Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

’இந்தியன் 2’ ஷுட்டிங் விபத்து : இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ 4 கோடி..

’இந்தியன் 2’ ஷுட்டிங் விபத்து : இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ 4 கோடி..

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கும் படம் இந்தியன் 2.  இதன் படப்பிடிப்பு சென்னை ஈவிபி ஸ்டுடியோவில் சில மாதத் துக்கு முன் நடந்தபோது பெரிய கிரேன் திடீரென அறுந்து விழுந்ததில் 4 பேர் பலியானார்கள்.
இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

விபத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு  வழங்கும் நிகழ்ச்சி பெப்ஸிஅலுவலகத்தில் இன்று மாலை நடந்தது.
பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தலைமை தாங்கினார்.

இதில் கமல்ஹாசன், ஷங்கர், லைகா பட நிர்வாகி ஆகியோர் கலந்து கொண்டனர். விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணஉதவி வழங்கப்பட்டது.
இது குறித்து பெப்சி வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தியன் 2 படப்பிடிப்பில் மரணம் அடைந்த தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு 4 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது. கமல் ஹாசன், ஷங்கர் ஆர்.கே. செல்வமணி ஆகியோர் இணைந்து வழங்கினார்கள்.
இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்தில் மரண மடைந்த 3 குடும்பங்க ளுக்கும் மற்றும் விபத்துக் குள்ளாகிய தொழிலாளி குடும்பத்துக்கும் நிவாரணம் வழங்கப்பட்டது. தயாரிப்பு உதவி நிர்வாகிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் எஸ்.ஆர். சந்திரன் மனைவி ராதா,  மதுவின் தந்தை மால கொண்டையா, உதவி இயக்குனர் கிருஷ்ணாவின் மனைவி அமுதா, லைட்மேன் ராமராஜன் சகோதரி பெற்றுக் கொண்டார்கள்.
 மேற்கண்ட நிவாரணத் தொகையை லைகா புரொடக்ஷன் 2 கோடி ரூபாயும், கமல்ஹாசன், ஷங்கர் இணைந்து தலா ஒரு கோடி ரூபாய் வீதம் வழங்கினார்கள். பெப்ஸி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தென்னிந்திய திரைப்பட தொழிலா ளர்கள் சம்மேளனம் தலைவர் ஆர். கே.செல்வமணி, பொதுச் செயலாளர் சண்முகம், பொருளாளர் பி.என். சுவாமிநாதன் மற்றும் இணைச் செயலா ளர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் கலந்து கொண் டனர்.
இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

Related posts

நடிகை தூத்துக்குடி கார்த்திகா ரீ என்ட்ரி

Jai Chandran

கடத்தல் பட விழாவில் விஜய் பற்றி கே.ராஜன், பேரரசு பரபரப்பு

Jai Chandran

சிங்கப்பூர் சலூன்’ பட டிரெய்லர் : இளைஞர்கள் வரவேற்பு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend