Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ராதிகாவுக்கு சாதனை விருது

திரைத்துறை, தொலைக்காட்சி உள்ளிட்டவற்றில் பல்லாண்டுகளாக திறம்பட செயலாற்றி வரும் நடிகையும் ரடான் மீடியாவொர்க்ஸின் நிர்வாக இயக்குநருமான ராதிகா சரத்குமார் தனது சாதனைகளுக்காக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்றுள்ளார்.

தமிழ் ஸ்டடீஸ் யூகே எனும் அமைப்பின் சார்பாக இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் மரியா மில்லர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் உலகெங்கும் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்கள் கவுரவிக்கப்பட்டனர்.

இந்த உயரிய விருதிற்காக தேர்ந்தெடுக் கப்பட்டவர்களில் ராதிகாவும் ஒருவர். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்ற கையோடு, ராதிகா அங்கு உரையாற்றியும் இருக்கிறார்.

இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளா ராதிகா சரத்குமார், “இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்றது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் நிரம்பிய தருணம். இவ்விருதிற்கு என்னை தேர்ந்தெடுத்த தேர்வுக்குழு வினருக்கும், இத்தனை ஆண்டு காலம் எனக்கு ஆதரவளித்த திரை மற்றும் தொலைக்காட்சித் துறையினருக்கும், குடும்பத்தினருக்கும் மிக்க நன்றி,” என்று கூறியுள்ளார்

Related posts

கவுண்டமணியின் “ஒத்த ஓட்டு முத்தையா” : திரையுலகினர் வாழ்த்து

Jai Chandran

ThatlamThatlam Video Song from Astakarmma is out now

Jai Chandran

செல்ஃபி வெற்றிவிழாவில் இயக்குனருக்கு புதுபட வாய்ப்பு தந்த தாணு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend