Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

’பேராண்மை’ பட இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்..

ஜெயம் ரவி நடித்த பேராண்மை,  ஜீவா நடித்த ஈ,  ஷாம், குட்டி ராதிகா நடித்த இயற்கை,  ஆர்யா, ஷாம், விஜய் சேதுபதி நடித்த புறம்போக்கு என்கிற பொதுவுடமை படங்களை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன் (வயது 61). தற்போது விஜய் சேதுபதி,, ஸ்ருதி ஹாசன் நடிக்கும் லாபம் படத்தை இயக்கி உள்ளார். இப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை.

இயக்குனர் எஸ்.பி,ஜானநாதனுக்கு சில தினங்களுக்கு முன் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.  உடனடியாக அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு மூளையில் நரம்புகள் பாதிக்கபட்டு செயலிழந்ததாக தெரிகிறது,

ஜனநாதனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும்  சிகிச்சை பலனில்லாமல் இன்று காலை 10.07 மணி அளவில் ஜனநாதன் காலமானார்.  அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related posts

STR launches trailer of Love Today

Jai Chandran

சசிகுமாரின் ”கொம்புவச்ச சிங்கம்டா” பட இயக்குனர் எஸ்,ஆர் பிரபாகரன் பேட்டி

Jai Chandran

8 மொழியில் ஜெயசுதா மகன் நிஹார் நடிக்கும் “ரெக்கார்ட் பிரேக்”

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend