Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஸ்வீட்டி நாட்டி கிரேசி (பட விமர்சனம்)

படம்: ஸ்வீட்டி நாட்டி கிரேசி

நடிப்பு: த்ரிகுண் ,
ஸ்ரீ ஜீத்தா கோஷ், இனியா, ராதா,  ரவிமரியா, தம்பி ராமைய்யா, சத்யன், ஜாவா சுந்தரேசன், மதன்பாபு, விஜய் டிவி தனசேகர், வினோத் இவர்களுடன்
பிரபல தெலுங்கு நடிகர் ஆலி, ரகு பாபு.

தயாரிப்பு:
கோவை ரமேஷ்

இசை: அருணகிரி

ஒளிப்பதிவு: சி விஜயஸ்ரீ

இயக்கம்: ராஜசேகர் ஜி

பிஆர்ஓ: புவன் செல்வராஜ்

சிவா (த்ரிகுண்) இளம் வாலிபன். கல்லூரியில் அவனுக்கு காதலியாகிறாள் அனிதா (ஸ்ரீ ஜீத்தா கோஷ்). இருவரும் டேட்டிங் செல்கிறார்கள். அங்கு கசமுசா நடக்கிறது. திடீரென்று சிவா அழ அவரிடம் விவரம் கேட்கிறாள் அனிதா. தான் ஏற்கனவே டியூஷன் டீச்சர், ஆன்ட்டி என இருவரிடம் மோசம் போய் விட்டதாக கூறுகிறான். அவனை மன்னித்து திருமணம் செய்து கொண்டு வீட்டுக்கு வருகிறாள் அனிதா. அங்கு வந்த பிறகுதான் தெரிகிறது. டியூஷன் டீச்சர் அனிதாவின் அக்கா, ஆன்ட்டி அனிதாவின் அம்மா என்ற விவரம். இந்த மன்மத களேபரத்தில் அடுத்தடுத்து நடப்பது என்ன என்பதுதான் கும்மாங்குத்து கிளைமாக்ஸ்.

இது அடல்ஸ் ஒன்லி படம் என்பதை படம் தொடங்கிய சில காட்சிகளிலேயே தெரிந்து விடுகிறது.

ஹாஸ்டல் வார்டன் ரவி மரியாவிடம் த்ரிகுண் தனது மன்மத காதல் விஷயங்களை சொல்வதும் அதைக் கேட்டு ரவி மரியாவும், நண்பர்களும் ஜொள்ளு விடுவதும் டபுள் மீனிங்கில் மூழ்கி ரசிகர்கள் அரங்கை சிரிப்பலையில் கலங்கடிப்பதும் முதல் பாதி படத்தை கலகலப்பாக கொண்டு செல்கிறது.
இரண்டாம் பாதி முழுவதுமே த்ரிகுண், ஸ்ரீ ஜீத்தா, ராதா, இனியா ஆகியோருக்கு இடையில் காமத் தீயை மூட்டிவிட்டு அதில் குளிர்காய்ந்திருக்கிறார் இயக்குனர் ராஜசேகர் ஜி.

ஹீரோ த்ரிகுண் உடம்பு முழுவதும் மச்சக்காரன். ஒன்றுக்கு மூன்று என்று ஸ்ரீ ஜீத்தா கோஷ். ராதா, இனியா என காமலீலைகளை கட்டவிழ்த்து விட்டு காமரசம் குடிக்கிறார்.

யாருக்கும் சளைத்தவள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆடை குறைப்பு செய்து கிக் ஏற்றுகிறார். ஸ்ரீ ஜீத்தா கோஷ் .
சுந்தரா ட்ராவல்ஸ் ராதா, இனியா இருவரையும் நீண்ட நாட்களுக்குப் பிறகு படத்தில் பார்க்கப் போகிறோம் எப்படி எல்லாம் சோகமாக நடித்து அழ வைக்க போகிறார்களோ என்று பார்த்தால் பொங்க பொங்க கவர்ச்சி காட்டி இளவட்டங்களை சிதறடித்திருக்கிறார்கள். குறிப்பாக இனியா  காம மோகினியாகவே மாறிவிட்டார். டியூஷன் டீச்சர் ஆக வந்து அவர் அலுங்குவதும் குலுங்குவதும் காமசூத்திரம்.

தம்பி ராமையா , சத்யன் இருவரும் டம்மி ஹஸ்பண்ட்களாக வருகிறார்கள். போதாக்குறைக்கு தெலுங்கு நடிகர் ஆலி தன் பங்குக்கு கியர் போடுகிறார்.

படத்தை கோவை ரமேஷ் தயாரித்திருக்கிறார்

அருணகிரி இசை மேற்கத்திய பாணியில் பரபரக்கிறது

கேமராமேன் சி விஜயஸ்ரீயும்  இனியா ராதா, ஸ்ரீ ஜீத்தா கோஷ் . என மூவரையும் அங்குலும் அங்குலமாக ரசித்து படமாக்கி இருக்கிறார்.

காதல் சரிபட்டு வராது கஜகோல் தான் சரிப்பட்டு வரும் என்று இயக்குனர் ராஜசேகர் ஜி
முடிவு செய்துவிட்டார் போலிருக்கிறது. டபுள் மீனிங் வசனத்தில்  சென்சார் கத்தரியை திணறடித்திருக்கிறார்.

ஸ்வீட்டி நாட்டி கிரேசி – ஒரே டிக்கெட்டில் மூன்று ஷகிலா படம்.

Review By
K Jayachandhiran
trending cinemas now com

Related posts

ச ம க கட்சி தலைவர் சரத்குமார் ஆசிரியர் தின வாழ்த்து

Jai Chandran

Karthi’s Sardar movie shoot that resumed today!!

Jai Chandran

Sai Pallavi Joins Geetha Arts #NC23

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend