Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

குடிமகான் (பட விமர்சனம்)

படம்: குடிமகான்

நடிப்பு: விஜய் சிவன், சாந்தினி, சுரேஷ் சக்ரவர்த்தி, சேதுராமன், நமோ நாராயணன், கதிரவன், ஹானஸ்ட் ராஜ்

தயாரிப்பு: எஸ்.சிவகுமார்

இசை: தனுஜ் மேனன்

ஒளிப்பதிவு: மெய்யேந்திரன்

இயக்கம்: பிரகாஷ் என்.

பி ஆர் ஓ: ஏ.ஜான்

வங்கி ஏ டி எம் களில் பணம் நிரப்பும் பணி செய்கிறார் விஜய் சிவன். வழக்கமாக நடக்கும் இப்பணியில் ஒரு குழப்பம் நேர்கிறது. 100 ரூபாய் நோட்டுக்கள் வைப்பதற்கு பதில் 500 ரூபாய் நோட்டுக்கள் வைத்துவிடுகிறார். பணம் லட்சக்கணக்கில் திருடு போகிறது. இதனால் விஜய் சிவன் வேலையும் பறிபோகிறது. இதற்கிடையில் அவருக்கு குளிர்பானம் குடித்தால் போதை யாகும் நோய் ஏற்படுகிறது. திருட்டுபோன பணத்தை மீட்டாரா? பறிபோன வேலை திரும்ப கிடைத்ததா என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.

குடிமகான் என்ற டைட்டிலை குடிமகன் என்றே முதலில் படிக்கத் தோன்றுகிறது. மது குடித்துவிட்டு போதை ஆகிறவர் குடிமகன்,  கூல் ட்ரீங்க்ஸ் குடித்துவிட்டு  போதைக்குள்ளாகுபவர் குடிமகானாம். உண்மையிலேயே இப்படியொரு வியாதி இருப்பதாக கூகுல் ஆதாரம்வேறு காட்டுகி றார்கள்.

விஜய் சிவன்தான் குடிமகான். இரண்டு குழந்தைக்கு தந்தையாக வரும் அவர் எதர்த்தமான நடிப்பில் ஜொலிக்கிறார்.

வீட்டில் மனைவி சாந்தினி கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவிப்பதும் குடிகார தந்தை சுரேஷ் சக்ரவர்த்தியை சீண்டுவதுமாக ஜாலியாக போய்க் கொண்டிருக்கும் அவர் வாழ்க் கையில் திடீரென்று வீசும் பணநஷ்ட விஷயம் கதையையே திருப்பிப் போடுகிறது.

ஏ டி எம் மிலிருந்து கணக்கில் லாமல் பணத்தை எடுத்துச் சென்றவர்கள் ஒவ்வொருவரை  யாக நேரில் சந்தித்து பணத்தை திருப்பி வாங்க விஜய்சிவன் படும்பாடு சிரிப்பு சீன்களாக இயக்குனர் மாறியிருப்பது அருமை. அதுவும் குடிகார சங்க தலைவர் நமோ நாராயணன் என்ட்ரிக்கு பிறகு நான்ஸ்டாப் காமெடிகள் அரங்கேறுகிறது.

பணம் தர முடியாது என்று விரட்டியடிக்கும் ஈவென்ட் மேனேஜர் நடத்தும் திருமண விழாவுக்கு செல்லும் விஜய் சிவன், நமோ நாராயணன் கோஷ்டி கூல்டிரிங்க்சில் பேதி மாத்திரை கலந்து கொடுத்து திருமணத் துக்கு வந்தவர்களை தலை தெறிக்க ஓடவிடுவதும், 8 அடி உயர நெட்டை ரவுடியிடம் செம்ம மாத்து வாங்குவதாகட்டும் , டெலிவரி பாயிடம் பணம் வசூலிக்க நடக்கும் நடுரோட்டு மோதலாகட்டும் சிரித்து சிரித்து வயிறு வலித்து விடுகிறது.

பாக்யராஜ் படங்களில் வரும் ஹீரோ பெண்டாட்டிபோல் பட படவென பேசி நடித்திருக்கிறார் சாந்தினி.

சுரேஷ் சக்ரவர்த்தி கைக்கு கட்டுபோட சென்று அங்கிருக்கும் சீனியர் நர்சை கரெக்ட் செய்வது அடிஷனல் காமெடி சீன்கள்.

மேலும் சேதுராமன், கதிரவன், ஹானஸ்ட் ராஜ் நடித்திருக்கின் றனர்.

எஸ்.சிவகுமார் தயாரித்திருக் கிறார்.

தனுஜ் மேனன் இசை
மெய்யேந்திரன் ஒளிப்பதிவு நார்மல்

கவலை மறந்து சிரிக்க வைப்ப துடன் செய்யும் வேலையில் கவனமாக இருக்க வேண்டும் என்ற மெசேஜ் சொல்லியிருக் கிறார் இயக்குனர் பிரகாஷ் என்.

குடிமகான் – லாஜிக்  இல்லா  காமெடி கலாட்டா.

Related posts

ராங்கி (பட விமர்சனம்)

Jai Chandran

First Look of #N4 #n4tamilfilm

Jai Chandran

Vijay Deverakonda, Puri Jagannadh’s Next Mission Launch

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend