Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

குற்றவாளிகளை களையெடுக்கும்    ” மெய்ப்பட செய் ” 

எஸ் ஆர்.ஹர்ஷித் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக. பி ஆர்.டி. என்கிற தமிழ் செல்வம் தயாரித்துள்ள திரைப்படம்   ” மெய்ப்பட செய்”  

இந்த படத்தில் ஆதவ் பாலாஜி, மதுநிக்கா, பி.ஆர். தமிழ்செல்வம், ஆடுகளம் ஜெயபாலன், ராஜ்கபூர், ஒ ஏ.கே. சுந்தர், ஞானபிரகாசம்,  சிவா, அட்டு முத்து சூப்பர் குட் சுப்பிரமணி, விஜய கணேஷ் பயில்வான் ரங்க நாதன், ராகுல் தாத்தா பெஞ்சமின், அனீஸ், எமில் கணபதி,  ராகவமூர்த்தி, லயன் வி.எஸ்.  திண்டுக்கல் தனம்,  காஞ்சனா, தீபா, யமுனா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஆர்.வேல்  ஒளிப்பதிவு செய்துள்ளார்.  ” பார்வை ஒன்றே போதும் ”  புகழ் பரணி நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்திற்கு  இசை அமைத்துள் ளார். பாடல்களை உமாதேவி, பரணி, வேலன் ஆகியோர் எழுதியுள்ளனர். மிருதன்  பட புகழ் கே.ஜெ.வெங்கட் ரமணன் இப்படத்திற்கு படத்தொகுப்பு செய்துள்ளார். அனைவரும் பிரம்மிக்கும் விதத்தில் மிரட்டல் செல்வா சண்டைக் காட்சிகளை அமைத்து உள்ளார்.  அனைத்து பாடல்களையும் ரசிக்கும் விதத்தில் நடனம் அமைத்துள்ளார் தீனா. 

இந்த படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் வேலன். 

படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது :

இத்திரைப்படம் சுயநலத்திற்காக பல பாவங்களைச் செய்து அதிகாரத்தை யும் சட்டத்தில் இருக்கும் ஓட்டை களையும் பயன்படுத்தி மக்களோடு மக்களாக கலந்திருக்கும் குற்றவாளி களுக்கு ஒரு பாடமாகவும் பொது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் ஒரு படமாகவும் இத்திரைப்படம் அமைந்துள்ளது. மேலும் இதில் நான்கு பாடல் காட்சிகளும் மற்றும்  4 சண்டைக்காட்சிகளும் கதை களத்திற்கு ஏற்றவாறு உருவாக்கப் பட்டுள்ளது. இப்படி ஒரு சமூக சிந்தனையுள்ள கதைக் களத்தை திரைப்படமாக உருவாக்க சிறிதும் தயங்காமல் திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் பி.ஆர்.டிக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

அனைவரும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் படியான ஜனரஞ்சகமான    படமாக இதை உருவாக்கியுள்ளோம்.  திரைப்படத்தை  மிக விரைவில் வெள்ளித்திரையில் வெளியாக உள்ளது என்றார்.

Related posts

விக்னேஷ் கார்த்திக்கின் அடுத்து புதிய படம் “ஹாட்ஸ்பாட்”

Jai Chandran

டி எம் ஜே ஏ உறுப்பினர்களுக்கு வெற்றிமாறன் இன்சூரன்ஸ் அட்டை வழங்கினார்

Jai Chandran

‘துணிவு’ படத்தை ரசிகர்களுடன் பார்க்க மஞ்சு வாரியர் விருப்பம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend