Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

பொய்க்கால் குதிரை ( பட விமர்சனம்)

படம்: பொய்க்கால் குதிரை

நடிப்பு: பிரபு தேவா, வரலட்சுமி சரத், பிரகாஷ்ராஜ், ஆழியா, ஜான் கொகேன், ஜெகன், ஷியாம், ரைசா வில்சன், ரியா

தயாரிப்பு: எஸ்.வினோத்குமார்

இசை: டி.இமான்

ஒளிப்பதிவு : பல்லு

இயக்கம்: சந்தோஷ் பி ஜெயகுமார்

பி ஆர் ஒ: யுவராஜ்

விபத்தொன்றில் மனைவியை பறிகொடுத்ததுடன் ஒரு காலையும் இழந்து தவிக்கும் கதிரவன் (பிரபுதேவா) தன் மகள் மகிழ் (ஆழியா) மீது உயிரையே வைத்திருக் கிறார். அவளுக்கு இதயத்தில் ஒரு பிரச்னை என்று சொல்லும் டாக்டர் 70 லட்சம் ரூபாய் இருந்தால் ஆபரேசன் செய்து குணப்படுத்தலாம் என்கிறார். பலரிடம் பணம் கேட்டும் கிடைக்கா தால் தொழில் அதிபரான ருத்ராவின் (வரலட்சுமி) குழந்தையை கடத்தி அவரிடம் 70 லட்சம் பெற்று அதை வைத்து தன் மகளின் ஆபரேஷனை நடத்த திட்டமிடுகிறார். ஆனால் கதிரவன் குழந்தையை கடத்துவதற்கு முன்பே வேறு யாரோ குழந்தையை கடத்திவிடுகின்றனர். அந்தப்பழி கதிரவன் மீது விழுகிறது. ஆனால் தான் குழந்தையை கடத்தவில்லை என்று புரியவைப்பதுடன் கடத்தப்பட்ட குழந்தையை மீட்டு தருவதாக ருத்ராவிடம் சொல்கிறார். குழந்தையை கடத்தியது யார்? கதிரவ னால் குழந்தையை மீட்க முடிந்ததா? அவரது மகளுக்கு ஆபரேஷன் நடந்ததா என்ற பல கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது கிளைமாக்ஸ்.

நடனப் புயல் என்று பட்டம் வாங்கிய பிரபு தேவா இப்படம் மூலம் நடிப்பு புயல் என்ற பட்டத்தை வாங்கிக் கொள்கிறார். ஒற்றை காலில் அவர் ஆடும் முதல் பாடலுக்கான நடனமே அரங்கை கைதட்டலால் நிரப்புகிறது.

தன் குழந்தைக்கு ஆப்ரேஷன் செய்ய வேண்டும் அப்போதுதான் உயிர் பிழைப்பாள் என்று டாக்டர்கள் கூறியதும் கண்கலங்கும் பிரபுதேவா மகள் உயிரை காக்க வரலட்சுமியின் குழந்தையை கடத்த திட்டமிடுவதும் அதற்காக ஸ்கெட்ச் போடுவதும் விறுவிறுப்பு. ஆனால் குழந்தையை வேறு யாரோ கடத்திவிட்டதாக தெரிந்ததும் வலிய தானே வரலட்சுமிடம் சிக்கியதும் அடுத்து எந்த போலீஸ் ஸ்டேஷனில் கட்டிவைத்து அடிக்கப்போகிறார்களோ என்ற பதட்டத்தை ஏற்படுத்துகிறார்.

வரலட்சுமியின் ஆட்களே அவரை கட்டிவைத்து அடித்து துன்புறுத்த அவரோ கடத்தி செல்லப்பட்ட குழந்தையை தானே கண்டுபிடித்து தருவதாக கூறி யார் கடத்தினார்கள் என்பதை கண்டறிய சி ஐ டி வேலை பார்த்து பல உண்மைகளை பிரபுதேவா வெளிச்சத்துக்கு கொண்டு வரும்போது டிவிஸ்டுக்கு மேல் டிவிஸ்ட் அதிர்வலைகளை ஏற்படுத்து கிறது.

கிளைமக்ஸில் ஒற்றை காலில் அவர் சண்டையிடும்போது ஆக்‌ஷன் ஹீரோவாகவே மாறிவிடுகிறார். இதுவரை இல்லாத அளவுக்கு சென்டிமென்ட் காட்சிகளிலும் மனதை கனமாக்குகிறார் பிரபுதேவா.

படத்தில் ஹீரோயின் கிடையாது. நட்புக்காக நடித்ததுபோல் ரைசா வில்சன், பிரகாஷ்ராஜ் நடித்திருக் கின்றனர்.
ஆஜானபாகு தோற்றத்தில் ஜான் கொகேன் என்ற புதுவில்லமன் கிடைத்திருக்கிறார்.

ருத்ரா என்ற பாத்திரத்தில் அலட்டல் இல்லாமல் நடித்து பொறுப்பான தாயாக மனதில் இடம் பிடிக்கிறார் வரலட்சுமி சரத். குழந்தை நட்சத்திரம் ஆழியாவின் நடிப்பும் அருமை. ஜெகன் ஒரு சஸ்பென்ஸ் பாத்திரத்தில் நடித்துள்ளார்.

எஸ்.வினோத்குமார் தயாரித்திருக் கிறார்.

அடலட் படங்களை இயக்கி வந்த சந்தோஷ் பி ஜெயகுமாரா இப்படி யொரு சென்டிமென்ட், ஆக்‌ஷன் கலந்த சஸ்பென்ஸ் படத்தை இயக்கியுள்ளார் என்று பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார். இப்படியொரு திறமையை வைத்துக் கொண்டு அவர் அடலட் படத்தை ஏன் இயக்கினார் என்ற கேள்வியையும் உரக்கவே கேட்க வைக்கிறார். பொய்க்கால் குதிரை என்ற நல்லதொரு படம் தந்து தன் பெயர் மீதிருந்த அடல்ட் இயக்குனர் முத்திரையை அழித்து கமர்ஷியல் இயக்குனராக பெயர் பெற்றிருக் கிறார்.

 

பிரபுதேவாவுக்காகவே ஸ்பெஷல் கவனம் செலுத்தி இசையில் அசத்தியிருக்கிறார் டி.இமான்.

பல்லுவின் ஒளிப்பதிவு மீட்டருக்கு மிகாமல் ஊடுருவியிருக்கிறது.

படத்தில் பல டுவிஸ் அண்ட் டர்ன்ஸ் இருந்தும் அதை குழப்பாமல் அழகாக கையாண்டிருக்கிறார் எடிட்டர் ப்ரித்தி மோகன்.

பொய்க்கால் குதிரை – பிரபுதேவா வின் பெயர் சொல்லும் படங்களின் பட்டியலில் இடம் பிடிக்கும்.

Related posts

சாலா (பட விமர்சனம்)

Jai Chandran

Varisi Second single video Needhanae will be released by D. Imman Tomorrow

Jai Chandran

ஒன்றிணைந்து மாற்றுவோம்: பா.ராஞ்சித்துக்கு உதயநிதி அழைப்பு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend