Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

தேசிங்கு ராஜா 2 (பட விமர்சனம்)

படம்: தேசிங்கு ராஜா 2
நடிப்பு: விமல், ஜனா, பூஜிதா பொன்னாடா , சிங்கம்புலி, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, வையாபுரி, புகழ், சாம்ஸ், ஆர்வி உதயகுமார், ஹர்ஷிதா, ஜூஹி, லொள்ளு சபா சாமிநாதன், மதுமிதா, மதுரை முத்து, கே பி ஒய் வினோத், முபாரக்,

தயாரிப்பு: பி ரவிச்சந்திரன்

இசை: வித்யாசாகர்

ஒளிப்பதிவு: செல்வா ஆர்

இயக்கம்: எழில்

பி ஆர் ஓ: ஜான்சன்

விமல் ஒரு ஏரியாவுக்கும், புகழ் இன்னொரு ஏரியாவுக்கும் போலீஸ் அதிகாரிகளாக இருக்கிறார்கள். புகழ் ஏரியாவில் மார்க்கெட் ரவுடி தலை வெட்டி கொல்லப்படுகிறார். அந்த தலை விமல் இருக்கும் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து வைக்கப்படுகிறது. திடீரென்று அந்த தலை காணாமல் போகிறது. காணாமல் போன தலையை கண்டுபிடிக்க போலீஸ் படை அமைக்கப்படுகிறது. இதற்கிகடையில் போலீஸ் உயர் அதிகாரியாக பூஜிதா நியமிக்கப்பட்டு அனுப்பப்படுகிறார். அவர் ரவுடி தலையை தேடும் பணியில் ஈடுபடும்போது பல்வேறு சம்பவங்கள் நடக்கின்றன. இதற்கிடையில் மந்திரி ஒருவரின் அராஜகமும் தொடங்குகிறது. இந்த இடியாப்ப சிக்கலில் இருந்து போலீஸ் எப்படி மீள்கிறது. காணாமல் போன தலை கிடைத்ததா? என்பதற்கு கிளைமாக்ஸ் கலகலப்புடன் பதில் சொல்கிறது.

இயக்குனர் எழில் ஏற்கனவே தேசிங்கு ராஜா, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் காமெடி படங்களை தந்தவர். அதே பாணியில் அதாவது சிரிப்பை அரங்கு முழுவதும் நிரப்பும் ஒரு கலகலப்பான படத்தை தேசிங்கு ராஜா 2 பெயரில் இயக்கி அளித்திருக்கிறார்.
இப்படத்தை பார்ப்பதற்கு முன்பு இதில் நடித்திருக்கும் நட்சத்திர பட்டியலை பார்த்தாலே குபீர் சிரிப்பு வந்துவிடும். அந்த அளவுக்கு காமெடி நடிகர்களின் பட்டியல் மளிகை பட்டியல் போல் நீண்டு கொண்டே செல்கிறது. எப்படி எல்லாம் முடியுமோ அப்படி எல்லாம் அந்தர்பல்டி அடித்து ரசிகர்களை காமெடி நடிகர்கள் கூட்டம் சிரிக்க வைக்கிறது.
மீண்டும் ஒருமுறை அந்த காமெடி நடிகர்கள் பட்டியலை பார்ப்போம். சிங்கம்புலி, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, வையாபுரி, புகழ், சாம்ஸ், லொள்ளு சபா சாமிநாதன், மதுமிதா, மதுரை முத்து இவர்களுடன் சேர்ந்து ஹீரோ விமல் தன் பாணியில் பஞ்ச் டயலாக் அடித்து காமெடி செய்கிறார்.
இந்த கதையில் இன்னொரு சஸ்பென்ஸ் என்னவென்றால் விமலுக்கு மேலதிகாரி வரும் பூஜிதா ஏற்கனவே விமலின் மாஜி காதலி ஆவார். அவர்கள் எப்படி காதகர்கள் ஆனார்கள் என்பதை மட்டும் இங்கே சஸ்பென்சாக விடுவோம் படத்தில் பார்த்துக் கொள்ளுங்கள்.
மனிதன் படத்தில் ரஜினி ஸ்டைலில் சட்டைகளில் பந்துக்களை குண்டு போல் குத்திக் கொண்டு வரும் மொட்டை ராஜேந்திரன் குண்டு வீசி போலீஸ் நிலையத்தை தகர்க்க போகிறார் என்று பார்த்தால் திடீரென்று சமையல்காரனாக மாறி பிரியாணி செய்வது, பெண் வேடம் அணிந்து போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் புகழ் சாம்சுடன் இணைந்து அடிக்கும் லூட்டியும், ஏமாளித்தனமான சேட்டைகளும் இன்னொரு பக்கம் காமெடி கடையை விரிகிறது.

புல்லட் நிரப்பி துப்பாக்கி எடுத்து வர சொன்னால் புல்லட் வண்டியில் பெட்ரோல் நிரப்பி கொண்டு செல்லும் லொள்ளு சபா, விமல், மற்றும் புகழ் அணியில் இருக்கும் போலீஸ் செய்யும் முட்டாள்தனமான காமெடி சேட்டைகளை பார்த்து போலீஸ் நாய்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டு கமெண்ட் அடிப்பதும் சிரிப்பு தோரணம் கட்டுகிறது. இப்படியே இந்த காமெடி பட்டியல் தொடக்கம் முதல் கிளைமாக்ஸ் வரை நீடிக்கிறது..

 

கவர்ச்சி கன்னியுடன் விமல் ஆடும் டேஞ்சர் பாடல் இளவட்டங்களுக்கு கவர்ச்சி விருந்து.

சத்யா என்ற ரவுடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நெடு நெடு உயர நடிகர் புதுமுகம் ஜனா சண்டைக் காட்சியில் அசத்தியிருக்கிறார், ஹைட்டாக இருந்தாலும் நடனக் காட்சியில் நல்ல அசைவுகள் கொடுத்து  யார் இந்த புதுமுகம் என்று திரும்பிப் பார்க்க வைக்கிறார்.

இப்படத்தை பி ரவிச்சந்திரன் தயாரித்திருக்கிறார்

நீண்ட வருடங்களுக்கு பிறகு இசையமைப்பாளர் வித்யாசாகர் இயக்குனர் எழிலுடன் கைகோர்த்திருக்கிறார். தனக்கே உரித்தான மெலோடி மற்றும் தனது பாணிக்கு மாறுபட்டு குத்து பாட்டையும் தந்து அசத்தியிருக்கிறார்.

செல்வா ஆர் ஒளிப்பதிவு பளிச்.. பளிச்…

கலகலப்பு என்ற புதிய ஜர்னரில் படங்களை வரிசையாக தந்து கொண்டிருக்கும் இயக்குனர் எழில் இந்தப் படத்தையும் அதேபாணியில் காமெடி படமாக இயக்கி இருக்கிறார்.

தேசிங்கு ராஜா 2 – ஜாலியா வாங்க ஜாலியா போங்க..

By

ஜெயச்சந்திரன் கே.

Trendingcinemasnow.com

Related posts

VikrantRona Rights Bagged by TSeries and LahariMusic

Jai Chandran

Pavan Kumar Present Historical Film “Bharthavarsha”

Jai Chandran

KALIYUGAM to Release Worldwide on May 9th

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend