சின்னத்திரை நடிகர்கள் சங்கத் தின் அவசர செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில் நடிகரும் திரைப்பட இயக்குனருமான மனோ பாலா ஏகமனதாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை சங்க வெளி யிட்டுள்ள செய்தியில் கூறி உள்ளது. இச்சங்கத்தின் பொதுச் செயலாளராக ரிஷி, பொருளாளராக ஜெயந்த் உள்ளனர்.
ஏற்கனவே தலைவர் பதவியில் இருந்து வந்த ரவிவர்மா என்பவர் மீது புகார்கள் வந்ததையடுத்து அவர் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாகத்தான் நடிகர் மனோ பாலா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். சின்னத்திரை சங்க தலைவராக மனோ பாலா தேர்வானதற்கு அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின் றனர்.
ரஜினிகாந்த் நடித்த படம் உள்ளிட்ட முக்கிய படங்களை இயக்கி யவர். ரஜினிகாந்த், ராதிகா நடித்த ஊர்க்காவலன் என்ற படத்தை 1987ம் ஆண்டு இயக்கி னார் மனோபாலா மேலும் விஜயகாந்த், சுஷாசினி நடித்த என் புருஷந்தான் எனக்கு மட்டும்தான் படத்தை 1989ம் ஆண்டு இயக்கினர். மேலும் தென்றல் சுடும், மல்லு வேட்டி மைனர் உள்ளிட்ட சுமார் 20 படங்கள் இயக்கி இருக்கிறார். புன்னகை, 777, மாயா போன்ற டிவி சீரியல்கலும் இவர் நடித்திருக்கிறார். திரைப்படங்களில் காமெடி நடிகராக சுமார் 100 படங்களில் நடித்துள்ளதுடன் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக காமெடி வேடங்களில் நடித்து வருகிறார்.