப்பாளர் ஷங்கர் ரங்கராஜன், ஒளிப்பதிவாளர் நிக்கி கண்ணன் திறமையை காட்டுகிறேன் பார் என்று பதற்றப்படாமல் தங்கள் பணிகளை அளவுடன் செய்து காட்சிக்கு முக்கியத்துவம் தந்திருக்கின்றனர் .

இயக்குனர் ஹென்றி ஜோசப் எடுத்துக் கொண்ட கரு அர்த்த முள்ளதுதான். ஆனால் அதை நாயகனால் செய்துவிட முடியும் என்கிற அளவுக்கு ஒரு நடுத்தர மான வீட்டை மையமாக வைத்து நம்பகத்தன்மை தந்திருக்கலாம். பங்களா கனவு கொஞ்சம் ஓவர்தான். ஆனால் பாசக்காரத் தந்தைகளுக்கு ஒரு சரியான படிப்பினையை தந்திருக்கிறார்.

ராஜாமகள் குடும்பமாக அமர்ந்து பார்க்க வேண்டிய படம் .

Related posts

Spectacular TRAILER of MaraikayarArabikadalinSingam

Jai Chandran

மன்சூர் அலிகானுக்கு நடிகர் சங்கம் கடும் கண்டனம்

Jai Chandran

விலங்கு (ஜீ 5 வெப் சீரீஸ் விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend