Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஒ எம் ஜி ( பட விமர்சனம்)

படம்: ஒ எம் ஜி (OMG)

நடிப்பு: சன்னி லியோன், சதீஷ், யோகிபாபு, தர்ஷன் குப்தா, மொட்டை ராஜேந்திரன், ரவிமரியா, ரமேஷ் திலக், அர்ஜூனன், தங்கதுரை

தயாரிப்பு:
டி.வீரா சக்தி, சசிகுமார்

இசை:ஜாவித் ரியாஸ்

ஒளிப்பதிவு: தீபக் டி.மேனன்

இயக்கம்: யுவன்

பி ஆர் ஒ: சுரேஷ் சந்திரா, ரேகா (D’ one), நாசர்.

சிலுமிச சினிமா எடுக்க சதீஷும், ரமேஷ் திலக்கும் முயற்சிக் கின்றனர். இதற்கிடையில் அனகொண்டாபுரம் பகுதியில் வாழும் மக்கள் பேய் பயத்துக் குள்ளாகின்றனர். ஒரு சமயம் சதீஷ் காதலி தர்ஷா குப்தா வீட்டுக்கு வர அவருக்கு பேய் பிடிக் கிறது. தன்னை அனகொண்டா புரம் கூட்டிச் செல்லும்படி சொல் கிறது. அங்கு சென்று அரண்மனைக்குள் நுழையும்போது ஊர் மக்கள் தடுத்து உள்ளே இருக்கும் பேயை அழிக்க வேண்டும் என்கின்றனர். மந்திரித்த ரத்தத்துடன் அரண் மனைக்குள் செல்லும் சதீஷ் அங்கு பேயாக இருக்கும் சன்னி லியோனை அழித்தாரா என்பது கிளைமாக்ஸ்.

விட்டலாச்சாரியா படம் பார்ப்பது  போல் கிளுகிளுப்பும், மந்திர ஜாலமும் கொண்ட கதையாக உருவாகியுள்ளது ஒ எம் ஜி. இதில் ஹைலைட்டே சன்னி லியோன் ஹீரோயினாக நடித்திருப்பதுதான்.

சன்னிலியோனை வைத்து பேய் படம் இயக்க இயக்குனர் புவன் எப்படி துணிந்தார் என்பதே ஒரு கேள்விதான். பாலிவுட் கவர்ச்சி நடிகை கிடைத்தாலே அவருக்கு பிட்டு துணிதான் தருவார்கள் ஆனால் நீல பட நடிகை சன்னி லியோனுக்கு அழகான ஆடைகள் அணிவித்து அழகு பார்த்திருக் கிறார்கள்.
சன்னி தானே என்று இஷ்டத்துக்கு டபுள் மீனிங் வசனம் எழுதாமலி ருந்ததும் ஒரு பிளஸ்தான்.

சிக் உடைகளில் கட்டுக் குலையாத அழகுடன் சன்னி ஆடுவதும் ஆக்ரோஷமாக சண்டை போடு வதும் அவருக்கு கோலிவுட்டில் தனி ரசிகர் வட்டத்தை ஏற்படுத்தி னாலும் ஆச்சரியப்படுவதற் கில்லை. நடனத்தில் அவரது நெளிவு சுளிவுகள்  போத தருகிறது.

எப்படியாவது சன்னியின் அழகை கொஞ்சமாவது இளசுகளுக்கு விருந்து படைக்க வேண்டும் என்று இயகுனர் முயன்றால் சென்சார் கண்கள் அதற்கு மாவடித்து மெழுகி இருப்பது ஏமாற்றம்.

சதீஷ் தான் ஹீரோ. அதற்காக அந்தர் பல்ட்டியடித்து  ஆக்‌ஷன் ஹீரோவாக பீத்திக் கொள்ளாமல் காமெடி ஹீரோவாகவே நடித்து பெயரை தக்க வைத்துக் கொள்கி றார்.

மொட்டை ராஜேந்திரன் யோகி பாபு, ரமேஷ் திலக் தங்கள் பங்குக்கு காமெடி செய்கின்றனர்.

டி.வீரா சக்தி, சசிகுமார் தயாரித்திருக்கின்றனர்.
ஜாவித் ரியாஸ் இசை யில் பாடல்கள் கேட்க லாம்.

தீபக் டி.மேனன் கலர்ஃபுல் ஒளிப்பதிவு இதம்.

முழுக்க ஒரு பேய் கதையை அரச குடும்ப பின்னணியில் சொல்ல ரசனையுடன் பொழுதை கழிக்ச் செய்திருக்கிறார் இயக்குனர்

ஒ எம் ஜி – சன்னி மீது அந்த எதிர்பார்ப்பில்லாமல் சென்றால் ஏமாற்றமிருக்காது.

 

Related posts

Thakkali Srinivasan passed away..

Jai Chandran

Kida gets selected in the Indian Panorama category

Jai Chandran

Arya starrer “Captain” First Look revealed

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend