Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பழங்குடி மக்களின் வாழ்க்கை கதை புதர்

அந்தமானில் வசிக்கும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ‘சென்டினல்’ மக்கள் பற்றிய பல்வேறு தகவல் களை உருவகப்படுத்தி உருவாக் கப்பட்ட கதை. ஜாய்ஷோர் கிரியேஷன்ஸ் உடன் இணைந்து கெர்ப்சாரா புரொடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.

இப்படம் தமிழ் தெலுங்கு,  மலை யாளம் மற்றும் ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் கெர்ப்சாரா புரொடக்ஷன்ஸ்-ன் லிபின் குரியன் மற்றும் ஜாய்ஷோர் கிரியே ஷன்ஸ்-ன் டாக்டர். அகஸ்டினும் தயாரிக்கிறார்கள்.

டாக்டர் அகஸ்டின் இப்படத்தை இயக்க, சந்தோஷ் அஞ்சல் ஒளிப்பதிவு செய்கிறார். முதல் முறையாக பெண் இசையமைப் பாளர்  மேரி ஜெனிதா நான்கு மொழிகளிலும் இசையமைத் துள்ளார்.

இதன் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடை பெற்றது. விழாவில், ஆர்.பார்த்  திபன், ஆர்.கே.சுரேஷ், சீனு ராமசாமி , ஆர்.எஸ்.சிவாஜி மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

பழங்குடியினரைச் சேர்ந்த கோக்ரி (கோபாலகிருஷ்ணன்) என்பவர் வித்தியாசமான கதைகளம் கொண்ட இப்படத்தில் கதாநாய கனாக நடித்துள்ளார். மற்ற நடிகர் நடிகைகள் தமிழ் மற்றும் மலையாள திரைத் துறையில் இருந்து நடித்திருக்கிறார்கள்.

இப்படம் கேரளா மற்றும் கர்நாடக எல்லைக்கு அப்பால் உள்ள குருபா தீவில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தில் பழங்குடியினர் பேசும் மொழி தனித்துவமானது மற்றும் வித்தியாசமானது, இந்த மொழிக்கான எழுத்துக்கள் அங்கு இல்லை.

தர்மராஜனின் மகள் ருக்மணி பாலினவியல் குறித்த தனது பிஎச்டியை முடிக்க ஹிடிம்பா என்ற தீவுக்கு செல்கிறார். அங்கு அவள் பழங்குடியினரால் பிடிக்கப்பட்டு, அவர்களில் ஒருவராக ஆக்கப்படு கிறாள். அவள் தன்னை இயல்பு வாழ்க்கைக்கு மீட்டெடுக்க சித்த மருத்துவரின் உதவியை நாடுகி றாள். இப்படம் பழங்குடியினரின் இயல்பான மற்றும் பாலியல் வாழ்க்கையை வெளிப்படுத் துகிறது. பெண் சார்ந்த இந்தப் படம் அந்தமானில் உள்ள சென்டினல் தீவில் வாழும் சென்டினல் மக்களின் ஒற்றுமை யைக் கொண்டுள்ளது. தென்னாப் பிரிக்க பழங்குடியினர் 2500 ஆண்டுகளுக்கு முன்பு சென்டினல் தீவுக்கு குடிபெயர்ந்தனர். இந்தப் படத்தின் தனித்துவம் அதன் மொழியிலேயே உள்ளது. பழங்  குடியினரின் மொழி அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் வாழ்க்கையின் அசல் தன்மையை கிட்டத்தட்ட 70% பயன்படுத்தப் பட்டுள்ளது.

இதில் சரண்யா ஆனந்த், டாம், கடம்பாரி, ஃபைசல், கொக்கிரி, கென்ஸ் நடித்துள்ளனர்.

கதை, ட்கிரைக்கதை, இயக்கம்டாக்டர் அகஸ்டின். த்யாரிப்பு லிபின் குரியன், மற்றும் டாக்டர்   அகஸ்டின் .  ஒளிப்பதிவு சந்தோஷ் அன்சல்.. எடிட்டர் ரெஞ்சித் டச் ரிவர். இசை மேரி ஜெனிதா.  பி ஆர் ஒ ஜான்சன்

 

Related posts

பிரம்மாண்டமாக தொடங்கிய ரவி மோகன் ஸ்டுடியோஸ்..

Jai Chandran

செவாலியே சிவாஜி மணிமண்டபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

Jai Chandran

ரசிகர்களுடன் சார் படக் குழு வெற்றி விழா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend