படம்: நிறம் மாறும் உலகில்
நடிப்பு: பாரதிராஜா, ரியோ ராஜ், நட்டி, சாண்டி, யோகிபாபு, துளசி, ஆதிரா, கனிகா, லவிலின், ரிஷிகாந்த், ஏகன், விக்னேஷ் காந்த், காவ்யா, அயிரா கிருஷ்ணன், முல்லையரசி, மைம் கோபி, விஜி, நரேன், சுரேஷ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி
தயாரிப்பு: எல்.கேத்ரின் ஷோபா மற்றும் லெனின்
இசை: தேவ் பிரகாஷ் ரேகன் , மணிகண்ட ராஜா
ஒளிப்பதிவு: மல்லிகா அர்ஜூன்
இயக்கம் : பிரிட்டோ ஜே பி.
பி ஆர் ஒ: யுவராஜ்
ஒரே படத்தில் 5 கதைகள் கொண்டதாக உருவாகியிருக் கிறது நிறம் மாறும் உலகில்.
வயதான பெற்றோர் பாரதிராஜா, வடிவுக்கரசிக்கு மகன்கள் இருவர் இருந்தும் அப்பா அம்மாவை கவனித்துக் கொள்ளாமல் பசியில் வாட விடுகின்றனர். அவர்கள் கதி என்னவாகிறது. இதுதவிர முதியோர் இல்லத்தில் சேர்க்கப்படும் தாய் ஆட்டோ ஓட்டும் பிள்ளைக்கு எப்படி அம்மா ஆகிறார், புற்று நோயால் பாதிக்கப்பட்ட தாயை காப்பாற்ற கடன் கேட்டு தவிக்கும் மகன் என இன்னும் சில கதைகளுடன் இப்படம் உருவாகி இருக்கிறது.
எல்லா கதைகளுமே கிட்டத்தட்ட அம்மா சென்டிமெண்ட்டை சொல்லும் கதைகளாகவே உள்ளதால் பெண்களை கவரும் உருக்கமான காட்சிகள் அதிகம் உள்ளது.
பாரதிராஜா, வடிவுக்கரசி இருவரும் தங்கள் மகன்கள் தங்களை கண்டு கொள்ளாமல் உதாசீனப்படுத்துவதும் ஆனாலும் கணவன் மனைவி அன்பு குறையாமல் ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக் கொள்வதும் மனதை கனக்கச் செய்கிறது.
அதேபோல் துளசி, சாண்டி இருவரின் தாய், மகன் பாசம், ரியோ ராஜ், ஆதிரா சென்டிமெண்ட் எல்லாமே மனதை வருடுகிறது.
எல்.கேத்ரின் ஷோபா மற்றும் லெனின் தயாரித்திருக்கின்றனர்.
தேவ் பிரகாஷ் ரேகன் , மணிகண்ட ராஜா இசை அமைத்துள்ளார்.
மல்லிகா அர்ஜூன் ஒளிப்பதிவு ஒ கே.
புது இயக்குனர் பிரிட்டோ ஜே பி. ஒரே படத்தில் 5 கதைகளை தந்து ரசிகர்களை அரங்கில் அமர வைப்பது அவரது கன்னி முயற்சிக்கு கிடைத்த வெற்றி.
நிறம் மாறும் உலகில் – பாசம் மாறுவதால் வரும் விளைவுகள்.