Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகை கீர்த்தி சுரேஷ் திடீர் திருமணம்

நடிகை கீர்த்தி சுரேஷ் – அந்தோனி தட்டில் திருமணம் இன்று இனிதே நடைபெற்றது

ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்தில் அவரது தங்கை நடித்தவர் கீர்த்தி சுரேஷ். விஜய்யுடன் பைரவா,  சர்க்கார் படங்களில் நடித்திருப்பதுடன், ரஜினி முருகன், ரெமோ, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் மற்றும் தெலுங்கு மலையாள படங்களில் நடித்திருக்கிறார்.

தெலுங்கில் சாவித்திரியின் வாழ்க்கை படமான மகாநடி  படத்தில் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் தேசிய விருதும் பெற்றார். சமீபகாலமாக கீர்த்தி சுரேஷ் பற்றி பல்வேறு கிசுகிசுக்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன.  ஆண்டனி தட்டில் என்பவரை கீர்த்தி சுரேஷ் காதலிப்பதாக  ஒரு தகவல் வேகமாக பரவி வந்த நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதத்தில் கீர்த்தி சுரேஷ் அவரது படத்தை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டார். 14 வருடமாக இருவரும் காதலித்து வந்தனர்.

இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல் பரவி வந்த நிலையில் தடாலடியாக  இருவரின் திருமணமும் இன்று நடந்து முடிந்திருக்கிறது.

நடிகை கீர்த்தி சுரேஷ் – அந்தோனி தட்டில் திருமணம் (12-12-2024, வியாழக்கிழமை) இன்று கோவாவில் குடும்பமும், திரையுலக நெருங்கிய நண்பர்களும் சூழ இனிதே நடைப்பெற்றது. சரியாக காலை 9.40க்கு மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டினார்.

திருமணத்துக்கு பிறகு கீர்த்தி சுரேஷ் நடிப்பாரா மாட்டாரா என்ற கேள்விகள் இருந்தாலும் அவர் ஏற்கனவே ஒப்புக்கொண்டிருக்கும் படங்களில் நடிக்க வேண்டியிருக்கிறது. எனவே கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து நடிப்பார் என்று கூறப்படுகிறது.

 

Related posts

ஸ்பைடர் மேன் அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ் ( பட விமர்சனம்)

Jai Chandran

ராஜா கிளி (பட விமர்சனம்)

Jai Chandran

‘Ninaivellam Neeyada’ First Look unveiled by Gautham Menon

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend