Trending Cinemas Now
தமிழ் செய்திகள்

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ” துர்கா “

ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் காஞ்சனா பெயரில் வெளிவந்த அனைத்து படங்களுமே வெற்றிவாகை சூடி சுமார் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. அந்த படங்களின் மூலம் குழந்தைகளாக இருப்பவர்கள் முதல்கொண்டு பெரியவர்களையும் குழந்தைகள் மனநிலைக்கு கொண்டு சென்று ரசிக்கச் செய்த பெருமை ராகவா லாரன்ஸுக்கு உண்டு. பேய் படங்களின் வித்தியாச முயற்சிகளுக்கு அடித்தளமிட்டவர் ராகவா லாரன்ஸ்.

அவர் அடுத்தாக தனது தாயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்து கதாநாயகனாக நடிக்கும் படம் ” துர்கா ”

விரைவில் இயக்குனர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவுப்பு வெளியாகும்.

ராகவா லாரன்ஸ் தற்போது ஆடுகளம் கதிரேசன் தயாரித்து இயக்கும் ” ருத்ரன் ” படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து வெற்றி மாறன் கதை எழுத , ஆடுகளம் கதிரேசன், வெற்றி மாறன் இருவரது தயாரிப்பில், துரை செந்தில்குமார் இயக்கத்தில் ” அதிகாரம் ” படத்தில் நடிக்க விருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

Related posts

கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் மிடில் கிளாஸ்

Jai Chandran

இயக்குனர், நடிகர் டி பி.கஜேந்திரனுக்கு அஞ்சலி

Jai Chandran

மலையாள திரில்லர் படத்துக்கு சவால் விடும் சீமானின் ‘தர்மயுத்தம்’

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend