Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இயக்குனர் வி சேகர் உடல் சொந்த ஊரில் இறுதிச்சடங்கு

பிரபல இயக்குநர் வி.சேகர் உடல்நல பாதிப்பால் காலமானார். அவருக்கு வயது 73. அவரது இறுதி சொந்த ஊரில் நடைபெற்றது.

இயக்குனர் வி சேகர் கடந்த சில நாட்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனில்லாமல் நவம்பர்14 அன்று.மாலை காலமானார். வி சேகரின் மறைவு திரை உலகினரையும் அவரது குடும்பத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது உடலுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்தனர்.

இயக்குனர் வி சேகர் ‘ நீங்களும் ஹீரோ தான்’ என்ற படம் மூலம் மூலம் கடந்த 1990 ம் ஆண்டு அறிமுகமானார். முதல் படமே அவருக்கு பெரிய வரவேற்பை பெற்று தராவிட்டாலும் நல்ல படம் என்ற பெயரைப் பெற்று அவரை திரையுலகம் திரும்பிப் பார்க்க வைத்தது. இதையடுத்து ‘பொண்டாட்டி சொன்னா கேட்கணும்’, ‘விரலுக்கேத்த வீக்கம்’, ‘வரவு எட்டணா செலவு பத்தணா’ போன்ற நடுத்தர மற்றும் குடிசைப்பகுதி மக்களின் வாழ்க்கையை சொல்லும் படங்களை உருவாக்கி வரவேற்பு பெற்றார்.

இயக்குனர் வி சேகர் திருவண்ணாமலை அருகே உள்ள நெய்வாநத்தம் கிராமத்தில் எஸ்.வெங்கடேசன் – பட்டம்மாள் தம்பதிக்கு பிறந்த இவர், திருவண்ணாமலையில் பியூசி படித்தார். ஏவிஎம் ஸ்டுடியோவில் கருப்பு வெள்ளை 16 எம்.எம். லேப்பில் உதவியாளராக 19 வயதில் வேலைக்கு சேர்ந்தார். பிறகு, மாநகராட்சி சுகாதார துறையில் 15 ஆண்டுகள் பணிபுரிந்தார். வேலை செய்துகொண்டே மாலை நேரத்தில் நந்தனம் கலை கல்லூரியில் பி.ஏ., பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ. படிப்பை முடித்தார்.

பின்னர், பகுதி நேரமாக எடிட்டர் லெனினிடம் உதவியாளராக சேர்ந்தவர், இயக்குநர் கே.பாக்யராஜின் உதவியாளர் கோவிந்தராஜ் இயக்கிய ‘கண்ண தொறக்கனும்சாமி’ படத்தில் உதவி இயக்குனர் ஆனார். பிறகு கே.பாக்யராஜின் உதவியாளராக இரண்டு ஆண்டுகள் கதை இலாகாவில் பணியாற்றினார்.
தனது வாழ்க்கையில் உறுதுணைபுரிந்த மாமா செ.கண்ணப்பனின் மகள் தமிழ்செல்வியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மலர்க்கொடி என்கிற மகளும், காரல் மார்க்ஸ் என்கிற மகனும் உள்ளனர்.
இயக்குனர் சேகர் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரில் நடைபெற்றது.

Related posts

சல்மானுடன் மோதல் அனுபவம்- இம்ரான் ஹாஷ்மி

Jai Chandran

பொல்லாத உலகின் பயங்கர கேம் பட ‘ரணகளம்’ பாடல் ப்ரோமோ வீடியோ

Jai Chandran

சுந்தர்.சி-யின் காபி வித் காதல் ஜூலை ரிலீஸ்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend