.படம்: காந்தி கண்ணாடி
நடிப்பு: பாலா, பாலாஜி சக்திவேல், அர்ச்சனா, நமிதா கிருஷ்ணமூர்த்தி, மதன், அமுதவாணன், நிகிலா
தயாரிப்பு: ஜெய் கிரண்
இசை: விவேக் மெர்வின்
ஒளிப்பதிவு: பாலாஜி கே ராஜா
இயக்கம்: ஷெரிப்
பி ஆர் ஓ: ரேகா
காந்தி, கண்ணம்மா மூத்த ஜோடி அறுபதாவது வயது திருமண விழா ஒன்றுக்கு செல்கிறார்கள். அந்த திருமணத்தை பார்த்த கண்ணம்மாவுக்கு நமக்கும் ஒரு பிள்ளை இருந்தால் இதுபோல் 60 வயது திருமணம் செய்து வைத்திருப்பான் என்று கூற தன் உயிருக்கும் மேலாக மதிக்கும் கண்ணம்மாவின் ஆசையை நிறைவேற்ற எண்ணுகிறார் காந்தி. ஊரில் உள்ள தனது ஜமீன் சொத்தை விற்று 80 லட்சம் பணம் கொண்டு வருகிறார். அந்த பணத்தை திருமண விழாக்கள் நடத்தும் இளம் காதல் ஜோடி கதிர், கீதாவை சந்தித்து தனது எண்ணத்தை வெளிப்படுத்தி 60 வயது திருமண விழாவுக்கு ஏற்பாடு செய்யும்படி கூறுகிறார். அவர்களும் அதற்கான ஏற்பாடுகள் செய்ய தொடங்குகின்றனர் அப்போது ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகிறது. இதனால் அறுபதாவது வயது திருமணம் நடத்த முடியுமா என்ற கேள்வி எழுகிறது . அது நடந்ததா? இல்லையா? என்பது தான் கிளைமாக்ஸ்.
படத்துக்கு “காந்தி கண்ணாடி” என்று டைட்டில் பார்த்து இது காந்தி காலத்து கதையாக இருக்குமோ என்று எண்ணியபடி படம் பார்க்க தொடங்கியதும் கதையின் போக்கு எதிர்பாராத திருப்பங்களுடன் நகரும்போது நிமிர வைக்கிறது.
காந்தி, கண்ணம்மா மூத்த தம்பதி கதாபாத்திரத்தில் பாலாஜி சக்திவேல், ஊர்வசி பட்டம் பெற்ற அர்ச்சனா நடித்திருக்கிறார்கள் என்பதை விட நிஜமாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்றால் அது மிகையல்ல.
ஊர்வசி பட்டம் பெற்ற அர்ச்சனா மறைந்த இயக்குனர் பாலுமகேந்திராவின் திறமையான ஒரு கண்டுபிடிப்பு. இந்த காலகட்டத்தில் ஊர்வசி பட்டம் என்பது கிடையாது ஆனால் அர்ச்சனா திரையுலகுக்கு வந்த காலகட்டங்களில் சிறந்த நடிகைக்கு மத்திய அரசு ஊர்வசி பட்டம் வழங்கி கௌரவிப்பது உண்டு. அந்தப் பட்டத்தை தான் அர்ச்சனா பெற்றிருக்கிறார். ஊர்வசி பட்டம் பெற்ற ஒரு நடிகை எப்படி நடிப்பார் என்பதை நாம் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இதுவரை அவரது நடிப்பை பார்க்காத இளவட்டங்களுக்கு வாய்ப்பாக இந்த படம் வந்திருக்கிறது.
காதல் படத்தை இயக்கிய பாலாஜி சக்திவேல் சில படங்களில் நடித்திருக்கிறார் அந்த கதாபாத்திரங்கள் எல்லாம் பெரிதாக ஞாபகத்தில் இல்லை. ஆனால் இந்த படத்தில் காந்தி என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்திருக்கும் நடிப்பு காலகாலத்துக்கும் அவர் பெயரை சொல்லிக் கொண்டிருக்கும்.
காமெடி படங்களில் நடித்துக் கொண்டிருந்த பாலா இந்த படம் மூலம் ஹீரோவாக ஆகியிருக்கிறார். நியாயமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து மனதில் இடம் பிடிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதை எல்லாம் செய்திருக்கிறார்.
கிளைமாக்சில் நடுவீதியில்.பாலா ஆடும் அந்த ஆட்டம் உணர்ச்சி பிரவாகம்.
கதாநாயகி நமிதா கிருஷ்ணமூர்த்தியும் தனது கதாபாத்திரத்தில் நிறைவு காட்டியிருக்கிறார்.
படத்தில் வரும் பிரதமர் மோடி அரசின் பண மதிப்பிழப்பு உத்தரவு மக்களை எப்படியெல்லாம் வாட்டி வதைத்தது, உயிரை பறித்தது என்ற ஒரு நிகழ்வை மீண்டும் கண் முன் நிகழ்த்தி காட்டி இருப்பதுடன் ஒரு சரித்திர பதிவாக காந்தி கண்ணாடி படம் அமைந்திருக்கிறது.

இதற்கு மோடி வாசிகள் ஒருவேளை எதிர்ப்பு தெரிவித்து நீக்குவதற்குள் படத்தை ரசிகர்கள் பார்ப்பது இயக்குனருக்கு கிடைத்த வெற்றியாக அமையலாம்.
மதன், அமுதவாணன், நிகிலா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
ஜெய் கிரண் தயாரித்திருக்கிறார்.
விவேக் மெர்வின் இசை காட்சிகளை தூக்கி நிறுத்துகிறது.
பாலாஜி கே ராஜா ஒளிப்பதிவு திருப்தி.
குறைந்த அளவே நட்சத்திரங்களை வைத்துக்கொண்டு குடும்பத்தையே கவரும் படத்தை இயக்கிய ஷெரிப் தரமான இயக்குனர் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.
காந்தி கண்ணாடி – மக்களை வாட்டிய மத்திய ஆட்சியின் அவலத்தை இந்த கண்ணாடி மீண்டும் பிரதிபலித்திருக்கிறது.

By
K.Jayachandhiran
Trendingcinemasnow.com
