Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

வலிமையுடன் பவுடர் கிளிம்ப்ஸ் வெளீயீடு

நடிகர் சாருஹாசனை வைத்து தாதா 87 திரைப்படத்தை இயக்கியவரும், நடிகர் விக்ரமின் சகோதரி மகன் அர்ஜுமன் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள பப்ஜி படத்தின் இயக்குநரும், வெள்ளிவிழா நாயகன் மோகன்-குஷ்பு நடிப்பில் ஹரா படத்தை விரைவில் தொடங்கவிருப்பவருமான விஜய் ஸ்ரீ ஜி, வித்யா பிரதீப், நிகில் முருகன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பவுடர் படத்தை இயக்கியுள்ளார்.

கடந்த 26 வருடங்களாக தமிழ் மற்றும் பல்வேறு மொழிகளில் வெற்றிகரமான மக்கள் தொடர்பாளராக இயங்கி வரும் நிகில் முருகன் பவுடர் படத்தில் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தின் முன்னோட்டம் ஏற்கனவே பலரது பாராட்டை பெற்றிருந்த நிலையில், சிறப்பு காணொலி (கிளிம்ப்ஸ்) இன்று வெளியாகியுள்ளது.

அஜித் நடிப்பில் இன்று வெளிவந்துள்ள வலிமை படத்தை திரையிடும் அரங்குகளில் பவுடர் கிளிம்ப்ஸ் திரையிடப்பட்டது. கண்டிப்பான போலீஸ் அதிகாரி ராகவன் என்.எம் ஆக நிகில் முருகன் இதில் தோன்றியுள்ளார்.

சமூக வலைதளங்களில் சமீபத்தில் வெளியாகி மக்களின் வெறுப்பை சம்பாதித்த பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றை தனக்கே உரிய பாணியில் ராகவன் கையாள்வதை கிளிம்ப்ஸ் காட்டுகிறது.

திரைப்பட பிரபலங்கள், விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாராட்டை பவுடர் படத்தின் முன்னோட்டம் ஏற்கனவே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்த நிலையில் படம் விரைவில் திரைக்கு வரும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அனித்ரா நாயர், சாந்தினி தேவா, ‘மொட்டை’ ராஜேந்திரன், சிங்கம்புலி, வையாபுரி, ஆதவன், ‘சில்மிஷம்’ சிவா, விக்கி ஆகியோர் நடித்துள்ள பவுடர் படத்தை விஜய் ஸ்ரீ ஜி இயக்க, ஜி மீடியா பேனரில் ஜெயஸ்ரீ விஜய் தயாரித்துள்ளார்.

பவுடர் குழு

Related posts

கர்நாடக முதல்வருடன் தேசிய தலைவர் பட நாயகன் ஏ.எம்.பஷீர் சந்திப்பு

Jai Chandran

Vishal at Thirumala Thirupathi Devasathanam

Jai Chandran

திரவுபதி இயக்குனர் மோகன்.ஜி. தொடங்கும் பதிப்பகம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend