Trending Cinemas Now
Uncategorized

மிஸ் யூ (பட விமர்சனம்)

படம்; மிஸ் யூ

நடிப்பு: சித்தார்த், கருணாகரன், பால சரவணன், மாறன், ஆஷிகா

தயாரிப்பு: சாமுவேல் மேத்யூ

இசை: ஜிப்ரான்

ஒளிப்பதிவு: கே. ஜி.வெங்கடேஷ்

இயக்கம்: ராஜசேகர்  என்

பி ஆர் ஓ: ஜான்சன்

பட இயக்குனருக்காக வாய்ப்பு தேடி அலையும் சித்தார்த் திடீரென்று விபத்தில் சிக்குகிறார். அவரை மருத்துவமனையில் சேர்க்கும்போது தலையில் அடிபட்டதால் குறிப்பிட்ட சில நினைவுகளை மறந்து விட்டதாக டாக்டர் கூறுகிறார். காயங்களில் இருந்து மீண்ட சித்தார்த் தனக்கு நண்பராக பழக்கமாகும் கருணாகரன் உடன் பெங்களூர் செல்கிறார். அங்கு ஒரு பெண்ணை சந்திக்கிறார். கண்டதும் காதல் கொண்டு அவரையே தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி  தன் அம்மாவிடம் கூறுகிறார் சித்தார்த். அந்தப் பெண்ணின் புகைப்படத்தை கண்டதும் சித்தார்த் தாய் அதிர்ச்சி அடைகிறார்.  அதற்கு என்ன காரணம்,  இவர்கள் திருமணத்துக்கு என்ன தடையாக இருக்கிறது என்பதுதான் கதை.

படத்தில் ஒரேயோரு சஸ்பென்சை வைத்துக்கொண்டு காட்சிகளை  சுற்றி சுற்றி இயக்கி இருக்கிறார் இயக்குனர் ராஜசேகர் என்.

சித்தார்த் இப்படத்தில் காதலனாக நடிக்கிறார் என்று புரமோஷனில்  சொல்லி வந்த நிலையில் நல்ல வேளையாக  ரொமான்ஸ் வேலையை பெரிதாக  செய்யாமல் மெச்சூர்டான  பாத்திரத்தில்தான் அவரை நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.

சித்தார்த்தை பொறுத்தவரை  வசனங்களை நன்றாக பேசுகிறார் ஆனால் அதற்கேற்ற உடல் மொழி முகபாவம் தருவதில் கோட்டை விடுவார் அதைத்தான் இந்த படத்திலும் செய்திருக்கிறார். வசனம் எல்லாம் நன்றாகத்தான் பேசுகிறார் ஆனால் கதாபாத்திரத்திற்கு உள்ளே சென்று அந்த பாத்திரமாக அவரால் மாற முடியவில்லையோ என்றுதான் தோன்றுகிறது.

ரயில் நிலையத்தில் காதல் தோல்வியில் அமர்ந்திருக்கும் கருணாகரன் அருகே சென்று அவருக்கு சில ஐடியாக்கள் கொடுத்து உடனடி நண்பனாக சித்தார்த் மாறுவது உண்மையிலேயே இப்படிக் கூட நண்பர்கள் கிடைப்பார்களா என்ற சந்தேகத்தை கிளப்பி விடுகிறார்கள்.

பெங்களூரில் சித்தார்த், கருணாகரன் இருக்கும் காபி ஷாப்பிற்கு வரும் ஆஷிகாவை சித்தார்த் சைலண்டாக சைட் அடிப்பதும் அவரிடம் சென்று திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்பபது ஓல்ட் ஸ்டைல் தான் ஆனால் ரசிக்க முடிகிறது.

சித்தார்த் உடன் வரும் கருணாகரன், பால சரவணன், மாறன் மூவருக்கும் அளந்து அளந்து  காட்சிகளை கொடுத்திருப்பதால் அவர்கள் ஒரு எல்லைக்கு மேல் காமெடி செய்ய முடியாமல் திணறுகின்றனர். வசன காமெடியை விட ஆக்சன் காமெடிகள் தான் இப்போது எடுபடுகிறது. அதற்கு இந்த படத்தில் வாய்ப்பு இலலை.

சித்தார்த் விபத்தில் சிலவற்றை மறந்து விட்டதாக  காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தாலும் அதில் இரண்டு வருட மறதி என்கிறார்கள் ஆனால் ஒரு வருடத்திற்கு முன் தயாரிப்பாளரிடம் கதை சொன்னதாக சித்தார்த் ஒரு காட்சியில் கூறுகிறார், சண்டைக் காட்சியில் வேகம் இருந்தாலும் சில லாஜிக் மிஸ்டேக் உறுத்துகிறது.

கதாநாயகி ஆஷிகா தொடக்க காட்சிகளில் ஏதோ புரட்சிகரமாக ஒரு பாத்திரம்  செய்வதுபோல் பாவ்லா காட்டுகிறார் கடைசியில் ஒரு குடும்பப் பெண்ணாக அடங்கி விடுகிறார்.

சாமுவேல் மேத்யூ படத்தை தயாரித்திருக்கிறார்.

ராஜசேகர். என் 90ஸ் காலகட்ட பாணியில் ஒரு காதல் கதையை சஸ்பென்ஸ் முலாம் பூசி தந்திருக்கிறார்.

ஜிப்ரான் இசையில் திரையில் பாடல்களை ரசிக்க முடிகிறது.

கே ஜி வெங்கடேஷ் ஒளிப்பதிவு பளபளக்கிறது.

மிஸ் யூ – பொழுது போகும்.

 

 

 

 

 

 

Related posts

Singer Velmurugan Corona Awareness Song

Jai Chandran

Jai Chandran

”பூர்ணா ஒரு நடிப்புப் பேய்” – இயக்குநர் ஆதித்யா பரபரப்பு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend