படம்: கார்டியன்
நடிப்பு: ஹன்சிகா, பிரதீப் ராயன், சுரேஷ் மேனன், ஶ்ரீமன், ஶ்ரீ ராம் பார்த்தசாரதி, மொட்டை ராஜேந் திரன், அபிஷேக் வினோத், தங்க துரை, ஷோபனா பிரனேஷ், தியா , பேபி கிரிஷிதா
தயாரிப்பு: விஜய் சந்தர்
இசை: சாம் சி எஸ்
ஒளிப்பதிவு: கே. ஏ.சக்திவேல்
இயக்கம்: குரு சரவணன் மற்றும் சபரி
பி ஆர் ஒ: ரியாஸ் கே அஹமத்
சிறுவயதிலிருந்து தன்னை அதிர்ஷ்டம் இல்லாதவர் என்று எல்லோரும் சொல்லிச் சொல்லி காதில் கேட்டு வெறுப்பாய் வளர்ந்தவர் ஹன்சிகா. படித்து கட்டிடக்கலை டிசைனர் ஆகிறார். அதற்கான வேலையும் கிடைக்கிறது .திடீரென்று அவருக்கு ஒரு அமானுஷ்ய சக்தி வருகிறது. அதன்படி அவர் என்ன நினைக்கிறாரோ அது அப்படியே நடக்கிறது. ஒரு சிலரை, ‘நீ இறந்து விடுவாய்’ என்று கூறுகிறார் அவர்கள் இறந்து விடுகிறார்கள். இது பற்றி மாந்திரீகர்கள் பூஜை செய்து அவர் உடலில் பேய் புகுந்திருப்பதை கண்டு அதை அடக்க முயல்கிறார்கள். அந்த பேய் யார்? ஹன்சிகா உடலில் அது செல்ல காரணம் என்ன? என்ற கேள்விகளுக்கு கார்டியன் பதில் அளிக்கிறது.
இடையில் சிறிது காலம் பேய் படங்களுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது போலும்… தற்போது கார்டியன் பெயரில் மற்றொரு பேய் படம் திரைக்கு
வந்திருக்கிறது. அழகான ஹன்சிகா இதில் பேயாக நடித்திருக்கிறார்.
பேயாக காட்டினாலும் அவருக்கு ஓவராக அகோரமான மேக்கப் போடாமல் லேசான டச் அப் செய்து பார்க்கும்படி காட்டி இருக்கிறார் இயக்குனர் . ஆனால் அவருக்குள் செல்லும் மற்றொரு ஆவி தான் அவ்வப்போது எரிந்த பேயாக காட்டப்படுகிறது.
படத்தின் தொடக்கமே இது பேய் படம் தான் என்பதை மாந்திரீகர்கள் செய்யும் பூஜையில் அறிகுறி தெரிந்து விடுகிறது. முதல் காட்சியிலேயே பேயை ஒரு கல்லுக்குள் வைத்து அடக்கி வைக்கப்படுகிறது. அந்த கல் ஹன்சிகா கையில் கிடைக்க அது என்னவென்று தெரியாமல் வீட்டில் வைத்துக் கொள்கிறார். அதன் பிறகு நடக்கும் அமானுஷ்யங்கள் தான் காட்சிகளை சுவாரஸ்யமாக நகர்த்துகிறது.
சுரேஷ் மேனன், ஸ்ரீமன் கோஷ்டி தான் வில்லத்தனம் செய்கிறது. தனியாக இருக்கும் பெண்ணை பலாத்காரம் செய்து கொல்ள் வார்கள் என்று எண்ண வைத்து அப்படி இல்லாத நியாமான கொலைகார வில்லன்களாக. மாறியிருப்பது வித்தியாசம்.
வெறும் பேயாக மட்டுமே வந்து செல்லாமல் ஹன்சிகாவுக்கு காதல் சீனும் அமைத்து ரிலாக்ஸ் செய்ய வைக்கிறார்கள்
மொட்டை ராஜேந்திரன் , தங்கதுரை ஜோடி கலகலப்புக்கு முயற்கிக்கின்றனர்.
ஹன்சிகாவை தங்கள் கூட்டணியில் சேர்த்துக்கொண்டு கத்தியின்றி ரத்தமின்றி ஆட்களை கொலை செய்து பணத்தை ஆட்டையை போட பார்த்து ஹன்சிகாவுடன் பேரம் பேசி அடி வாங்கி கட்டிக் கொள்வது ஹி ஹி.
மேலும் பிரதீப் ராயன், ஶ்ரீ ராம் பார்த்தசாரதி, அபிஷேக் வினோத், ஷோபனா பிரனேஷ், தியா , பேபி கிரிஷிதா நடித்திருக்கின்றனர்.
விஜய் சந்தர் தயாரித்திருக்கிறார்.
சாம் சி எஸ் இசை பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை.
ஒளிப்பதிவாளர் கே ஏ சக்தி வேல் பேய் காட்சிகளையும் பயமுறுத்தல் இல்லாமல் காட்சி படுத்தி இருக்கிறார்
இயக்குனர்கள் குரு சரவணன் மற்றும் சபரி வழக்கமான பழிவாங்கல் பேய் கதையை பெரிய திருப்பங்கள் இல்லா விட்டாலும் ஓ கே வாக இயக்க
கியுள்ளனர்.
கார்டியன் – சராசரி.

