படம்: மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்
நடிப்பு: ஹரி பாஸ்கர், லாஸ்வியா, ரயான், இளவரசு மற்றும் பலர்
தயாரிப்பு: ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி
இசை: ஓஷோ வெங்கட்
ஒளிப்பதிவு: குலோத்துங்க வர்மன்
இயக்கம்: அருண் ரவிச்சந்திரன்
பிஆர்ஓ: விஜய் முரளி, S2 சதீஷ்
2k கிட்ஸ்களின் லவ் ஸ்டோரியாக உருவாகி இருக்கிறது” மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்”
கல்லூரியில் படிக்கும்போது லாஸ்வியா பின்னால் காதலிப்பதாக சுற்றுகிறார் ஹரிபாஸ்கர். அப்போதே.அவரை தூக்கி எறிந்து விடுகிறார் லாஸ்வியா. சில வருடங்களுக்கு பிறகு வேலையில்லாமல் இருக்கும் ஹரி பாஸ்கருக்கு லாஸ்வியா வீட்டில் ஹவுஸ் கீப்பிங் வேலை கிடைக்கிறது. மீண்டும் லாஸ்வியாவை சந்திக்கும் ஹரி பாஸ்கர் மறுமுறை காதலை வெளிப்படுத்துகிறார். அப்போதும் ஹரி பாஸ்கரை அவமானப்படுத்தி வேறு ஒருவரை திருமணம் செய்ய லாஸ்வியா முடிவு செய்கிறார். இதன் முடிவு என்னவாகிறது என்பதுதான் கிளைமாக்ஸ்.
இரண்டு வருடத்திற்கு முன்பு லவ் ஸ்டோரி என்ற படம் வந்தபோது 2k கிட்ஸ்களின் லவ் ஸ்டோரியாக அமைந்தது அதே பாணியில் தற்போது உருவாகி இருக்கிறது மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்.
அந்த படத்தில் என்னவெல்லாம் டயலாக்காக கூறப்பட்டதோ அதெல்லாம் இந்த படத்தில் கண் முன் சீனாக வந்து 2k கிட்ஸ்களின் காட்சிகளாக விரிகிறது.
லாஸ்வியா வீட்டில் மாதச் சம்பளத்துக்கு ஹவுஸ் கீப்பிங் வேலை செய்யும் ஹரி பாஸ்கர் அவர் தன்னுடன் நெருங்கி பழகுவதை பார்த்து தன்னை லாஸ்வியா காதலிப்பதாக எண்ணிக் கொள்வது வெறும் கற்பனை எடுத்துக்கொள்ள முடியாது. எந்தப் பெண் அப்படி செய்தாலும் அந்த இளைஞன் தன்னை அந்தப் பெண் காதலிப்பதாகத்தான் எடுத்துக் கொள்வார் அதைத்தான் ஹரி பாஸ்கர் செய்கிறார்.
லவ் யூ மேன் என்று சொல்வதற்கும் ஐ லவ் யூ என்று சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்று லாஸ்வியா ஒரு புது அர்த்தத்தை காதலுக்கும், நட்புக்கும் பிரித்து வைப்பதில் லாஜிக்கிருப்பதாக தெரியவில்லை.
லவ் யூ மேன் என்று சொல்லிவிட்டு இறுக கட்டி அணைத்தால் அது காதலிப்பதாக அர்த்தம் இல்லை என்று இயக்குனர் சொல்வது நம்ப தகுந்ததாக இல்லை.
காட்சியை நீட்டிப்பதற்காக காதலிப்பாக காட்டுவதும் பிறகு நட்புக்காக பழகுவதாக காட்டுவது மீண்டும் ஒரு காதல் , இதற்கிடையில் இன்னொரு காதல், இன்னொரு திருமண பேச்சு என்று லாஸ்வியா அடுக்கிக் கொண்டே போவதெல்லாம், இது என்னடா காதல் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
ஹரி பாஸ்கர் எத்தனை முறைதான் காதல் தோல்வி அடைவார் ? . எப்படியாவது ஒரு காதலியை கை பிடிப்பது என்று ஹரி பாஸ்கர் அலைவதெல்லாம் சினிமா தனம் என்றாலும் காட்சிகளை ரசிக்க முடிகிறது.
டாய்லெட் கழுவியவன், மாச சம்பளத்துக்கு வேலை பார்த்த வேலைக்காரன் என்று சொல்லி கன்னத்தில் அறை விட்ட பிறகும் இன்னொருவனை காதலிக்கிறேன் அவனைத்தான் திருமணம் செய்யப்போகிறேன் என்று சொல்லிவிட்டு பின்னர் அவன் நடத்தை சரி இல்லை என்று சொல்லிவிட்டு மீண்டும் செகண்ட் சாய்சாக ஹரி பாஸ்கரை காதலிப்பதாக லாஸ்வியா சொல்வதும் அப்படி சொன்னவுடன் அவரை ஹரி ஏற்றுக் கொள்வதெல்லாம் இருமனம் இணைந்த காதலாக தெரியவில்லை. இதற்கிடையில் வைத்திருக்கும் அம்மா சென்டிமென்ட், தங்கை சென்டிமென்ட் எல்லாம் சேர்ந்து ஹரிபாஸ்கருக்கும் இயக்குனருக்கும் கை கொடுக்கிறது.
தற்போதுள்ள கலாச்சார சீர்கேடுகளை காட்டும் இயக்குனர் அதற்கெல்லாம் ஒரு சவுக்கடி கொடுத்து தான் விரும்பியவரை விட தன்னை விரும்பியவனை கைப்பிடித்து மணவாழ்க்கை அமைக்க வேண்டும் என்று ரஜினி ஒரு படத்தில் சொல்வதையும் கருவாக்கி கிளைமாக்ஸ் அமைத்திருக்கும் அருண் ரவிச்சந்திரன் புத்திசாலித்தனம் வெற்றி பெற்றிருக்கிறது.
ஓஷோ வெங்கட் இசை தாறுமாறு . குலோத்துங்க வர்மன் ஒளிப்பதிவு பளபளக்கிறது.
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி தயாரித்திருக்கிறார்.
மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் – காதல் சித்து விளையாட்டு.