வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். ஏற்கனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. பொங்கல் தினமான இன்று படத்திலிருந்து வித்தியாசமான மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.
தொண்டர்கள் கொடிஏந்தி கோஷம் போட்டுக்கொண்டிருக்க அரசியல் மாநாடு ஒன்றில் துப்பாக்கியுடன் நிற்கும் சிம்பு திடீரென்று துப்பாக்கி குண்டு வெடித்து நெருப்பு பொறி பறக்க வைக்கிறார் பிறகு கூட்டத்தின் நடுவே கம்பீரமாக உயர்ந்து நிற்பகிறார்.