Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

பீட்ஸா3 தி மம்மி ( பட விமர்சனம்)

படம்: பீட்ஸா 3  தி மம்மி

நடிப்பு; அஸ்வின் காக்குமன்னு.‌பவித்ரா, கவுரவ்‌, கவிதா பாரதி,  அனுபமா, அபி நட்சத்திரா, வீரா, குராஷி, காளி வெங்கட்

தயாரிப்பு:  சி. வி. குமார்

இசை: அருண் ராஜ்

ஒளிப்பதிவு: பிரபு ராகவ்

இயக்குனர்: மோகன் கோவிந்த்

பி ஆர் ஒ: நிகில் முருகன்

பீட்ஸா ஓட்டல் நடத்தும் நலன் (அஸ்வின்) கயலை (பவித்ரா) காதலிக்கிறார். அதற்கு கயல் அண்ணன் போலீஸ் இன்ஸ்பெக்டர் எதிர்ப்பு தெரிவிக்கிறார். இந்நிலையில் பேஷன்  டிசைன் செய்யும் இளைஞனை  கயலுக்கு அவரது அண்ணன் மாப்பிள்ளை யாக தேர்வு செல்கிறார். அந்த மாப்பிள்ளையும் தொழில் அதிபர் ஒருவரும்  மர்மமாக இறக்கின்ற னர். இதற்கு நலன்தான் காரணம் என  போலீஸ் சந்தேகம் அடைந்து விசாரிக்கிறது. ஆனால்.இந்த கொலைகளை நலன் ஓட்டலில்.மறைந்திருக்கும் பேய்தான்  செய்கிறது என்ற அதிர்ச்சி தகவல்  தெரிய வருகிறது. ஓட்டலில் பேய் இருப்பது ஏன் , கொலைகள் செய்வது  ஏன் என்பதற்கு திகிலுடன்  படம் பதில் சொல்கி றது.

பழங்கால சிறிய சிலை ஒன்றை காட்டி அதில்தான் கெட்ட சக்திகள் முழுவதும் அடக்கி வைக்கப்பட்டி ருப்பதாக முதலிலேயே விளக்கம் அளிக்கப்பட்டு படம் தொடங்குவ தால் அந்த  சிலை எங்கிருக் கிறதோ அங்கு பேய் இருக்கும் என்ற லாஜிக்கை  பதிய வைக்கின்றனர்.

அஸ்வின் நடத்தும் பீட்ஸா ஓட்டலுக்குள் புகுந்த பேய் சமையல் அறையில் புதிய ஸ்வீட் செய்து வைத்து வியாபாரத்துக்கு உதவபோகிறது என்று பார்த்தால் அந்த ஸ்வீட்டை டெலிவரி செயச் செல்லும் அஸ்வின் கூடவே சென்று தொழில் அதிபரையும் ,  பேஷன்  டிசைனரையும் பேய் கொல்வது அதிர்ச்சி.

கொலைபழி அஸ்வின் மீது விழுவதால் பேயின் கொலை பழிக்கான காரணத்தை கண்டு பிடிக்க அஸ்வின்  டிடெக்டிவ் வேலை தொடங்கியதும் பிளாஷ்பேக்கில் மற்றொரு அம்மா மகள்  சென்ட்டிமென்ட் . கதை ஓபனாகிறது. ஆனால் எல்லோரும் யூகிக்கும் அளவுக்கு பிளாஷ் பேக் கதை  ரொம்பவே வீக்காக உள்ளது.

கேமராவின் பலம், காட்சி அமைப் பெல்லாம் பயமுறுத்துகிறது. கூடவே  திடீர் திடீரென்று வரும் இசையும் பயத்தை அதிகரிக் கிறது. ஓஹோ என்ற நடிப்பெல் லாம் எதுவும்.இல்லை நடிகர்களின் நார்மலான நடிப்பு எதார்த்தத்தை மெயின்டெய்ன் செய்கிறது

 

சி. வி. குமார் தயாரித்திருக்கிறார். இவரே ஒரு இயக்குனர் ஆனால் காட்சிகளுக்கு தரப்பட்ட முக்கியத். துவம் கதைக்கு தராதது ஏன் என்று புரியவில்லை.

பிரபு ராகவ் ஒளிப்பதிவும் அருண் ராஜ் இசையும்  படத்துக்கு பலம்.

இயக்குனர்: மோகன் கோவிந்த் படத்தை இயக்கியுள்ளார். இன்னமும் திரைக்கதையில்  தீவிர  திருப்பங்கள்  செய்திருக்க லாம்.

படத்தின் நீளம்  நெளிய  வைக்கிறது. இன்னமும் கத்தரிபோட்டு   ஷார்ப்பாக்களாம்.

பீட்ஸா 3  தி மம்மி – எதிர்பாரர்ப்பை  ஈடு செய்யத் தவறியிருக்கிறது.

 

 

 

 

 

Related posts

“டெவில்” பட மாளவிகா நாயர் ஃபர்ஸ்ட் லுக்

Jai Chandran

Actress Seetha Turned Utubet

Jai Chandran

டிமான்டி காலனி 2′ பட முழு உரிமையை வாங்கிய பாபி பாலச்சந்திரன்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend