Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ல்தகா சை ஆ ( பட விமர்சனம்

படம்: ல்தகா சை ஆ

நடிப்பு: சதா நாடார், மோனிகா  செலினா மற்றும் பலர்

தயாரிப்பு: என். சதீஷ்குமார

இசை: : இ.ஜெ.ஜான்சன்

பின்னணி இசை: சுரேஷ் ஷர்மா

ஒளிப்பதிவு: எம் எஸ் மனோ குமார்

இயக்கம்: சதா நாடார்

பி ஆர் ஓ: சக்தி சரவணன்

தனி பங்களாவில் சதா நாடார் மனைவி மோனிகாவுடன் மகிழ்ச்சியாக வாழ்கிறார்.  மனைவி கர்ப்பமாக இருப்பதாக சதா கனவு காண்கிறார். மறுநாள் தான் கர்ப்பமாக இருப்பதாக மோனிகா கணவரிடம் சொல்கிறார். அதைக் கேட்டு ஆச்சரியம் அடைகிறார் சதா. இன்னொரு நாள் மனைவியை கொல்வது போலவும், உல்லாசத்திற்கு அழைத்துச் சென்ற பெண் இறந்துவிட அந்த சிக்கலில் மாட்டிக்கொள்வது போலவும் சதா கனவு காண்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்து பைத்தியம் போல் கத்த,  தொடங்குகிறார் . சதா கனவு கண்டது போல் எல்லாம் நடந்ததா? அவர கதி என்னவாயிற்று என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது

சதா, மோனிகா இருவரும் படத்தில் கணவன் மனைவியாக நடித்திருந்தாலும் நிஜத்திலேயே அவர்கள் உண்மையான தம்பதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் இணைந்து இப்படத்தில்   நடித்திருப்பது தமிழில் புதிய முயற்சி.

சதா. ஜூனியர் விஷால் போல் சில சமயம் தென்படுகிறார் ஆனால் விஷால் போல் ஆக்சன் காட்சிகளில் எதுவும் செய்யவில்லை. நடிப்பை பொறுத்தவரை எதார்த்தமாக நடித்து கவர்கிறார் சதா.

கனவில் வரும் சம்பவங்களை கண்டு அதிர்வது ஷாக். ஒரு கட்டத்தில் சதா பைத்தியம்போல்  கத்தி கூச்சலிட்டு மனைவி மோனிகாவே பயந்து நடுங்கும் அளவுக்கு ஆக்ரோஷமாக நடித்திருக்கிறார்.

மோனிகா எதார்த்தமான மனைவியாக நடித்திருந்தாலும் மார்டன்  உடைகளில் தோன்றி கவர முயல்கிறார். சதாவுடன் கட்டிலில் சரசம் செய்வது முத்தம் கொடுத்து கட்டி உருள்வது  போன்ற காட்சிகளில் நடிப்பாக  இல்லாமல் நிஜ உணர்வுகளோடு  நடித்துள்ளார்.

சுதாவின் மாமனாராக வரும் நபர் எதைச் சொன்னாலும் பேந்த பேந்த திருதிருவென விழித்து சிரிப்பு மூட்ட முயற்சிக்கிறார்.  கூடவே வரும் குடிகாரர் தெய்வமே தெய்வமே என்று பேசி கவனத்தை.  ஈர்க்கிறார்.

படத்தில் நடித்தவர்கள் எல்லோருமே புதுமுகங்கள்.  ஒரு சில கதாபாத்திரங்களை தவிர மற்றவர்கள் மனதில் நிற்கவில்லை. ஒன்று இரண்டு தெரிந்த முகங்கள்  இருந்திருந்தால் படத்திற்கு  பிளஸ் ஆக இருந்திருக்கும்.

சில சமயம் படத்தில் கனவு காட்சி எது,  நிஜ காட்சி எது என்று தெரியாமல் குழப்பங்கள்  இருக்கிறது. அதை நேக்காக சரி செய்திருக்கிறார் படத்தின் எடிட்டர்.

என் சதீஷ்குமார் இப்படத்தை தயாரித்திருக்கிறார். எழுதி இயக்கி ஹீரோவாக நடித்திருக் கிறார் சதா நாடார். சிம்பு நடித்த மாநாடு சாயலில் காட்சிகள் சென்றாலும் இது திரில் மற்றும் கிரைம் கதையாக நகர்கிறது.  பணக்காரனான சதா கிளை மாக்சில்  திடீரென்று ஏழையாக மாறி குடிசை பக்கத்தில் அமர்ந்திருப்பது இன்னொரு குழப்பம்.

இ.ஜெ.ஜான்சன் இசை, : சுரேஷ் ஷர்மா பின்னணி இசை படத்துக்கு கை கொடுக்கிறது. ஒளிப்பதிவும் ஓகே ரகம்.

ல்தகா சை  ஆ – இன்ட்ரஸ்டிங்

 

 

 

 

 

 

Related posts

மாயோன் முன்னோட்ட ரத யாத்திரை டிரெய்லர் வெளியீட்டு விழா !*

Jai Chandran

Thalli Pogathey FromTomorrow

Jai Chandran

RadheShyam:ThiraiyoaduThoorigai song teaser tomorrow at 7 PM.

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend