Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பிசாசு 2’ ஆந்திரா, தெலங்கானா உரிமை பெற்ற தடயாரிப்பாளர்

இயக்குனர் மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு 2’ படத்தின் தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசம் திரையரங்கு விநியோக உரிமையை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்

ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் T.முருகானந்தம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் ‘பிசாசு 2’ திரைப்படத்தை வெற்றி இயக்குனர் மிஷ்கின் இயக்குகின்றார். இப்படத்தின் தெலுங்கு பதிப்பு ‘பிசாச்சி 2’ எனப் பெயரிடப்பட்டுள்ளது

தற்போது ‘பிசாச்சி 2’ படத்தின் தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசம் திரையரங்கு விநியோக உரிமையை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் சிரிஷ் அவர்களின் ஶ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த செய்தி தெலுங்கு திரையுலகில் கவனத்தை ஈர்த்துள்ளது.

கதையின் நாயகியாக ஆண்ட்ரியா நடிக்க உடன் பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.

பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார்.

Related posts

கூல் சுரேஷ், செந்தில் நடிக்கும் கேங்ஸ்டர் படம் தொடக்கம்

Jai Chandran

சல்மான், கத்ரீனா நடனத்தில் “டைகர் 3” முதல் பாடல் அதிர்வலை

Jai Chandran

Karnan Release announcement teaser tomorrow 11Am.

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend