Trending Cinemas Now
ஆங்கில செய்திகள் சினிமா செய்திகள்

பிரைம் வீடியோ ஃபேமிலி என்டெர்டெய்னரின் “ஓ மை டாக்”

பிரைம் வீடியோ ஃபேமிலி என்டெர்டெய்னரின் புதிய படமான “ஓ மை டாக்” வெளியீட்டினை அறிவிக்கிறது.

இந்தப் படம், பிரைம் வீடியோவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மட்டுமே, 240 நாடுகளிலும் மற்றுமுள்ள பிரதேசங்களிலும் ஏப்ரல் 21ம் தேதி வெளிவர இருக்கிறது.

மும்பை ஏப்ரல் 6, 2022 : இன்று பிரைம் வீடியோ உலகப் புகழ்பெற்ற, வெகு நாட்களாக எதிர்பார்த்திருந்த படமான ” ஓ மை டாக்”(oh my dog) 21 ஏப்ரல் 2022 அன்று வெளியிடுவதாக அறிவித்துள்ளது. இந்த படம் ” 2D என்டர்டெய்ன்மென்ட்” பேனரில் தயாரிக்கப்பட்டு, சரோவ் ஷண்முகம் அவர்களால் எழுதி இயக்கப்பட்டுள்ளது. இப்படம் மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த(தாத்தா, அப்பா, மகன் மூவரின்) கதாபாத்திரங்களின் புகழ்பெற்ற உண்மையான குடும்பக் கதையாகும். அருண் விஜய் மற்றும் அர்னவ் விஜய் (அறிமுகம்) ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் பிரத்யேகமாக தமிழ், தெலுங்கு மொழிகளில் மட்டும் 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களிலும் கண்டு மகிழலாம்.
இப்படம் ஒவ்வொரு குழந்தையும், செல்லப்பிராணியை விரும்புபவர்களும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய ஒன்று. ” ஓ மை டாக்” அர்ஜூன் (அர்னவ்) மற்றும் கண் பார்வையற்ற நாய்க்குட்டி சிம்பா பற்றிய உள்ளத்தை தொடும் கதையாகும். ஒவ்வொரு குழந்தையும், குடும்பமும் பார்த்து மகிழவேண்டிய படம். எல்லா குடும்பங்களிலும் சாதாரணமாக நடக்கும் சம்பவங்கள், ஆசாபாசங்கள், முதல் முக்கியத்துவம், கவனிப்பு, தைரியம், வெற்றி, ஏமாற்றங்கள், நட்பு, தியாகம், நிபந்தனையற்ற காதல் மற்றும் விஸ்வாசம் போன்ற எல்லா உணர்வுகளின் கலவையாக உள்ளது இப்படம்.
இந்த படத்தை தயாரித்தவர்கள் ஜோதிகா-சூர்யா, மற்றும் இணை தயாரிப்பாளர்கள் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் மற்றும் RB டாக்கீஸின் எஸ் ஆர். ரமேஷ் பாபு. இசையமைப்பு நிவாஸ் பிரசன்னா மற்றும் ஒளிப்பதிவு கோபிநாத் ஆகியோர் செய்துள்ளனர். இப்படம் பிரைம் வீடியோ மற்றும் 2D என்டர்டைன்மென்ட் ஆகிய இருவருக்குமிடையே 4-பிலிம் வியாபாரத்தின் ஒரு பகுதியாகும்.

பிரைம் வீடியோவின் 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களிலும் 21 ஏப்ரல் 2022 அன்று, தமிழ் மற்றும் தெலுங்கில் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டு, வரும் கோடை விடுமுறையை வேடிக்கையாகவும், குடும்பங்களை மகிழ்விக்கும் நோக்கத்திலும் தயாரிக்கப்பட்டுள்ளது.

Related posts

விஜய் சேதுபதி மகன் சூர்யா நடிக்கும் பீனிக்ஸ் டீஸர் வெளியீடு

Jai Chandran

விஜய் நடிக்கும் மாஸ்டர் பட ஆக்‌ஷன் புரோமா ரிலீஸ்

Jai Chandran

முரசொலி செல்வம் மறைவுக்கு தயாரிப்பாளர் சங்கம்.இரங்கல்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend