Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே ( பட விமர்சனம்)

படம்: நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே

நடிப்பு: செந்தூர் பாண்டியன், ப் ரீத்தி கரண், சுரேஷ் மதியழகன், பூர்ணா ரவி, தமிழ் செல்வி, ஷிவானி கீர்த்தி, அபிஷேக் ராஜு, மாலிக், நாகராஜ், எஸ்.கே.தாஸ், எம். அமுதாராணி, மினு வாலண்டினா

தயாரிப்பு:எஸ்.பிரதீப் குமார்

இசை: பிரதீப் குமார்

ஒளிப்பதிவு: உதய் தங்கவேல்

இயக்கம்: பிரசாத் ராமர்

பி ஆர் ஒ: சுரேஷ் சந்திரா

நண்பர்களுடன் வெட்டியாக சுற்றிக்கொண்டு. முகநூலில் பெண்களுடன் கடலை. போட்டுக் கொண்டு ஜாலியாக சுற்றி திரியும் செந்தூர் பாண்டி. முகநூல் தோழி பிரீத்தியை பிறந்த நாளில நேரில் சந்தித்து வாழ்த்து கூறிவிட்டு அவருடன் ஜல்சா செய்ய எண்ணி சந்திக்கிறார். நட்பாக பழகும் பிரீத்தி சென்தூர் பாண்டியுடன் பூம்புகார் செல்கிறார். பூங்காவில் பிரீத்தியிடம் தவறாக நடக்க செந்தூர் பாண்டி முயல பிரித்தி எடுக்கும் முடிவு என்ன என்பதை எதிர்பாராத திருப்பத்துடன் விளக்குகிறது கிளைமாக்ஸ்.

2K கிட்ஸ்களின் அவலத்தை தோலுரிக்கும் படமாக இதனை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் பிரசாத் ராமர்.

புதுமுக ஹீரோ செந்தூர் பாண்டியன் கேமிரா முன் நடிக்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல் சக நண்பர்களுடன் பழகும் எதார்த்தம் சகஜமாக கெட்ட வார்த்தைகள் புழக்கம் என சீன்கள் அடல்ட் கன்ட்டென்ட்டாக நகர்கிறது.

மதுரையிலிருந்து மாயவரம் அங்கிருந்து பூம்புகார் என செந்தூர் பாண்டியன் பிரீத்தி ஜோடி மோட்டார் சைக்கிள் பயணம் ஊரை சுற்றி பார்க்க கிடைத்த ரோட் டிரிப் சீன்.

இரட்டை அர்த்தத்துடன் பேசி செந்தூர் பாண்டி பிரீத்திக்கு கொக்கி போட அவரோ எல்லா வற்றையும் எதிர் கேள்வி கேட்டு மொக்கையாக்கும்போதே எப்படியும் பிரீத்தியிடம் செந்தூர் பாண்டி செம்மையாக அடி வாங்கப் போகிறார் என்ற கணிப்பு அப்படியே நிகழ்வது அடல்ட் கன்டன்ட் படத்தை திசை மாறி பயணிக்க வைக்கிறது.

எம் ஜி ஆர் பட பாடலை பட டைட்டிலாக வைத்திருக்கும் இயககுநர் டைட்டிலுக்கு நியாயத்தை இன்னும் அழுத்தமாக செய்திருக்கலாம்.

செந்தூர் பாண்டியின் நண்பர்களாக வருபவர்களும் டபுள் மீனிங்கை சரமாரியாக பேசி அல்லாட விடுகின்றனர்.

மேலும் சுரேஷ் மதியழகன், பூர்ணா ரவி, தமிழ் செல்வி, ஷிவானி கீர்த்தி, அபிஷேக் ராஜு, மாலிக், நாகராஜ், எஸ்.கே.தாஸ், எம். அமுதாராணி, மினு வாலண்டினா நடித்திருக்கின்றனர்.

எஸ்.பிரதீப் குமார் தயாரித்தி ருப்பதுடன் இசை பொறுப்பையும் ஏற்றிருக்கிறார். ஆங்காங்கே ஒலிக்கும் பாடல்கள் கணீர் என்கிறது

இயற்கை காட்சிக்கு மேக்கப்போடாமல் இயற்கையான தோற்றத்திலேயே ஒளிப்பதிவு செய்திருக்கிறார் உதய் தங்கவேல்.

மனம்போன போக்கில் சுற்றும் 2k கிட்ஸ்களின் அவலத்தை பட மாக்கியிருக்கும் இயக்குனர் பிரசாத் ராமர் , அவர்களுக்கு ஒரு படிப்பினை பாடத்தையும் நடத்தி யிருக்கலாம்

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே – .மதில் மேல் பூனை.

Two And A Half Star Rating Illustration Vector

Related posts

சுகர் கோட் இல்லாத ஒரிஜினல் பாத்திரம்: ராஷ்மிகா

Jai Chandran

வார் 2 பட கதையை ரகசியம் காருங்கள் – ஹர்திக்

Jai Chandran

AditiShankar did her first live performance of her debut song Romeo Juliet

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend