முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடித்திருக்கும் புலிக்குத்தி பாண்டி டிரெய்லர் வெளியானது. முக்கிய வேடத்தில் சமுத்திரக்கனி, வேலா ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
திரை அரங்குகளில் வெளிவருவதற்கு முன்பாக பொங்கல் தினத்தில் ஜனவரி 15ம் தேதி மாலை 6.30 மணிக்கு இப்படம் சன் டிவியில் வெளியாகிறது. கிராமத்து பின்னணியில் விக்ரம் பிரபு அதிரடி சண்டியராக வலம் வருகிறார். நல்லவனை அடிக்கறதில்ல நல்லவனுக்காக அடிப்பேன் என்று பஞ்ச் வசனம் பேசி அசத்துகிறார்.