Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

டிரைவர் ஜமுனா (பட விமர்சனம்)

படம்:டிரைவர் ஜமுனா

நடிப்பு: ஐஸ்வர்யா ராஜேஷ், ஆடுகளம் நரேன், மணிகண்டன், அபிசேக்,

தயாரிப்பு: எஸ்.பி.சவுத்ரி

இசை: ஜிப்ரான்

ஒளிப்பதிவு :கோகுல் பினாய்

இயக்கம்:கின்ஸ்லின்

பி ஆர் ஒ: யுவராஜ்

தந்தையைத்  மறைவுக்கு பின் கால் டாக்ஸி ஓட்டும் டிரைவர் ஆகிறார் ஜமுனா (ஐஸ்வர்யா ராஜேஷ்). அரசியல்வாதி ஒருவரை (நரேன்) கொல்வதற்கு ஒரு கூலிப் படை புறப்படுகிறது. அவர்களது கார் விபத்துக்குள்ளானதால் கால் டாக்ஸியை அழைக்கின்றனர். கூலிப்படை என்று தெரியாமல் அவர்களுக்கு டாக்ஸி ஓட்டுகிறார் ஜமுனா. ஒரு கட்டத்தில் விஷயம் அம்பலமானதும் ஜமுனாவை போட்டுத்தள்ள கூலிப்படை எண்ணுகிறது. ஆனால் போலீஸ் கூலிப் படையினர் ஜமுனாவிடம் தொடர்ந்து டாக்ஸியை வேகமாக ஓட்டும்படி சொல்கின்றனர். போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவி அரசியல்வாதியிடம் கூலிப் படையை அழத்துச் செல்கிறார். அடுத்த சில நொடிகளில் எல்லாமே தலைகீழாக மாறுகிறது. கூலிப் படை பாணியில் ஜமுனாவே அரசியல்வாதியை கொல்ல முயல் கிறார். எதற்காக ஜமுனா இப்படி யொரு முடிவு செய்தார் என்பதற்கு நச்சென பதில் அளிக்கிறது கிளைமாக்ஸ்.

இதுவரை பார்க்காத கால் டாக்ஸி டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார்.

கூலிப்படையினர் ஏமாற்றி அவரது டாக்ஸியில் ஏறுவதற்கு நைசாக பேசி அவர சம்மதிக்க. வைக்க பேசும்போது எப்படியாவது ஐஸ்வர்யா வம்பில் சிக்கிக்கொள் ளாமல் எஸ்கேப் ஆகிவிட வேண்டுமே என்று மனம் படபடக் கிறது. ஆனாலும் அவர் டாக்ஸி ஓட்ட சம்மதித்து காரில் கூலிப்படை யினரை ஏற்றிக்கொள்ளும்போது வசமாக சிக்கிக்கிட்டாரே என்ன வாகுமோ என்று அரங்கு அமைதி வனமாகிறது.

டாக்ஸி டிரைவராக நடித்திருக்கும் ஐஸ்வர்யாவுக்கு நிஜத்திலும் கார் ஓட்டுவதென்றால் ரொம்ப பிடிக்கும்.. படம் முழுவதும் கார் ஓட்ட வேண்டிய கேரக்டர் என்றதும் கரும்பு தின்ன கூலியா என்று ஸ்டியரிங்லில் வைத்த கையை எடுக்க மறந்து விடுகிறார். நூறு கிலோ மீட்டருக்கும்  மேலாக ஹைவேயில் காரை ஐஸ்வர்யா ஓட்டிக் கொண்டு பறப்பது வேகமோ வேகம்.

நரேனையும் அவரது மகனையும் கூலிப்படை யினர் சூழ்ந்து கொண்டு கத்தியால் பூசணியை சீவதுபோல் சீவும்போது அந்த இடமே ரத்தவெல்லமாகி திகிலை கிளப்புகிறது.

நரேனை கொல்வதற்கு ஐஸ்வர்யா போடும் திட்டம்தான் இது என்று தெரியும்போது வன்முறையிலும் ஒரு சென்ட்டிமென்ட் இழையோடு கிறது.

போலி அரசியல்வாதியாக வரும் நரேன் , அவரது மகனாக நடிப்ப வரும் மணலில் உருண்டு புரண்டு சீனை தத்ரூபமாக்கியிருக்கின் றனர்.

கூலிபடையினராக வருபவர்களும் அசல் கூலிப்படையினராக இருக்கு மோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் அளவுக்கு பாத்திரத் தோடு ஒன்றிவிடுகின்றனர்.

டைட்டில் முடிந்தவுடன் ஆரம்ப மாகும் கார் பயணம் நம்மையும் கிளைமாக்ஸ் வரை கூடவே கூட்டிச் செல் கிறது.

3 கி மீட்டரில் கூலிப் படையினரின் காரை சுத்துபோடும் போலீசின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு கார் எஸ்ஸாவதும், அந்தர் பல்ட்டி யடிக்கும் காரிலிருந்து லேசான அடியுடன் ஐஸ்வர்யா மட்டும் தப்பிக்க மற்றவர்கள் தீயில் எரிவதும் நம்பமுடியாத சீன்கள்.

எஸ்.பி.சவுத்ரி தயாரித்திருக்  கிறார்.

ஜிப்ரான் இசை தேவைக்கு ஏற்ப ஒலிக்கிறது.

கேமிராமேன் கோகுல் பினாயின் கடினமான வேலை காட்சிகளை கச்சிதமாக்கியிருக்கிறது காருக்குள் கேமிராவை வைத்து 5 பேரையும் பல கோணங்களில் படாக்குவதற்குள் முதுகெலும்பு ஜன்னி கண்டிருக்கும்.

ஏ. ஆர். முருதாசின் உதவியாளர் கின்ஸ்லின் மெசேஜ் சொல்லும் வேலைக்குள் தலையை நுழைக் காமல் காட்சிகளில் மட்டும் கவனம் செலுத்தியிருப்பது கதையை மேலும் வலுவாக்குகிறது.

டிரைவர் ஜமுனா – பிரேக் பிடிக்காமல் ஓடும் டாக்ஸி.

 

Related posts

எஸ்.பி.ஜனநாதன் உடல் நலன் பாதிப்பு: மருத்துவமனையில் அட்மிட்..

Jai Chandran

சத்யராஜின் “‘மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட் பர்ஸ்ட் லுக்

Jai Chandran

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் “நெஞ்சுக்கு நீதி” டப்பிங் பணிகள் இன்று துவங்கியது

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend