Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சென்னை ஐ ஐ டியில் மக்களிசை கலைநிகழ்ச்சி

நீலம் பண்பாட்டு மையம் முன்னெடுத்த மார்கழியில் மக்களிசை கலை நிகழ்ச்சி பெரும் மக்கள் கொண்டாட்டத்துடன் நான்காவது நாளாக சென்னை ஐஐடி-யில் பெரும் பறையிசை மற்றும் ஒப்பாரி பாடலுடன் தொடங்கியது . மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக இயக்குனர் பா.ரஞ்சித் , இயக்குனர் அதியன் ஆதிரை ,தோழர் திருமுருகன் காந்தி ,தோழர் செல்வா மற்றும் இசையமைப்பாளர் சாம் ரோல்டன் ஆகியோர் கலந்துக்கொண்டு மக்களோடு மக்களிசையை கொண்டாடினர். மேலும் இசையமைப்பாளர் சாம் ரோல்டன் அவர்கள் “உலக இசையில் பறையிசை மிக முக்கியமானது மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித் எழுச்சிக்கான ஒரு மாபெரும் முயற்சியை எடுத்துள்ளார்” என்று நிகழ்ச்சியை சிறப்பித்து கூறினார் பின்பு பேசிய இயக்குனர் அதியன் ஆதிரை “கிராமப்புற வாழ்வியலை மக்களிசையோடு தொடர்ப்பு படுத்தியது பெரும் வரவேற்பை பெற்றது” என்று வாழ்த்து கூறினார். நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட தோழர் செல்வா அவர்கள் “உரிமைக்கான முழக்கம் இந்த பண்பாட்டு தளத்தில் ஒலிக்கிறது” என்று மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியில் மகிழ்ச்சியோடு கூறினார். நிகழ்ச்சியின் முடிவில் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித் இசைக் கலைஞர்களை பற்றி “நாம் எழுத வேண்டும் என்றும் இம்மக்களிசையை நாம் மிகவும் முக்கியமாக ஆவண படுத்த வேண்டும் என்றும் கூறி நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மக்களிசை கலைஞர்களுக்கும் சிறப்பு அழைப்பாளர்கள் விருது கொடுத்து கௌரவித்தனர்.

 

Related posts

தமிழில் ரீமேக் ஆகிறது ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’: கே.எஸ்.ரவிகுமார் தயாரித்து நடிக்கிறார்

Jai Chandran

சர்வதேச தரத்தில் மிராய் படம்: தேஜா சஜ்ஜா பேட்டி

Jai Chandran

ஹனு மான் படத்துக்காக “அஞ்சனாத்ரி” என்ற புதிய உலகம்: ஹீரோ தேஜா தகவல்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend