Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

பீனிக்ஸ் (பட விமர்சனம்)

படம்: பீனிக்ஸ்

நடிப்பு: சூர்யா சேதுபதி, வரலட்சுமி, சம்பத், தேவதர்ஷினி, அபிநட்சத்திரா, விக்னேஷ், வர்ஷா, முத்துக்குமார்

தயாரிப்பு: ராஜலட்சுமி அனல் அரசு

இசை: சாம் சி எஸ்

ஒளிப்பதிவு : ஆர் வேல்ராஜ்

இயக்கம்: அனல் அரசு

பி ஆர் ஓ: ரியாஸ் கே அகமத், பாரஸ் ரியாஸ்

விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி இப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகியிருக்கிறார். முதல் படத்திலேயே அவரை காட்டாற்றில் தூக்கி போட்டிருக்கிறார்கள். எதிர்நீச்சலடித்து நெருப்பிலிருந்து மீண்ட பீனிக்ஸ் பறவை போல் தன்னை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக நிலை நிறுத்தி இருக்கிறார்.

வடசென்னை பகுதியில் தாய் மற்றும் அண்ணனுடன் வசிக்கும் 17 வயதான சூர்யா சேதுபதி அப்பகுதி எம்எல்ஏவை சரமாரியாக நடுரோட்டில் வெட்டி வீசியதால் சிறுவர் சிறைக்கு அனுப்பப்படுகிறார். சிறையில் அவரை கொல்வதற்கு கூட்டம் கூட்டமாக கூலிப்படையும, ரவுடி பட்டாளமும் ஆயுதங்களுடன் வருகிறது. அவர்களை தனி ஆளாக நின்று சூர்யா சேதுபதி அடித்து துவம்சம் செய்கிறார். ஆனாலும் கொலை முயற்சி தொடர்கிறது. வடக்கில் இருந்து இந்திய அளவில் பெரிய ரவுடிகள் சூர்யா சேதுபதியை கொல்வதற்கு அனுப்பப்படுகிறார்கள். அவர்களிடமிருந்து சூர்யாவால் தப்பிக்க முடிந்ததா? எம்எல்ஏவை சூர்யா வெட்டிக்கொள்வதற்கு என்ன காரணம் ? என்ற கேள்விகளுக்கு அனல் கக்க பதில் அளிக்கிறது பீனிக்ஸ் கிளைமேக்ஸ்.

சூர்யா சேதுபதி முதல் படத்திலேயே 16 அடி அல்ல 32 அடி பாய்ச்சல் காட்டி இருக்கிறார். இளம் ரத்தம் சூடேறி பீரிட்டால் அது எப்படி சூட்டை கிளப்புமோ அப்படி ஒரு அக்னி ஹீரோவாக முதல் படத்திலேயே தன்னை களம் இறக்கி இருக்கிறார் சூர்யா சேதுபதி.

முகத்தில் கோணியை கட்டி ஒரு கண் மட்டும் தெரியும் வகையில் சூர்யா சேதுபதியை போலீசார் அழைத்து வரும் அந்த முதல் காட்சிலேயே ஒற்றை கண்ணிலிருந்து கொப்பளிக்கும் கோபம்.. இது கடைசி வரை ஒரு அனலை கக்கப்போகிறது என்பதை கோடிட்டு காட்டுகிறது.

சிறைக்குள் தன்னை தாக்க வரும் அடியாட்கள் ரவுடி கூட்டம், கூலிப்படை என அத்தனை ஏவல் படைகளையும் தனி ஆளாக நின்று எலும்பு நொறுங்கும் விதத்தில் அடித்து நொறுக்கும் போது பார்க்கும் ரசிகர்களுக்கு எலும்பு வலிக்கிறது என்றால் நடித்த சூர்யா சேதுபதிக்கும் உடன் நடித்த ஸ்டண்ட் வீரர்களுக்கும் எத்தனை எலும்பு உடைந்திருக்கும் என்பதை கேட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒன் மேன் ஆர்மியாக சூர்யா சேதுபதியை நிரூபித்து காட்ட முடியும் என்று இயக்குனர் அனல் அரசு எடுத்திருக்கும் முயற்சியில் 100% வெற்றி பெற்றிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அனல் அரசுவை அப்படியே தனக்குள் உள்வாங்கிக் கொண்டு ஆக்சன் காட்சிகளில் அனலாக சுழன்றிருக்கும் சூர்யா சேதுபதி ஆக்ஷன் காட்சிகளில் செண்டம் வாங்கியிருக்கிறார்.

நடிப்பை பொருத்த வரையில் இன்னும் அவருக்கு நிறைய வாய்ப்புகள் காத்திருக்கிறது அடுத்தடுத்த படங்களில் அவர் அதிலும் வென்று காட்டுவார் என்று எதிர்பார்க்கலாம்.

ராஜலட்சுமி அனல் அரசு படத்தை தயாரித்திருக்கிறார்.

வரலட்சுமி, சம்பத், வர்ஷா, முத்துக்குமார் ஆகியோரும் தங்கள் பங்கை போட்டு கதையில் டென்ஷன் ஏற்றி விடுகிறார்கள்.

ஏராளமான படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றிய அனல் அரசு இப்படத்தை இயக்கியிருக்கிறார். கதறவிடும் ஆக்ஷன் காட்சி மட்டும் இல்லாமல் கமர்சியல் அம்சத்துடன் ஒரு ஆக்சன் படத்தை பக்காவாக  தர முடியும் என தரமான சைகை காட்டி ஜெயித்திருக்கிறார்.

சாம் சி எஸ் இசை எரியும் ஆக்சன் காட்சிகளுக்கு பின்னணி இசை மூலம் பெட்ரோல் ஊற்றி அனல் கக்க வைத்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் ஆர் வேல்ராஜ் கால்ஷீட் கிடைப்பது கடினம். கால்ஷீட் கொடுத்து கையில் கேமராவை எடுத்து விட்டால் சம்பவம் செய்யாமல் முடிக்க மாட்டார் இதிலும் அதைத்தான் செய்திருக்கிறார். அத்துடன் ஜெயில் வார்டனாகவும் நடித்துள்ளார்.

அதிகமான ஆக்சன், சமமான சென்டிமென்ட் என்று பிரவீன் கே எல் எடிட்டிங் காட்சிகளை மின்னல் வேகத்தில் கொண்டு சென்று ரசிகர்களை இருக்கையில் கட்டி போடுகிறார்.

பீனிக்ஸ் – ஆக்ஷன் நெருப்பில் நீந்தும் பறவை.

By

ஜெயச்சந்திரன். க.

Trendingcinemasnow.com

Related posts

முதற்கனல் ( பட விமர்சனம் )

Jai Chandran

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி68

Jai Chandran

Salaar Part 1 collected 402 CR. Worldwide

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend