Lபடம்: பி டி சார்
நடிப்பு: ஹிப் ஹாப் தமிழா ஆதி, காஷ்மிரா பர்தேசி, அனிகா, பிரணிகா, மதுவந்தி, பாக்கியராஜ், பிரபு, தியாகராஜன், பாண்டியராஜ், தேவதர்ஷனி ராஜா இளவரசு
தயாரிப்பு: ஐசரி கே. கணேஷ்
இசை: ஹிப் ஹாப் தமிழா ஆதி
ஒளிப்பதிவு: மாதேஷ் மாணிக்கம்
இயக்கம்: கார்த்திக் வேணுகோபால்
பி ஆர் ஓ: யுவராஜ்
பள்ளியில் பி.டி வாத்தியாராக இருக்கிறார் ஆதி. அவருக்கு இங்கிலீஷ் டீச்சர் காஷ்மிரா மீது காதல். இந்த காதல் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க மறுபக்கம் அனிகா பிரசசினை தொடங்குகிறது
திடீரென்று மானபங்க படுத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இந்த பிரச்சினையை ஆதி கையில் எடுத்து கோர்ட் வரை கொண்டு செல்கிறார். தொழிலதிபர் தியாகராஜன் மீது வழக்கு தொடரப்படுகிறது. இதன் முடிவு என்ன என்பதுதான் இப்படத்தின் ஷாக்கான கிளைமாக்ஸ்.
இன்னமும் சிறுபிள்ளைபோல் விளையாட்டுத்தனமாக நடித்துக் கொண்டிருப்பதில் ஆதி தான் முதலிடம் பிடிப்பார் போலிருக்கிறது. இந்த படத்திலும் பள்ளி குழந்தைகளுடன் சேர்ந்து கொட்டம் அடிக்கிறார், இன்னொரு சிறுவனை போட்டியாக எண்ணி அவர் காஷ்மீராவை காதலிப்பதாக நினைத்து அவனுடன் போட்டி போடு கிறார். இப்படியே விளையாட்டுத்த னமாக காட்சிகள் இடைவேளை வரை செல்கிறது.
இடைவேளைக்குப் பிறகு ஒரு பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தை கையில் எடுக்கிறார் ஆதி. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவராக அனிகா நடித்திருக்கிறார்.
அனிகா தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார் என்று கேள்விப்பட்டவுடன் தொழிலதிபர் தியாகராஜன் மீது ஆத்திரம் கொண்டு அவரை ஆதி கன்னத்தில் மாறி மாறி அறைவது ஷாக்.
அனிகா விவகாரம் கோர்ட்டுக்கு செல்கிறது. வக்கீல்களாக பிரபு, மதுவந்தி நடித்திருக்கின்றனர். ஆனால் வாதங்களில் சூடு சுவை இல்லை. நீதிபதியாக கே பாக்யராஜ் நடித்திருக்கிறார். அவர் திடீரென்று காமெடியனாக மாறி தன்னைப் பற்றி ஊருக்கு சொல்லும்படி தொகுப்பா ளரிடம் கூறுவது நகைச்சுவை.
தேவதர்ஷினி பட்டிமன்றம் ராஜா இளவரசு உள்ளிட்ட இன்னும் பலர் நடித்திருக்கின்றனர்.
ஐசரி கே கணேஷ் படத்தை தயாரித்திருக்கிறார்
ஹிப்ஹாப் ஆதி ஹீரோவாக நடித்திருப்பதுடன் இப்படத்திற்கு இசையும் அமைத்திருக்கிறார் அவர் இசையமைத்திருக்கும் 25 வது படம் இது. குட்டி பிசாசு பாடல் நாவில் ஓட்டிக் கொள்கிறது.
கார்த்திக் வேணுகோபால் படத்தை இயக்கியிருக்கிறார் கிளைமாக்ஸ் அழுத்தமாக தெரிய வேண்டும் என்பதற்காக மற்ற காட்சிகளை இலகுவாக கையாண்டு இருக்கிறார் இயக்குனர். பீட்டி வாத்தியார் இங்கிலீஷ் டீச்சர் காதல் கதையை இன்னமும் தொடர்ந்து இருந்தால் காட்சிகளில் சுவாரசியம் இருந்திருக்கும்.
ஹிப்ஹாப் ஆதியை பயந்தவராக காட்டிவிட்டு திடீரென்று அவரை ரவுடிகளை துவம்சம் செய்யும் ஆக்சன் ஹீரோவாக காட்டுவதை ஏற்க முடியவில்லை.
பி டி சார் – இளம் பெண்களுக்கு படிப்பினை.

