Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

92 வயதான பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்

(,பாலிவுட்  பிரபல  பாடகி லதா மங்கேஷ்கர். கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது இந்நிலையில், நேற்று அவரது உடல்நிலை சற்று சீரடைந்ததாக தெரிவிக்கப்பட்டது
ஆனால் இன்று காலையில் லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது. அவரை காப்பாற்ற டாக்டர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். மத்திய மந்திரி நிதின் கட்காரி அவசரமாக மருத்துவமனைக்கு விரைந்தார். லதா மங்கேஷ்கரின் உடல்நிலை குறித்து விசாரித்தார்

 

பின்னர் சிறிது நேரத்தில் லதா மங்கேஷ்கர் மரணம் அடந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவருக்கு வயது 92.
லதா மங்கேஷ்கர் காலமாகிவிட்டதாகவும், அவரது ஆன்மா சாந்தி அமைதியடைய பிரார்த்தனை செய்வதாகவும் அவரது சகோதரி உஷா மங்கேஷ்கர் அளித்த பேட்டியில் கூறி உள்ளார்.
லதா மங்கேஷ்கர் மறைவுக்கு பாலிவுட், கோலிவுட் படவுலகினர்  மற்றும்  அரசியல் தலைவர்கள்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

+++++++++++±+++++++++++++++++++++

 

நடிகர் திலகம்  சிவாஜி குடும்பத்தினருடன்  லதா மங்கேஷ்கர். (பழைய படங்கள்)

++++++++++++++++++++++++++++++++

 

லதா மங்கேஷ்கருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா மற்றும் பத்ம பூஷன், பத்ம விபூஷன் மற்றும் தாதா சாகேப் பால்கே விருதுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இரங்கல் செய்தி:

 

வைகோ (மதிமுக)

லதாவின் குரல் விண்ணில் கலந்து இருக்கின்றது
எந்தக் காலத்திலும் அவருக்கு அழிவு இல்லை

வைகோ புகழ் ஆரம்

இசை என்றாலே புகழ். அந்த இசைத்துறையில் புகழ்க்கொடி நாட்டி, இன்று நம்மை எல்லாம் கண்ணீரில் ஆழ்த்தி விடைபெற்றுள்ளார் இசைக்குயில் லதா மங்கேஷ்கர்.

அவருடைய பாடல்கள், அவரது குரலில் கேட்கும்போது, அது நம்மை எங்கோ இழுத்துச் செல்லும்.

கோவா மாநிலத்தில் மங்கேஷ்கர் கிராமத்தில் பிறந்த லதா, 1942 ஆம் ஆண்டு, 13 ஆவது வயதில் பாடத் தொடங்கினார். இசைதான் அவரது மூச்சு. ஏறத்தாழ 80 ஆண்டுகளாகப் பாடினார் பாடினார் பாடிக்கொண்டே இருந்தார்.

இசைக்கு எல்லைகள் இல்லை, எந்தத் தடையும் இல்லை. எனவே, இந்தியாவின் அத்தனை மொழித் திரைப்படங்களிலும் அவர் பாடினார். அந்தக் காலத்தில், வானொலிகளில் தமிழ்நாடு முழுமையும் அவரது பாடல்கள் ஒலித்தன.

நான் ஒரு இசை ரசிகன். எத்தனையோ சோதனைகளுக்கு இடையில் எனக்கு ஆறுதலாக இருப்பது இசைதான். மாணவப் பருவத்தில் சென்னையில் எத்தனையோ ஆங்கிலத் திரைப்படங்களைப் பார்த்து இருக்கின்றேன். இந்திப் படங்களையும் பார்த்து இருக்கின்றேன். எனக்கு அந்த மொழி புரியாவிட்டாலும், லதா மங்கேஷ்கரின் பாடல்களும், அவரது இனிய குரலும் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும். உயிரோட்டமான குரல் அது. உணர்ச்சிகளின் கலவையாக ஒலித்தது.

அவர் தமிழிலும் பாடினார். வானரதம் திரைப்படத்தில், எந்தன் கண்ணாளன் கடல் நோக்கிப் போகின்றான் என்று அவர் பாடிய பாடலை இன்றைக்கும் யூடியூப் காணொளியில் பார்க்க முடிகின்றது.

அவர் பெற்ற விருதுகளைக் கணக்கிட முடியாது. இந்தியாவின் மிக உயரிய பாரத் ரத்னா விருதையும் பெற்றவர். ஆனால், அந்த விருதுகளை விட, தன் குரலால் ஏழை எளிய அடித்தட்டு மக்களுக்கு அவரது குரல் அளித்து வந்த ஆறுதல்தான் மிகப் பெரியது. அளவிட முடியாதது.

அவரது குடும்பமே இசைக்குடும்பம்தான். அவரது தங்கை ஆஷாவும் புகழ் பெற்ற பாடகியாகத் திகழ்கின்றார்.

கானக்குயில் லதா மங்கேஷ்கர் அவர்கள் இன்று நம்மை விட்டுப் பிரிந்தாலும், அவரது இனிய குரல் அடங்கி விடாது.

காற்றில், விண்வெளியில் கலந்து இருக்கின்ற அந்தக் குரல் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும், அடுத்தடுத்த தலைமுறைகளையும் கவரும்…அவர்களது நெஞ்சங்களில் ஊடுருவிப் பாயும் என்பது திண்ணம்.

திசை தெரியாத வாழ்க்கையில், இசைக்குயிலாக இடம் பிடித்து இருப்பவர் லதா மங்கேஷ்கர் ஆவார்.

இசைக்குயில் லதா மங்கேஷ்கர் புகழ், ஏழிசையாய், இசைப்பயனாய், என்றென்றும் நிலைத்து இருக்கும்.

====

வீரமணி திஒரவிடர் கழகம்):

-மராத்திய மாநிலத்தில் பிறந்து, இசைத் துறையில் உலகப் புகழ்பெற்ற இசைக் குயில், இந்தியாவின் நைட்டிங்கேல் என்று புகழ் பெற்ற லதா மங்கேஷ்கர் (வயது 92) அவர்கள், உடல் நலக்குறைவால் மும்பையின் பிரபல மருத்துவமனை ஒன்றில் இன்று (6.2.2022) விடியற்காலை காலமானார் என்ற செய்தி – மிகவும் துயரத்திற்குரியதாகும்.

ஹிந்தி, மராத்தியில் பாடத் துவங்கி புகழ் ஏணிக்குச் சென்ற அந்த அம்மையார் தமிழிலும் சிறப்பாகப் பாடியுள்ளார் என்பது பெருமைக்குரிய ஒன்று.

தனக்கென வாழாது, தான் திரட்டிய செல்வத்தை மக்களுக்குப் பயன்படக்கூடிய வகையில் அறப்பணிகளிலும் ஈடுபட்ட மனிதநேயம் மிக்கவர்.

அவரது இழப்பு நாட்டிற்கும், இசை உலகத்திற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு!

அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர், இசை ரசிகர்கள் அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

-======

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி:

 

Related posts

ஆஹா நிறுவனர் முதல்வருடன் சந்திப்பு

Jai Chandran

தயாரிப்பாளர் சாரதா காலமானார்

Jai Chandran

Sarath Starring Rajesh M Selva Directorial “IRAI” On OTT Platform; Radhika Producing the Web Series

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend