Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பத்ம விருது எனக்கானது மட்டுமல்ல -அஜீத் அறிக்கை மற்றும் நடிகர் சங்கம் வாழ்த்து

நடிகர் அஜீத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

குடியரசுத் தலைவர் அவர்கள் அறிவித்த மதிப்புமிக்க பத்ம விருதைப் பெறுவதில் நான் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.

இந்த மதிப்புமிக்க கெளரவத்திற்காக,  குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்மு மற்றும் மாண்புமிகு பிரதமர் தநரேந்திர மோடி ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நமது தேசத்திற்கு எனது பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளதை பாக்கியமாகக் கருதுகிறேன்.

இந்த அங்கீகாரம் தனிப்பட்ட முறையில் எனக்கானது மட்டுமல்ல. இதனை சாத்தியப்படுத்திய பலரது உழைப்பும் இதில் அடங்கும் என்பதை உணர்வேன். எனது மதிப்பிற்குரிய திரைத்துறையினர், திரைத்துறை முன்னோடிகள், என் நண்பர்கள் உட்ப அனைவருக்கும் எனது நன்றி. உங்கள் உத்வேகம், ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு ஆகியவை எனது பயணத்தில் உறுதுணையாக இருந்ததோடு எனக்கு விருப்பமாக இருந்த மற்ற விஷயங்களிலும் கவனம் செலுத்த உதவியது.

பல ஆண்டுகளாக எனக்கு ஆதரவு கொடுத்த எனது மோட்டார் ரேசிங் நண்பர்கள் மற்றும் ஸ்போர்ட்ஸ் பிஸ்டல், ரைஃபிள் ஷூட்டிங் நண்பர்களுக்கும் நன்றி. மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் (MMSC), இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் (FMSCI), தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT), இந்திய தேசிய ரைஃபிள் சங்கம் மற்றும் சென்னை ரைஃபிள் கிளப் ஆகியவை ஊக்கமளித்ததற்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது குடும்பம் மற்றும் நண்பர்களின் அளவற்ற அன்பும் ஆதரவும்தான் எனது பலம். நன்றி!

இந்த நாளைக் காண என் மறைந்த தந்தை இப்போது என்னுடன் இருந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனாலும், நான் செய்யும் எல்லாவற்றிலும் அவரது வழிகாட்டுதல் இருக்கிறது என்பதில் அவர் பெருமைப்படுவார். என் அம்மாவின் நிபந்தனையற்ற அன்புக்கும், நான் என்னவாக விரும்பினேனோ அதுவாக மாற உதவிய அவரது தியாகங்களுக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்.

கடந்த 25 ஆண்டுகளில் எனது அனைத்து சந்தோஷங்களிலும் வெற்றிகளிலும் துணையாக இருந்த என் மனைவியும் தோழியுமான ஷாலினி எனது பக்கபலம். என் குழந்தைகள் அனோஷ்கா மற்றும் ஆத்விக்தான் என் பெருமை மற்றும் என் வாழ்க்கையின் ஒளி! சிறப்பாக செயல்படுவது மற்றும் சரியாக வாழ்வது எப்படி என்பதற்கு ஒரு முன்மாதிரியாக இருக்க என்னை ஊக்குவிக்கிறீர்கள்.

எனது ரசிகர்கள், ஆதரவாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரும் என் மீது வைத்திருக்கும் அசைக்க முடியாத அன்பும் ஆதரவுமே என்னை அர்ப்பணிப்புடன் இருக்க உந்துகிறது. இந்த விருது என்னுடையது போலவே உங்களுக்கும் உரியது.

இந்த கெளரவத்திற்கும், இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கும் அனைவருக்கும் நன்றி. நேர்மையுடனும் ஆர்வத்துடனும் தொடர்ந்து செயல்பட நான் உறுதிபூண்டுள்ளேன். என்னுடைய பயணத்தில் நான் உற்சாகமாக இருப்பதைப் போலவே உங்கள் அனைவரது பயணமும் உற்சாகமாகவும் வெற்றிகரமாகவும் அமைய வாழ்த்துக்கள்!

இவ்வாறு அஜீத்குமார் கூறி உள்ளார்.

நடிகர் சங்கம் வாழ்த்து:

நடிகர் அஜித்குமாருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது அது வருமாறு:

தனக்கென்று ஒரு தனி பாணியை வகுத்து போட்டிகள் மிகுந்த திரைத்துறையில் உச்சத்தில் ஒரு இடம் பிடித்து, அரியதொரு போட்டியில் உலக வரைபடத்தில் தன் பெயரை பொன்னேட்டில் பதித்த நண்பர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் கௌரவம் கிடைத்ததில் தென்னிந்திய நடிகர் சங்கம் பெருமை கொள்கிறது..

நடனமும், நடிப்பும் அடையாளமாய் விளங்கிய குடும்பத்தில் தோன்றி, அவ்வடையாளங்களை இன்னும் ஆழப்படுத்திக் கொண்டதோடு மட்டுமல்லாமல் பரதம் என்னும் கலையை பரீட்சித்து, புது வடிவம் கண்டெடுத்து, அதைப் பாரெங்கும் புகழ் மணக்க ஆடிப் பெருமை சேர்த்த சகோதரி ஷோபனாவுக்கு பத்ம பூஷன் கௌரவம் கிடைத்ததில் தென்னிந்திய நடிகர் சங்கம் பேரானந்தம் கொள்கிறது..

#தென்னிந்தியநடிகர்சங்கம்

 

 

Related posts

Pongal Special Karakki Music Video featuring

Jai Chandran

டிராகன் நடிகர் வி ஜே சித்து இயக்குநராக அறிமுகமாகும் ‘டயங்கரம்’

Jai Chandran

Actor Vemal gets Covid-19 Vaccine

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend