Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

பேச்சி (பட விமர்சனம்)

படம்:  பேச்சி

நடிப்பு:  காயத்ரி, பால சரவணன் , தேவ், பிரீத்தி, ஜனா, சீனியம்மாள் மகேஷ்வரன் கே, சாந்திமணி

தயாரிப்பு: கோகுல் பினாய், ஷயிக் முஜீப், ராஜராஜன், சஞ்சய் சங்கர், தனிஷ்டன் ஃபெர்னாண்டோ

இசை : ராஜேஷ் முருகேசன்

ஒளிப்பதிவு: பார்த்திபன்

இயக்கம்: ராமசந்திரன்  பி.

பி ஆர் ஒ :தர்மதுரை, சுரேஷ்

காயத்ரி, தேவ் உள்ளிட்ட நண்பர்கள் 5 பேர் தடை செய்யப் பட்ட காட்டுப்பகுதிக்கு செல்கின் றனர். அவர்களுக்கு வழிகாட்டியாக பால  சரவணன் செல்கிறார். காட்டுக்குள் சில பகுதிகளுக்கு  செல்ல முயலும்   காயத்ரி மற்றும்  அவரது நண்பர்களை பால சரவணன் தடுக்கிறார். இதில் கோபம் அடையும்  காயத்ரி   பால சரவணனை திட்டுகிறார். திடீரென்று அமானுஷ்யங்கள் அரங்கேறுகிறது. மந்திர  கட்டுபோடப்பட்டு ஆணியில் அறையப்பட்டிருந்த சூன்யகாரி  கிழவி விடுபட்டு வெளியே வருகிறாள். காட்டுக்குள் வந்த நண்பர்களை  ஒவ்வொருவராய் பலி வாங்குகிறாள். அந்த சூன்ய  கிழவியின் ஆட்டம் எந்த எல்லை வரை செல்கிறது அதற்கு யாராவது முடிவு கட்டுகிறார்களா அல்லது தொடர்கதை ஆகிறதா என்பதற்கு கிளைமாக்ஸ். பதில் சொல்கிறது.

படத்தில் காயத்ரி, பால சரவணன் இருவரும் தெரிந்த முகங்களாக இருக்கிறார்ககள் மற்றவர்கள் பெரும்பாலும் புதுமுகம் என்றாலும் எந்த வித்தியாசமும் இல்லாமல் கதாபாத்திரத்திற்கு ஏற்ப அழுத்தமான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்.

தடை செய்யப்பட்ட காட்டுப்பகு திக்கு ரகசியமாக பாய் பிரண்டு களுடன் வரும் காயத்ரி கோஷ்டியை  பால.சரவணன் காட்டுப்பகுதிக்கு அழைத்து செல்ல தொடங்கியவுடன் கதையும் தொடங்கி விடுகிறது.

இது தடை செய்யப்பட்ட பகுதி என்ற இடத்தில் கட்டப்பட்டிருக்கும் கோயில் மணிகளை காயத்ரி கோஷ்டி உடைத்து நொறுக்கியதும் அதைக் கண்டு அலறும்  பால சரவணன் “இதை ஆண்டாண்டு காலமாக கட்டி வைத்திருக் கிறார்கள் பேச்சி சூனிய கிழவிக்கு கட்டு போடப்பட்டு கட்டப்பட்ட இந்த மணிகளை உடைத்ததால் ஆபத்து நெருங்கி விட்டது” என்று கூறும் போது அரங்கில் ஒரு பதற்றம் தொற்றிக் கொள்கிறது

அடுத்து எந்த நிமிடத்தில் என்ன நடக்குமோ என்ற திகிலுடன் காட்சிகள் நகர்ந்தாலும் அந்த அளவுக்கு பயமுறுத்தாமல் இயக்குனர் காட்சிகளை கொண்டு சென்றிருப்பது படத்திற்கு;  பெரிய ப்ளஸ்.

சூனியக்காரி வாழ்ந்த வீட்டுக்குள் செல்லும் இரண்டு பேர் உயிர் பிழைத்து  வந்தார்கள் என்று காட்டிவிட்டு திடீரென்று அவர்கள் இருவரும் மாயமாகி விடுவதும் அதற்கு பதிலாக  அந்த இடத்திற்கு சென்ற பெண் மட்டும் சித்தபிரம்மை பிடித்தவர் போல் நடுங்கி அமர்ந்திருக்கும் காட்சி  ஷாக்.

அதேபோல் போட்டோகிராபருக்கு வழிகாட்டுவதாக கூறி பால சரவணன் முன்னே ஓடுவதும் ஆனால் கேமராவில் பார்க்கும் போது பால சரவணன் அதே இடத்தில் நிற்பது போல் தெரிவதும் இன்னொரு சஸ்பென்ஸ் காட்சி.

இப்படி படிப்படியாக சஸ்பென்ஸ் காட்சிகளை இயக்குனர் எதிர்பார்க்காத நேரங்களில் ஓபன் செய்து ரசிகர்களை கண் அசரவிடாமல் இருக்கையில் கட்டி போட்டு விடுகிறார்.

நண்பர்கள் ஒவ்வொருவராக பலியாவது ஏன் என்பதற்கு இயக்குனர் பிளாஷ்பேக்கில் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு குட்டி கதையை சொல்லும்போது இப்படி கூட நடக்குமா என்று சந்தேகம் எழுகிறது. காயத்ரி கதாபாத்திரத் தையும் ஒரு சஸ்பென்ஸ் பாத்திரமாக அமைத்திருப்பது இன்ப அதிர்ச்சி.

கோகுல் பினாய், ஷயிக் முஜீப், ராஜராஜன், சஞ்சய் சங்கர், தனிஷ்டன் ஃபெர்னாண்டோ படத்தை தயாரித்திருக்கின்றனர்.

இயக்குனர் ராமச்சந்திரன் பி படத்தை வழக்கமான பேய் படம் என்று சொல்லாமல் சூனியக்காரி கதை என்று ஃபார்முலாவை மாற்றி காட்சிகளை அமைத்தி ருப்பது புத்திசாலித்தனம்.

ராஜேஷ் முருகேசன் இசை ஒரேயடியாக அரங்கை திகிலில் ஆழ்த்தி விடாமல் தேவைக்கேற்ப ஒலித்திருப்பது பொருத்தம்

பார்த்திபனின் கேமரா ரசிகர்கள் ஒவ்வொருவரையும் காட்டுக்குள் இறங்கி நடக்கும் அனுபவத்தை தந்திருப்பது வித்தியாசம்.

பேச்சி – அசரவைப்பாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Related posts

பிரபாஸின் ‘சலார்’ வெளியிட்டு தேதி அறிவிப்பு

Jai Chandran

தர்ஷன் நடிக்கும் கிரைம் த்ரில்லர் சரண்டர்

Jai Chandran

சமக தலைவர் சரத்குமார் ரமலான் வாழ்த்து..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend