Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

கொலை (பட விமர்சனம்)

படம்: கொலை

நடிப்பு: விஜய் ஆண்டனி, ரித்திகா சிங்,  மீனாட்சி சவுத்ரி, ராதிகா, முரளி ஷர்மா, சித்தார்த் சங்கர், கிஷோர் குமார், ஜான் விஜய், அர்ஜுன் சிதம்பரம், சம்கித் போரா

தயாரிப்பு: இன்பினிட்டி பிலிம்.வெண்சர்ஸ்,  லோட்டஸ் பிக்சர்ஸ்

இசை: கிரீஷ் கோபாலகிருஷ்ணன்

ஒளிப்பதிவு: சிவகுமார்

இயக்கம்: பாலாஜி கே குமார்

பி ஆர் ஓ: சுரேஷ் சந்திரா, நாசர், ரேகா ( D’One)

சிறந்த குரல்வளம் கொண்டவர் என்ற  பட்டம் வென்ற பிரபல பாடகி லைலா (  மீனாட்சி சவுத்ரி) திடீரென்று கொல்லப்படுகிறார். மர்மமான முறையில கொல்லப். பட்ட லைலாவின் வழக்கை விசாரிக்கும் பொறுப்பு ரித்திகா சிங்கிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவர் விசாரணைக்கு உதவ ஓய்வு பெற்ற அதிகாரி விநாயக்கை (விஜய் ஆண்டனி) நாடுகிறார் முதலில் மறுக்கும் அவர் பிறகு ஒப்புக்கொண்டு வருகிறார். லைலாவை கொன்றது யார் என்ற குழப்பம் இறுதி வரை  நீடிக்கிறது. கடைசியில் கொலைகாரன் யார் என்பதை  விநாயக் எப்படி கண்டு பிடிக்கிறார் என்பதற்கு நூலிழையில் விடை கிடைக்கிறது.

கொலை படத்தை பொறுத்தவரை கதை என்பது கொலைகாரன் யார் என்பதை கண்டுபிடிக்கும் சிறிய சஸ்பென்ஸ்தான்.  ஆனால் அந்த மர்மத்தை கிளைமாக்ஸ் வரை இயக்குனர் பாலாஜி கே குமார் கொண்டு சென்றிருக்கும் விதம்தான் இறுதி காட்சி முடியும் வரை அனைவரையும் இருக்கை யில் இப்படி அப்படி அசைய விடாமல்  கட்டிப் போடுகிறது.

விநாயக் என்ற ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக வரும் விஜய் ஆண்டனி ஆர்ப்பாட்டமே இல்லாமல் கொலைக்கான காரணம், கொலைகாரன் யார் என்பதை கண்டுபிடிக்க மேற்கொள்ளும் விசாரணைகள் ஜேம்ஸ்பாண்ட் பாணியில் விறுவிறுப்பாக நகர்கிறது.

மேனேஜர்,  காதலன், மனநிலை.பாதித்த சிறுவன், லைலாவின்  உறவினர், செக்யூரிட்டி இவர்களில் யார் கொலையாளி என்பதை கண்டுபிடிக்க முடியாமல் அமைக்கப்பட்டிருக்கும் திரைக் கதை விறுவிறுப்பை அடுக்கிக். கொண்டே போகிறது.

திறமையான அதிகாரி விஜய் ஆண்டனி மகளுடன் கார் விபத்தில் சிக்கும் காட்சி திக்கென்றாலும் அவர் விபத்தில் சிக்குவதற்கான காரணம் ஒன்றும் முக்கியமாக இல்லை. ரித்திகா சிங் போலீஸ் அதிகாரியாக வந்தாலும் அவருக்கான முக்கியத்துவம்  குறைவுதான்.

லைலாவாக வரும் மீனாட்சி சவுத்ரி.கதாபாத்திரத்துக்கு சரியாக பொருந்தி இருக்கிறார். பார்த்த ஞாபகம் இல்லையோ பாடலில் லிப் மூவ்மெண்ட்ஸ்  பக்காவாக கொடுத்து ஆச்சரியப் படுத்துகிறார்.  கதைக்கு இவரது பாத்திரம்தான் மையப்புள்ளி.  அழகில் இளசுகளின் உள்ளத்தை அள்ளிக்கொண்டு போகிறார்.

எல்லா நடிகர்களும் கொஞ்சமும் ஓவர் ஆக்டிங் இல்லாமல்  நடித்திருக்கும் விதம் கதாபாத் திரங்களை  தக்க வைக்கிறது

இயக்குனர் பாலாஜி கே குமாரின் ஹாலிவுட்  ரேஞ்சிக்கான காட்சி அமைப்பும் அதை ஹாலிவுட் தரத்துக்கு  படமாக்கிlயிருக்கும் ஒளிப்பதிவாளர் சிவகுமாரின் கேமிரா கோணங்களும் லைட்டிங் செய்திருக்கும் விதமும்  முற்றிலும் வித்தியாசம்

நம்மையும் அறியாமல் காட்சியின்  வேகத்துக்கு  ஏற்ப இசையால் ஒன்றச் செய்து ஆவலைத் தூண்டி விடும் கிரீஷ் கோபாலகிருஷ்ணன் பின்னணி  இசை பெரிய பிளஸ்.

கொஞ்சம் தப்பினாலும் கதையே குழம்பிவிடும் அளவுக்கு ரிபீட் காட்சிகள்  இருந்தாலும் அதை கொஞ்சமும் குழப்பாமல் தெளிவாக எடிட்டிங் செய்திருக்கும் ஆர்.கே.செல்வாவின் தொழில்  நேர்த்தி பக்கா.

கொலை படம் புதிய பறவையின் பாதிப்புடன் இயக்கப்பட்டிருப்பது தெள்ளத்  தெளிவு. என்ன ஒரு விஷயமென்றால் கதை சொல்லப்பட்டிருக்கும் பாணி புதிது.

கொலை – ஹாலிவுட் படத்தை தமிழில் பார்த்த உணர்வு.

 

 

Related posts

இருவர் இயக்கத்தில் உருவாகி உள்ள உழைக்கும் கைகள்

Jai Chandran

பாலமுரளி நாத மஹோத்சவ தேசிய விருதுகள்

Jai Chandran

ஆர். கண்ணன் இயக்கத்தில் மீண்டும உருவாகும் காசேதான் கடவுளடா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend