Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

மாயக்கூத்து (பட விமர்சனம்)

படம்: மாயக்கூத்து

நடிப்பு: நாகராஜன் கண்ணன், டெல்லி கணேஷ்,  மு.ராமசாமி, டாக்டர் எஸ்.கே.காயத்ரி, சாய் தீனா, ஐஸ்வர்யா, கார்த்திக் சீனிவாசன், ரேகா குமணன், தினேஷ் செல்லையா, மிருதுலா, பிரகதீஸ்வரன், டி.ஆண்டனி ஜானகி, முருகன், கே கோபால், வீரமுத்து

தயாரிப்பு: ராகுல் தேவா, பிரசாத் ராமசந்திரன்

இசை: அஞ்சனா ராஜகோபாலன்

ஒளிப்பதிவு:சுந்தர் ராம் கிருஷ்ணன்

இயக்கம்: ராகவேந்திரா

பிஆர்ஓ: ரேகா

தொடர் கதை எழுத்தாளர் வாசன்  (நாகராஜன் கண்ணன்) எழுதும் கதையில் வரும் கதாபாத்திரங்கள் வாழ்க்கையில் சில துன்பங்களை அனுபவிக்கின்றன. அந்த கதாபாத்திரங்கள் நிஜத்தில் வந்து எழுத்தாளரிடம் நியாயம் கேட்கின்றன. எல்லா பாத்திரங்களும் சேர்ந்து அவரை கொல்ல துரத்துகின்றன. அதன் முடிவு என்ன என்பதை பரபரப்புடன் கிளைமாக்ஸ் சொல்கிறது.

சிற்ப கூடத்தில் மு.ராமசாமி, எழுத்தாளர் நாகராஜன் கண்ணன் உரையாடலுடன்  படம் தொடங்குகிறது.  “நான் எழுதும் பாத்திரங்களுக்கு நான்தான்  கடவுள். அவைகளின் தலைவிதியை நான் தான் தீர்மானிப்பேன்” என்று சொல்லி எழுத்தாளர் ஆணவமாக கூறுகிறார்.

மகன் படிப்புக்கு கட்டணம் செலுத்த முடியாத வேலைக்கார  பெண் ஐஸ்வர்யா ஒரு வீட்டுக்கு வேலை செய்ய செல்கிறார் அங்கு 2 ஆயிரம் ரூபாய் காணாமல் போகிறது. வீட்டுக்கார பெண் பணத்தை ஐஸ்வர்யா திருடிவிட்டதாக  பழி  போடுகிறார். அங்கு நடக்கும் வாக்குவாதத்தில் ஐஸ்வர்யா தவறி விழுந்து இறக்கிறார். இறந்த ஐஸ்வர்யா எழுத்தாளர் வீட்டுக்கு நேரில் வந்து நியாயம் கேட்கிறார். என் மீது எதற்கு திருட்டுப் பழி சுமத்தினீர்கள்  என்று கேட்க எழுத்தாளர் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகிறார்.

இப்படியே அவரது கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் நேரில் வந்து நியாயம்  கேட்டு  கொல்வதற்காக துரத்துகிறது. உயிர்  பிழைப்பதற்காக எழுத்தாளர் ஓடு ஓடு என்று ஓடுகிறார். இப்படியே வித்தியாசமான ஒரு நகர்வுடன் கதை செல்கிறது. எப்போதோ அரிதாக இது போன்ற மாறுபட்ட படங்கள் வருகின்றன. அந்த வரிசையில் மாயக்கூத்து படமும் இடம் பிடிக்கிறது.

யார், யார் என்னென்ன  கதாபாத்திரங்கள் செய்திருக்கிறார்கள் அல்லது நடித்திருக்கிறார்கள் என்று அளவிடுவதை விட பாத்திரங்களை ஏற்ற ஒவ்வொரு நட்சத்திரங்களும் தங்களது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை படத்தோடு ஒன்றைச் செய்து விடுகின்றனர். என்றுதான் சொல்ல வேண்டும்.

ராகுல் தேவா, பிரசாத் ராமசந்திரன் படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

அஞ்சனா ராஜகோபாலன் இயல்பான இசை அமைத்து காட்சிகளை சிதைக்காமல் தந்திருக்கிறார். அதேபோல் சுந்தர் ராம் கிருஷ்ணன் ஒளிப்பதிவும் மெசசும்படி உள்ளது

இப்படி ஒரு கதைக்களத்தை யோசித்த இயக்குனர் ராகவேந்திரா தமிழ் திரை உலகில் ரசிகர்களால் கவனிக்கப்படுவார்.

இது ஏதோ வெறும் கதையாக இல்லாமல் ஒவ்வொரு எபிசோடும் அரசியல் பேசுவதுதான் சிறப்பு. நீட் தேர்வு, குல தொழில் கல்வி போன்ற முக்கிய விஷயங்களை மறைமுகமாக  தோலுரித்திருக்கிறார். ஆனால் வெளிப்படையாக தவறா? சரியா? என்று சொல்லாமல் தடுமாறி இருக்கிறார்கள்.

மாயக்கூத்து — மாறுபட்ட படைப்பு.

By

ஜெயச்சந்திரன் கே.

 

 

 

Related posts

கொரோனாவுக்கு இந்திய மருந்து ’கோவேக்சின்’ முதல் பரிசோதனை.. டெல்லி நபருக்கு செலுத்தப்பட்டது..

Jai Chandran

சிங்கப்பூர் தயாரிப்பாளரின் எமகாதகன் விழா: கே.ராஜன் – சேகர் பரபரப்பு

Jai Chandran

Yash shares a glimpse into the vibe of ‘Toxic: A Fairy Tale for Grown-ups “

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend