Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மக்கள் நீதி ம‌ய்ய மகளிர் சாதனையாளர்கள் விருது 2022 பரிந்துரைக்கு வரவேற்பு

மக்கள் நீதி ம‌ய்ய மகளிர் சாதனையாளர்கள் விருது 2022  பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன  இதுகுறித்து கட்சி துணைதலைவர் ஆர். தங்கவேலு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

அனைவருக்கும் வணக்கம்,

இந்த சமூகம் ஆண் பெண் என்ற இருபாலராலும் கட்டமைக்கப்பட்ட ஒன்று. ஆனால் என்ன காரணத்தாலோ உலகம் முழுக்க பெண்கள் இரண்டாம்தர இனமாகவே பார்க்கப்பட்டுள்ளனர். இருந்தாலும் ஒடுக்கப்பட்ட அந்த சமூகத்திலிருந்து அத்தனை தடைகளையும் உடைத்து மாதர் பலர் சாதித்துள்ளனர். அப்படி சாதித்தவர்களை வாழ்த்துவதும் பாராட்டுவதும் நம் தலைவர் நம்மவருக்கும், நமது மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் வழக்கமான ஒரு செயலாகும்.

அந்த வகையில் நம் தமிழகத்தில் பல்வேறு பணிகளில், தன் முத்திரையை பதித்த மற்றும் சமூகப்பணிகளில் சாதித்த, துப்புரவு பணி, மருத்துவம் மற்றும் ஓட்டுநர் பணிகளில் ஈடுபட்ட மகளிரை கொண்டாடும் வண்ணம் நமது மக்கள் நீதி மய்யம் கட்சி 2022ஆம் ஆண்டுக்கான விருதை வழங்கி கவுரவிக்க விரும்புகிறது. எனவே சாதித்த பெண்மணிகள் பற்றிய பரிந்துரைகளை மய்யம் வரவேற்கிறது.

தேர்வு செய்யப்பட்ட சாதனைப் பெண்மணிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு, விருதுகள் தலைவர். நம்மவர் திரு.கமல் ஹாசன் அவர்களால் வழங்கப்படும்.

தகுதியானவர்களை அடையாளம் காட்ட விரும்புபவர்கள்
விண்ணப்பம் அனுப்ப கீழ்க்கண்ட இணைப்பை ‘கிளிக்’ செய்யவும்.

http://maiam.com/waa2022

இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு:-
திருமதி.பிரகாஷினி சிவநேசன் – 8667629939

பல சோதனைகளைக் கடந்து சாதனைகளைப் புரிந்துவரும் மகளிர் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்.

இவ்வாறு ஆர்..தங்கவேலு, கூறியுள்ளார்.

Related posts

வடமாநிலங்களில் விக்ரமின் தங்கலான் கொண்டாட்டம்

Jai Chandran

பூதமாக நின்ற முனீஸ்காந்த்; தொடர் 72 மணி நேரப் படப்பிடிப்பு..

Jai Chandran

பொருளாதார நெருக்கடி, இலங்கையில் மக்கள் போராட்டம் வெடித்தது: பிரதமர் ராஜினாமா?

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend