Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ( பட விமர்சனம்)

படம் :நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்

நடிப்பு:பவிஷ் நாராயண்,
அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா P வாரியர்,
வெங்கடேஷ் மேனன்,
ரம்யா ரங்கநாதன்,சித்தார்த்தா ஷங்கர்,.ராபியா கதூன் சரத்குமார்  .சரண்யாஆ டுகளம் நரேன்உ.தய் மகேஷ்ஶ், ரீதேவி

தயாரிப்பு:கஸ்தூரி ராஜா & விஜயலக்ஷ்மி

இசை: ஜி வி பிரகாஷ் குமார்

ஒளிப்பதிவு: லியான் பிரிட்டோ

இயக்கம்: நடிகர் தனுஷ்
:
பிஆர்ஓ: ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ்

புதுமுகங்களை வைத்து தனுஷ் இயக்கி இருக்கும் படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். படத்தின் டைட்டிலை கேட்டாலே அந்த காலத்து பி பி ஸ்ரீனிவாஸ் பாடிய  நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது என்ற பாடல்  நினைவு வந்து விடும்.. பாடல் வரிகளை வைத்து ஒரு காதல் கதையை உருவாக்கலாம் என்பதை இந்த படத்தில் உறுதி செய்திருக்கிறார் தனுஷ்.

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பவிஷ் நாராயணன் கோடீஸ்வரன் மகள் அனிகாவை காதலிக்கிறார். காதலன் பவிஷை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று தந்தை சரத்குமாரிடம் அறிமுகம் செய்து வைக்கிறார். ஆனால் சரத்குமாருக்கு பவிஷை பிடிக்கவில்லை. மகளுக்காக சில நாட்கள் தன்னுடன் பவிஷ் பழக வேண்டும் அதன் பிறகு அவன் உனக்கு ஏற்றவனாக இருப்பானா என்பதை கூறுவதாக சரத் கண்டிஷன் போடுகிறார். அதை ஏற்று பவிஷ் சரத் உடன் பழகுகிறார். திடீரென்று அனிகாவை வெறுப்பது போல் பவிஷ் ஒதுங்கி ச் செல்கிறார். மனம் நொந்த அனிகா தன் தந்தை கைகாட்டிய மாப்பிள்ளை மணக்க சம்மதிக்கிறார். தனது திருமண பத்திரிக்கையை பவிஷுக்கு அனுப்பி வைக்கிறார். அந்த திருமணத்தில் பவிஷ் பங்கேற்க செல்கிறார்.  அதன் பிறகு நடக்கும் ருசிகரம் மற்றும் லவ் சென்டிமென்ட் ஆகியவற்றை கலந்து சொல்கிறது கிளைமாக்ஸ்.

நடிகர் தனுஷ் இப்படத்தை இயக்கி இருக்கிறார் இந்த கதாபாத்திரம் அவருக்கு மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும் ஆனால் என்ன காரணத்தினாலோ அவர் நடிக்காமல் விட்டிருக்கிறார் ஒருவேளை தற்போதுள்ள அவரது இமேஜ் இதை ஒத்துக் கொள்ளாது என்று எண்ணினாரோ என்னவோ?  ஹீரோ வாய்ப்பை பவிஷுக்கு தந்திருக்கிறார். புதுமுகம் பவிஷ்,  எப்படி நடிக்க வேண்டும், எப்படி பேச வேண்டும் என்று தனுஷ் சொல்லிக் கொடுத்தாரோ அதை அச்சு பிறழாமல் செய்திருக்கிறார் அதுவே பவிஷுக்கு பாஸ் மார்க்கை அள்ளித் தந்து விடுகிறது

படத்தில் முதல் பாதி காதல் , பப் பார்ட்டி என்று கலகலவென நகர்கிறது. அனிகா தனது வீட்டிற்கு பவிஷை அழைத்துச் செல்வதும் அந்த கார் பெரிய பங்களாவிற்குள் நுழைந்ததும் இவ்வளவு பெரிய வீடு உன் வீடா  என ஆச்சரியமாக பவிஷ் கேட்பதும் பின்னர் அனிகாவின்  தந்தை சரத்குமாரிடம் அனிகாவை தான் காதலிப்பதாக சொன்னதும் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் பவிஷை அவமானப்படுத்தும் விதமாக சரத்குமார் கேள்விகள் கேட்பதும் அதைக் கேட்டு அதிர்ச்சியாகும் பவிஷ் அடுத்த நொடி தனுஷ் பாணியில் தெனாவட்டாக கூலிங் கிளாஸ் போட்டு கொண்டு  பதில் அளிப்பதும் தனுஷ் – பிரகாஷ்ராஜ் நடித்த பொல்லாதவன் காட்சியை கண் முன் நிறுத்துகிறது.

திடீரென்று அனிகாவை முக்கிய காரணத்திற்காக பவிஷ் வெறுப்பதும் பின்னர் அவரது திருமணத்தில் கலந்து கொள்ள சென்று அவமானபட்டு நொந்து நூலாகி காதல் தோல்வியில் ரோட்டில்.உருண்டு புரள்வது, காதல் தோல்வியில் பரிதவிப்பது. என புதுமுகம் பவிஷ் நன்றாக நடித்திருக்கிறார் ஆனால் போதிய முக பாவனை, எதார்த்தம் இல்லாமல் காட்சிகள் மனதில் ஒட்ட மறுக்கிறது.

பவிஷின் நண்பரின் காதலியாக வரும் பிரியா பி வாரியரை நினைத்து காதலில் உருகும் பவிஷின் மற்றொரு நண்பர் கலகலப்புக்கு பயன்படுத்துகிறார்
திருமண ஈவன்ட் மேனேஜராக வரும் ரம்யா ரங்கநாதன் திடீர் சர்ப்ரைஸ் தருகிறார்.

கதை ஒன்றும் புதிது இல்லை என்று விமர்சிப்பதற்கு முன்னரே டைட்டிலுக்கு அருகிலேயே வழக்கமான காதல்  கதை என்று தனுஷே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். என்னதான் பழைய கதையாக இருந்தாலும் காதலின் ஆழம் அழுத்தம் ஆனந்தம் எல்லாவற்றையும் தனது அண்ணன் செல்வராகவன் பாணியில் கச்சிதமாக சொல்லி இருக்கிறார் தனுஷ்.  படத்திற்கு அவர் தந்திருக்கும் டிரீட்மென்ட் வெற்றிக்கு துணை நிற்கும்.

எவ்வளவுவோ வாய்ப்புகள் இருந்தாலும் கொஞ்சம் கூட ஆபாச கலப்பில்லாமல் காட்சிகளை அமைத்திருக்கும் தனுஷுக்கு ஒரு கைத்தட்டல் தரலாம். அதே சமயம் கேர்ள் பிரண்ட் எல்லாமே மொட குடிகளாக காட்டுவது ஒரு தப்பை ஊக்குவிப்பது போல் ஆகிறது. அதை தவிர்த்திருக்கலாம்.

ஜிவி பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட் என்பதால் காட்சிகள் தொடங்கும் போது அரங்கில் விசில் பறக்கிறது.

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் – காதலின் நேர்மைக்கு கிடைக்கும் வெகுமதி.

 

Related posts

BlackMail:You won’t blink – Bindu Madhavi

Jai Chandran

திரௌபதி 2 (பட விமர்சனம்)

Jai Chandran

வர்மா படத்தில் கவர்ச்சியில் கதறவிட்ட ஆராத்யா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend