Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அருண் விஜய் AV 31 திரைப்பட டப்பிங் பணிகள் துவக்கம்

இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் திரைவாழ்வில், மிக முக்கியமான திரைப்படமாக உருவாகி வரும் AV31 படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக முடிந்த நிலையில், டப்பிங் பணிகள் இன்று காலை, சென்னையில் மிக எளிமையான பூஜையுடன் துவங்கப்பட்டது.

அருண் விஜய் மற்றும் அறிவழகன் கூட்டணியில் வெளிவந்த மெடிக்கல் திரில்லரான “குற்றம் 23” மிகப்பெரும் வெற்றியை பெற்றது. இந்த நிலையில் இவர்கள் கூட்டணியில் AV31 அறிவிக்கப்பட்ட நொடியிலிருந்தே, படம் என்னவாக இருக்குமன்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பன்மடங்கு எகிறியுள்ளது.

படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு, படத்தின் இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் படத்தினை வரும் கோடை காலத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீஸர், ட்ரெய்லர், இசை மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அறிவிக்கப்படும்.

All in Pictures சார்பில் ராகவேந்திரா தயாரித்திருக்கும் இப்படம் உளவு சம்பந்தமான திரில்லர் படமாக உருவாகியுள்ளது. ரெஜினா கஸண்ட்ரா நாயகியாக நடிக்க, ஸ்டெஃபி படேல் மற்றும் பகவதி பெருமாள் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சாம் CS இசையமைத்துள்ளார். பி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாபு ஜோசப் படத்தொகுப்பு பணிகளை செய்துள்ளார்.

2021 வருடத்தில் அருண் விஜய் சினம், அக்னி சிறகுகள், AV32 ( சூர்யாவின் 2D Entertainment தயாரிப்பில் ), என எதிர்பார்ப்பு மிக்க முக்கிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் சில முக்கியமான படங்களின் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

Related posts

ஆர். கண்ணனின் இவன் தந்திரன் 2ம் பாகம் தொடக்கம்

Jai Chandran

வெங்கட் பிரபு என் கதையை எழுதி படமாக்கி இருக்கிறார்’ – இயக்குனர் சசிதரன் புகார்

Jai Chandran

Now Sing along with “OduOduAadu.”

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend