வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி தமிழக சட்ட மன்ற தேர்தல் நடக்கிறது. இதில் திமுக, அதிமுக, மநீம, அமமுக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக மற்றும் மக்கள் நிதி கட்சி ஆகியவை தொகுதி பங்கீடு சுமூக முடிவு ஏற்படாததால் அக்கூட்டணி யிலிருந்து விலகியது. தேமுதி தற்போது டிடிவி தினகரனின் அம்முக வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட ஆலோசித்து வருகிறது.
அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தொகுதி கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதித் தமிழர் பேரவை ஆகிய கட்சிகள் உள்ளன. இதில் மதிமுக கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட் டுள்ளன.
சாத்தூர், கோவை வடக்கு, மதுரை தெற்கு, வாசுதேவ நல்லூர், மதுராந்தகம், அரியலூர் ஆகிய தொகுதி களில் மதிமுக போட்டியிடு கிறது.
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 3 தொகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி கடையநல்லூர், வாணியம்பாடி, சிதம்பரம் ஆகிய 3 தொகுதிகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி திமுக சார்பில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
previous post