படம்: புஷ்பா தி ரைஸ் (பாகம் 1)
நடிப்பு: அல்லு அர்ஜூன், ராஷ்மிகா, பஹாத் பாசில், தனஞ்ஜெய், சுனில், அஜய் கோஷ், ராவ் ரமேஷ், ஜெகதீஷ் பிரதாப், ஷஹத்ரு, அனுசுயா பரத்வாஜ்
தயாரிப்பு: மைத்ரி மூவி மேக்கர்ஸ், முட்டம் செட்டி மீடியா
இசை: தேவி ஸ்ரீ பிரசாத்
ஒளிப்பதிவு: மிடோஸ்லா குபா புரோசெக்
வசனம்: மதன் கார்க்கி
இயக்கம்: சுகுமார்
பி ஆர் ஒ : நிகில்
தந்தையின் இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர் என்பதால் புஷ்ப ராஜை சிறுவயதிலேயே அவரை முதல் மனைவி குடும்பத்தினர் விரட்டி அடிக்கின்றனர். படிப்பில்லாத புஷ்பராஜ் முரடணாக வளர்வதுடன் காட்டில் செம்மரங்கள் வெட்டி கடத்த்பவனாகிறான். அவனது திறமையையும், பலத்தையும் கண்ட கொண்டாரெட்டி புஷ்பராஜை தன்னுடன் பார்ட்னராக சேர்ந்த்துக்கொண்டு செம்மர கடத்தலில் ஈடுபடுகிறான். வியாபார விஷயத்தில் தங்களிடம் செம்மரம் வாங்குபவர் மோசடி செய்வதை கண்பிடித்து தட்டிக் கேட்கிறான் புஷ்பராஜ். இதனால் இருதரப்புக்கும் மோதல் போக்கு ஏற்படுகிறது. இதற்கிடையில் போலீசை பகைத்துக் கொள்ளும் புஷ்பராஜூக்கு அங்கிருந்தும் எதிர்ப்பு அதிகரிக் கிறது. இதற்கிடையில் தனது காதலி வள்ளியை மானபங் கப்படுத்த முயலும் கொண்டா ரெட்டியின் மகனை கை கால் உடைத்து படுக்கையில் கிடத்துகிறான் புஷ்பராஜ். இதனால் கொண்டா ரெட்டியும் புஷ்பாராஜை கொல்ல எண்ணுகிறார். பல திசைகளிலிருந்து வரும் எதிர்ப்பை முறியடித்து தனது சண்டியர் சாம்ராஜ்யத்தை புஷ்பராஜ் எப்படி நிலைநாட்டுகிறான் என்பதே கதை.
புஷ்பாராஜ் கதாபாத்திரத்தில் அல்லு அர்ஜூன் நடித்திருக்கிறார் என்பதைவிட அந்த கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். இவரைவிட இந்த கதாபாத்திரத்துக்கு வேறு யாராவது பொருந்துவார்களா என்பதும் சந்தேகம்தான். இடது புஜத்தை லேசாக தூக்கியபடி, சட்டை பட்டனை கழற்றிவிட்டு தெனாவட்டாக நடக்கும் அல்லு அர்ஜூன் தனது புதிய பரிணமாத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
டன் கணக்கில் செம்மரம் குடோனில் பதுக்கி வைத்திருப் பதை அறிந்து அதை கைப்பற்ற போலீஸ் படை வருகிறது என்பதை அறிந்த உடன் ஒன்மேன் ஆர்மியாக மாறி டன் கணக்கான செம்மரக்கட்டைகளை ஆற்றில் தூக்கிபோடு வதும் பின்னர் அந்த கட்டைகளை அணையின் வழியாக சென்றுவிடாதபடி அணைக் கதவை பூட்டி எல்லா கட்டைகளையும் தக்க வைக்கும்போது அல்லு நடத்தும் ஆக்ஷன் உடலை புல்லரிக்க வைக்கிறது.
எவ்வளவுபேர் தாக்க வந்தாலும் அவர்களை தூக்கிவீசி பந்தாடி முழுமையான ஆக்ஷன் ஹீரோவாக பிரமிக்கச் செய்யும் அல்லு, ராஷ்மிகா மீது காதல் கொண்டு ”அவள் என்னை பார்க்கிறாளா, பார்த்து சொல்” என்று தனது அடியாளிடம் சொல்லி காதலில் வெட்கப்படுவது என்று ஜமாய்க்கிறார். அல்லுவின் டிரேட் மார்க் டான்சும் மிஸ் ஆகாமல் பார்த்துக்கொண்டு ரசிகர்களை முழு திருப்தி அடையச் செய்திருப்பது இயக்குனரின் செம் யுக்தி.
ராஷ்மிகாவை எப்படி பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு ரசிகர்கள் வருவார்களோ அவர்களுக்கு ராஷ்மின் கண் அசைவு பேச்சுடன் இளசுகளை தட்டி எழுப்பும் கவர்ச்சியிலும் மூழ்கடித்திருக்கிறார். வா சாமி பாடலில் ராஷ்மிகாவின் ஆட்டம் படுசூப்பர். தியேட்டரில் ஒன்ஸ் மோர் கேட்டு குரல்கள் ஒலிக்கின்றன.
மொட்டை போட்டு அதிரடி காட்டும் போலீஸ் அதிகாரி பன்வார் சிங் ஷெகாவத்தாக நடித்திருக்கும் பஹத் பாசில் படத்தை இன்னொரு லெவலுக்கு படத்தை உயர்த்துக்கிறார். ”ஒண்ணு குறையுது” என்று சொல்லி அல்லுவை அவமரியாதை செய்யும் பஹத் பயமுறுத்துகிறார். அவரை தனிமையில் அழைத்துவந்து அல்லு அர்ஜூன் சட்டை பேன்ட்டை கழற்றி ஓட விடுவது அப்ளாஸ் அள்ளுகிறது.
படத்தின் பிரமாண்டத்தை தயாரிப்பாளர்கள் ஒருபக்கம் பணத்தை வாரி இறைத்து அதிகப்படுத்தி இருந்தாலும் அந்த பிரமாண்டத்தை ஒளிப்பதிவாளர் இரண்டு மடங்காக அதிகரித்து காட்டி இருக்கிறார்.
படத்துக்கு மற்றொரு பக்க பலம் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை. ஏற்கனவே பாடல்கள் ஹிட். ஓ .. ஓ பாடலுக்கு சமந்தாவின் துள்ளல் ஆட்டம், சாமியோ பாடலுக்கு ராஷ்மிகாவின் ஆட்டம் இரண்டில் கவர்ச்சி எதில் தூக்கல் என்று பட்டிமன்றமே வைக்கும் அளவுக்கு தாராளாமாக நடித்திருக்கின்றனர்.
மெட்ராஸ் பாஷை போல் லோக்கலாக வசனம் எழுதினாலும் அதிலும் ஆங்காங்கே பஞ்ச் வனசங்களை இணைத்திருக்கும் மதன் கார்த்தி படத்தின் மற்றொரு தூண்.
எல்லாவற்றையும் ஒன்று திரட்டி அதை ஹாலிவுட் ரேஞ்சுக்கு இயக்கி இருக்கும் சுகுமார் சென்சுரி அடித்திருக்கிறார். இறுதியில் அல்லுவுக்கும், பஹத்துக்கும் மோதலை ஏற்படுத்தி 2 பாகத்துக்கு தொடக்கப்புள்ளி வைத்து இப்போதே இரண்டாம் பாகத்தின் அதிரடி வெற்றிக்கும் நாள் குறித்திருக்கிறார் இயக்குனர்.
புஷ்பா தி ரைஸ் – ஹாலிவுட் பிரமாண்டத்தில் அல்லுவின் ஆக்ஷன் அமர்க்களம்.
By
க.ஜெயச்சந்திரன்