Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

மை லார்ட் (பட விமர்சனம்)

படம்: மை லார்ட்

நடிப்பு: சசிகுமார், சைத்ரா ஜே ஆச்சார், ஆஷா சரத், குரு சோமசுந்தரம், ஜெயபிரகாஷ், கோபி நயினார், வசுமித்ரா

தயாரிப்பு: ஜெயந்தி அம்பேத்குமார்

இசை: சான் ரோல்டன்

ஒளிப்பதிவு: நிரவ் ஷா

இயக்கம்: ராஜு முருகன்

பிஆர் ஓ: யுவராஜ்

கதை: முத்து சிற்பி ( சசிகுமார்), சுசீலா ( சைத்ரா)தம்பதி உயிரோடு இருக்கும் போதே இறந்து விட்டதாக டெத் சர்டிபிகேட் தரப்படுகிறது. இதற்கிடையில் மத்திய பெண் அமைச்சர் ஒருவருக்கு கிட்னி கோளாறு ஏற்படுவதால் அவருக்கு கிட்னி தருவதற்காக முத்து சிற்பியை மத்திய மந்திரியின் ஆட்கள் வலைவீசி தேடுகிறார்கள். அவர்கள் கையில் சிக்கும் முத்து சிற்பி மற்றும் அவரது மனைவி என்ன கதி ஆகிறார்கள், உயிரோடு இருக்கும்போதே இவர்களுக்கு டெத் சர்டிபிகேட் கொடுத்தது ஏன் என்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது மை லார்ட்.

வழக்கமான ஒரு பொழுதுபோக்கு படத்தை எடுத்து விட்டு செல்லும் இயக்குனர் அல்ல ராஜூ முருகன். தனது ஒவ்வொரு படத்திலும் மக்களின் பிரச்சினை பேசி இருக்கிறார். அதுபோல் இந்த படத்திலும் ஒரு முக்கிய பிரச்னையை அதாவது அப்பாவி கிராமத்து ஏழை மக்களின் கிட்னி திருடும் கும்பலின் முகத்திரையை கிழிப்பதுடன் ஒரு மத்திய அமைச்சர் செய்யும் அரசியலையும் மையமாக்கி படமாக்கி இருக்கிறார்.

அயோத்தி, டூரிஸ்ட் ஃபேமிலி படத்துக்கு பிறகு சசிகுமார் நடித்திருக்கும் மாறுபட்ட கதாபாத்திரம் இந்த முத்து சிற்பி. பெயர்தான் அழகு ஆனால் அவரது தோற்றத்தில் வெறுமை, இழப்பு, சோகம், ஏமாற்றப்பட்ட வடுதான் தெரிகிறது. இந்த கதாபாத்திரத்தில் சசிகுமார் மூழ்கி இருக்கிறார்.

பிண அறையிலிருந்து குத்தாட்டம் போட்டு வரும் தொடக்க காட்சியிலிருந்து கிளைமாக்சில் லாரி ஏறி தப்பிக்கும் வரை அராத்து செய்திருக்கிறார் சசி.

தன் மனைவி சிரிக்க வேண்டும் என்பதற்காக தன்னை தாக்கிய பைனான்ஸியரை சிறை வளாகத்தில் வைத்து கன்னத்தில் அறைவது, தனது மனைவிக்கு உடல் பரிசோதனை செய்யச் சொல்லிவிட்டு கிட்னியை திருடி விட்டார்கள் என்று மருத்துவமனை மீது பழி போட்டு கோர்ட்டுக்கு இழுப்பது என சசிகுமார் ரவுண்டு கட்டி ரகளை ராஜ்ஜியம் செய்கிறார்.

சசியின் மனைவியாக வரும் சைத்ரா தன் மீது சாமி வந்து விட்டதாக கூறி பீடி பிடித்து சசிகுமாரை கலாய்ப்பது கலகல.

மத்திய பெண் மந்திரியாக நடித்திருக்கும் ஆஷா சரத் கிட்னி பாதிப்பு வலிகளை தனது வெறுப்பு நடிப்பால் வெளிப்படுத்துகிறார்

மக்கள் குத்து பத்திரிகை ஆசிரியராக சமூக பொறுப்புள்ள பத்திரிகையாளராக குரு சோமசுந்தரம் நடித்திருக்கிறார். மேலும் ஜெயபிரகாஷ், கோபி நயினார், வசுமித்ரா நடித்துள்ளனர்

ஜெயந்தி அம்பேத்குமார் தயாரித்திருக்கிறார்.

சான் ரோல்டன் இசை, நீராவ் ஷா ஒளிப்பதிவு படத்துக்கு துணை.

திரைக் கதையில் குழம்பியிருக்கும் ராஜு முருகன் சில கருத்தில் உறுதியாக நிற்காமல் காம்பிரமெயிலை செய்திருப்பது தெரிகிறது. கிட்னி அரசியலை பேசியிருந்தாலும் சாதியரசியலில் சறுக்கியிருக்கிறார்..

மை லார்ட் – நீதி கேட்கும் சாமானியன்.

Review By

K.Jayachandhiran

Trending cinemas now.com

Related posts

Pandiraj, D. imman and Rahman Will Release the Teaser of Memories tomorrow

Jai Chandran

தமிழரசன் (பட விமர்சனம்)

Jai Chandran

Raindropss Charity’s #VaanmaeEllai!

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend