தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்தி ருக்கிறார், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள னர். அனிரூத் இசை அமைத் திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இப்படம் ஓடிடி நெட்பிளிக்ஸ் தளத்தில் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று நேற்று இரவு முதல் பரபரப்பான தகவல் வலம் வந்துக்கொண்டி ருந்தது. இது தியேட்டர் அதிபர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவர்கள் தரப்பில் மாஸ்டர் படத்தை தியேட் டரில் வெளியிட தயாரிப்பா ளர்களிடம் பேசினர். இதை யடுத்து மாஸ்டர் தியேட்டரில் வெளியாகும் என்று பட தரப்பு அறிவித்துள்ளது.
அவர்கள் இன்று வெளியிட்ட அறிக்கை யில் கூறியதாவது:
கொரோனா தொற்று போராட் டம் இன்னும் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. எல்லோ ரும் நலமாக, பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று எண்ணு கிறோம், மாஸ்டர் படத்தை தியேட்டரில் வெளியிட்டு கொண்டாட வேண்டும் என்ற ரசிகர்களின் உணர்வை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. நாங்கள் அந்த பெரிய நாளுக்காக காத்திருக் கிறோம். அதற்காக நாங்கள் என்ன செய்யமுடியுமோ அதை செய்கிறோம், சில நாட்களாக மாஸ்டர் ஒடிடியில் வெளியாகிறது என்ற வதந்தி பரவி வருகிறது. அதுபற்றி தெளிவுபடுத்த விரும்புகி றோம்.
ஒடிடி தளத்தில் மாஸ்டர் படத்தை வெளியிட வாய்ப்பு கள் வருகின்றன. ஆனால் நாங்கள் தியேட்டரில் ரிலீஸ் செய்வதையே தேர்வு செய்தி ருக்கிறோம். திரையுலகின் இந்த இக்கட்டான நேரத்தில் இது அவசிய தேவையாக இருக்கிறது. தமிழ் திரையுல கை புதுப்பிக்க தியேட்டர் அதிபர்களும் எங்களுடன் உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். நல்ல தகவ லுடன் உங்களை விரைவில் சந்திக்கிறோம். பாதுகாப்பாக இருங்கள்.
இவ்வாறு மாஸ்டர் பட நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாஸ்டர் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என்று தயாரிப்பாளர் அறிவித்ததையடுத்து தியேட்டர் அதிபர்கள் சங்கம் ந்ன்றி தெரிவித்திருக்கிறது.