‘பல பண்டிகைகள், ஒரே காதல்’ என்று தலைப்பிட்ட புதிய போஸ்டருடன் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை கூறும் ராதே ஷியாம் குழுவினர் மற்றும் பிரபாஸ்
அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள திரைப்படமான ராதே ஷியாமின் போஸ்டர்கள் படம் குறித்த பரபரப்பை ஏற்கனவே உருவாக்கியுள்ளன. பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிக்கும் இப்படத்தின் முதல் பார்வை முதல் சமீபத்திய போஸ்டர் வரை அனைத்துமே ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளன. இந்நிலையில், தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிக்கும் விதமாக ‘பல பண்டிகைகள், ஒரே காதல்’ என்று தலைப்பிட்ட புதிய போஸ்டரை ராதே ஷியாம் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இதில், பிரவுன் உடையில் அந்தகால கதாநாயகர்களை நினைவுபடுத்தும் வகையில் காணப்படும் பிரபாஸ், படம் குறித்த எதிர்பார்ப்புகளுக்கு இன்னும் வலு சேர்த்துள்ளார். தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிக்கும் இந்த போஸ்டர், சித்திரைத் திருநாளை கொண்டாடும் விதத்தில் அமைந்துள்ளது. சமூக வலைதளங்களில் படக்குழுவினர் இதை வெளியிட்டு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
இவ்வாறாக, ரசிகர்களை படிப்படியாக குஷிப்படுத்தி வரும் ராதே ஷியாம் திரைப்படத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு காதல் ததும்பும் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடிக்கிறார். படத்தின் ஒவ்வொரு காட்சியும் மிகவும் பிரமாண்டமான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.
பரபரப்பான காதல் கதையான ராதே ஷியாமில், பிரபாஸின் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ரோம் பின்னணியில் நாட்டின் பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மொழிகளை கொண்டாடும் இந்த புதிய போஸ்டர் மிகவும் உற்சாகமூட்டும் வகையில் அமைந்துள்ளது.
2021 ஜூலை 30 அன்று வெளியாகவிருக்கும் இப்படத்தைக் காண ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர். அகில இந்திய நட்சத்திரமாக உருவெடுத்துள்ள பிரபாசையும், அழகு மிளிரும் பூஜாவையும், அவர்களுக்கு இடையேயான காதலையும் திரையில் காண அவர்கள் காத்திருக்கின்றனர்.
பன்மொழிப் படமான ராதே ஷியாமை ராதா கிருஷ்ண குமார் இயக்கியுள்ளார். யூவி கிரியேஷன்ஸ் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது. வம்சி மற்றும் பிரமோத் இதன் தயாரிப்பாளர்கள் ஆவர்.