Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

செய்திதாள், காட்சி , ஒலி ஊடகங்கத்தினர் முன்களப்பணியாளர்கள்.. மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

“செய்தித்தாள், காட்சி , ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள்”

திமுக தலைவர் (முதல்வர் )மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

மகத்தான மக்களாட்சியின் மாண்பிற்கு நான்காவது தூணாய் விளங்குவது ஊடகத் துறை. செய்திகளை மக்களிடம் உடனுக்குடன் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் தலையாய பணியை ஊடகங்கள் மேற்கொண்டு வருகின்றன. அதற்காக அயராது உழைக்கின்றன.

கடும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் ஊடகத் துறையினர் முன்களப் பணியாளர்களாகத் தமிழகத்தில் கருதப்படுவார்கள். செய்தித்தாள்கள், காட்சி ஊடகங்கள், ஒலி ஊடகங்கள் போன்றவற்றில் பணியாற்றி வருகின்ற தோழர்கள் அனைவருமே இந்த வரிசையில் அடங்குவார்கள். முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் அவர்களுக்கு உரிய முறையில் வழங்கப்படும் என மஉ.க்.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

அவருக்கு பத்திரகை, ஊடகவியலாளர்கள் நன்றி தெரிவித்திருக்கின்றனர்.

Related posts

“ஜப்பான்” படத்தில் வித்தியாசமான கார்த்தியாக சவாலாக இருந்தது

Jai Chandran

உயிருள்ள வரை நடிப்பேன்: மிரியம்மா விழாவில் ரேகா பேச்சு

Jai Chandran

வளரும் பயிர்களில் ஊடுருவும் நஞ்சு: மக்கள் நீதி மய்யம் அறிக்கை

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend